உள்ளடக்கத்துக்குச் செல்

காற்று உணர்திறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காற்று உணர்திறன் (Air sensitivity) என்ற சொல் பொதுவாக வேதியியலில் காற்றின் பகுதிப் பொருள்களுடன் வேதிச்சேர்மங்களின் வினைதிறன் பற்றி கூறுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் வினைகள் வளிமண்டல ஆக்சிஜன் (O2) அல்லது நீராவியுடன் (H2O)[1] நடைபெறுகிறது. மேலும் காற்றின் மற்ற பகுதிப்பொருள்களான கார்பன் மோனாக்சைடு (CO), கார்பன் டையாக்சைடு (CO2), நைட்ரஜனும் (N2) வினைபுரிய வாய்ப்புள்ளது.[2]

காற்றில்லா தொழில்நுட்பங்கள்[தொகு]

கையுறைப்பெட்டி

காற்று உணர்திறன் சேர்மங்களை கையாளுவதற்கு காற்றில்லா தொழில்நுட்பங்கள் பயன்படுகிறது. கையுறைப்பெட்டி மற்றும் ஸ்கிளிங்க் வரிகள் (Schlenk lines) என்ற இரண்டு முக்கிய காற்றில்லா தொழில்நுட்பங்கள் உள்ளன.[3] கையுறைப்பெட்டி என்பது ஆர்கான் அல்லது நைட்ரசன் போன்ற மந்த வாயுக்களால் நிரப்பப்பட்ட பெட்டியாகும்.[4] சாதாரண ஆய்வக உபகரணங்கள் கையுறைகளைப் பயன்படுத்தி அமைக்கலாம் மற்றும் கையாளலாம். ஸ்கிளிங்க் வரிகள் என்பது வெற்றிடம் மற்றும் மந்தவாயு இரண்டையும் பயன்படுத்தும் அமைப்பு. தேவைக்கேற்றவாறு அதில் உள்ள கண்ணாடியைப் பயன்படுத்தி வெற்றிடத்தை உருவாக்கவோ அல்லது மந்த வாயுவை நிரப்பவோ முடியும்.[5]

படத் தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Handling and Storage of Air-Sensitive Reagents பரணிடப்பட்டது 2012-09-28 at the வந்தவழி இயந்திரம், Technical Bulletin AL-134, Sigma-Aldrich
  2. Dr. P. Wipf. "Techniques for handling air and moisture sensitivity" (PDF). {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. W. Bouwkamp, Marco (2008). working with air and moisture sensitive compounds. Stratingh Institute for Chemistry, University of Groningen. pp. 4, 6.
  4. Glove Boxes, The Glassware Gallery
  5. "The Glassware Gallery: Schlenk Lines and Vacuum Lines". www.ilpi.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காற்று_உணர்திறன்&oldid=3871278" இலிருந்து மீள்விக்கப்பட்டது