கிருத்திகா உதயநிதி
கிருத்திகா உதயநிதி | |
|---|---|
| பிறப்பு | கிருத்திகா |
| படித்த கல்வி நிறுவனங்கள் | இலயோலாக் கல்லூரி, சென்னை |
| பணி | திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இரெட் செயன்டு மூவிசு ) |
| செயற்பாட்டுக் காலம் | 2011–தற்போதுவரை |
| வாழ்க்கைத் துணை | |
| பிள்ளைகள் | இன்பன், தன்மயா |
| உறவினர்கள் | பார்க்க: கருணாநிதி குடும்பம் |
கிருத்திகா உதயநிதி (Kiruthiga Udhayanidhi), ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார்.[1] இலக்கிய இதழான இன்பாக்ஸ் 1305 இன் ஆசிரியராகவும் செயல்பட்டார்.[2][3][4]
தொழில் வாழ்க்கை
[தொகு]கிருத்திகா வணக்கம் சென்னை என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.[5][6][7] உதயநிதி ஸ்டாலின் தயாரித்த இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடித்தனர். பிப்ரவரி 2017 இல், சந்தோஷ் நாராயணன் இசையில் "சதையை மீறி" [8] என்கிற இசைக் காணொளியை இயக்கினார். இந்தப் படைப்பு திருநர்களின் வலிகளைப் பற்றிப் பேசுகிறது. பின்னர், இவர் காளி (2018)[9][10][11][12][13] திரைப்படத்தையும், 2022 இல் Zee5 க்காக பேப்பர் ராக்கெட் என்கிற வலைத் தொடரையும் இயக்கினார்.[14] அடுத்ததாக, இவர் இயக்கிய காதல் நகைச்சுவைத் திரைப்படமான காதலிக்க நேரமில்லை ஜனவரி 2025ல் வெளியானது.[15]
திருமண வாழ்க்கை
[தொகு]இவர் பிப்ரவரி 25, 2002-இல் உதயநிதி ஸ்டாலினை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும் தன்மயா என்ற மகளும் உள்ளனர்.[16]
திரைப்படங்கள்
[தொகு]| வருடம் | படம் | பங்கு | மூலம் |
|---|---|---|---|
| 2013 | வணக்கம் சென்னை | இயக்குநர் | |
| 2018 | காளி | இயக்குநர் | |
| 2022 | பேப்பர் ராக்கெட் | இயக்குநர் | ஜீ 5 வெப்தொடர் |
| 2024 | காதலிக்க நேரமில்லை | இயக்குநர் | |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "I am more confident as a director now: Kiruthiga Udhayanidhi". The New Indian Express. 20 March 2018. Retrieved 3 September 2021.
- ↑ "Not one to rest on family laurels". The Weekendleader. 4 November 2010. Archived from the original on 2 September 2021. Retrieved 3 September 2021.
- ↑ "Kollywood Director Kiruthiga Udhayanidhi Biography, News, Photos, Videos". nettv4u. Archived from the original on 2 September 2021. Retrieved 2 September 2021.
- ↑ "Inbox 1305 celebrates its first anniversary". The New Indian Express. Archived from the original on 2 September 2021. Retrieved 2 September 2021.
- ↑ "Vanakkam Chennai Movie Review Vanakkam Chennai, வணக்கம் சென்னை விமர்சனம்". behindwoods.com. Archived from the original on 2 September 2021. Retrieved 2 September 2021.
- ↑ "Kiruthiga Udhayanidhi's Kaali: What Works, What Doesn't". 18 May 2018. Archived from the original on 2 September 2021. Retrieved 2 September 2021.
- ↑ "Vijay Antony and Kiruthiga Udhayanidhi team up for Kaali". Hindustan Times. Archived from the original on 29 October 2017. Retrieved 29 October 2017.
- ↑ "Kiruthiga Udhayanidhi Santhosh Narayanan VIvek Sadhayai meeri song about transgenders review". IndiaGlitz. Archived from the original on 29 October 2017. Retrieved 29 October 2017.
- ↑ "Kiruthiga Udhayanidhi to announce her next project soon; deets inside". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 5 May 2021. Archived from the original on 2 September 2021. Retrieved 3 September 2021.
- ↑ "Kiruthiga Udhayanidhi announces new film starring Kalidas Jayaram and Tanya Ravichandran". The NewsMinute. 7 June 2021. Archived from the original on 2 September 2021. Retrieved 3 September 2021.
- ↑ Vishal Menon (21 February 2021). "Kiruthiga Udhayanidhi is back with 'Kaali'". The Hindu. Archived from the original on 2 September 2021. Retrieved 3 September 2021.
- ↑ "Successful female directors of Tamil cinema". Times Now. 28 April 2021. Archived from the original on 2 September 2021. Retrieved 3 September 2021.
- ↑ Anupama Subramanian (25 March 2018). "Life as a woman director is tough: Kiruthiga Udhayanidhi". Deccan Chronicle. Archived from the original on 2 September 2021. Retrieved 3 September 2021.
- ↑ "Jayam Ravi's Kadhalikka Neramillai gets a release date".
- ↑ "Jayam Ravi and Nithya Menen's Kadhalikka Neramillai gets a release date".
- ↑
- "Popular Indian football club signs Tamil Nadu CM Stalin's grandson Inban Udhayanidhi". The New Indian Express. 28 August 2021. Retrieved 3 September 2021.
- "A goal away from politics for Tamil Nadu CM MK Stalin's grandson Inban Udhayanidhi". The Times of India. 27 August 2021. Retrieved 3 September 2021.