உள்ளடக்கத்துக்குச் செல்

காயா கால்லாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கயா கேலசு
Kaja Kallas
கேலசின் அதிகாரப்பூர்வப் புகைப்படம், 2021
எசுத்தோனியாவின் 19 ஆவது பிரதம மந்திரி
பதவியில் உள்ளார்
பதவியில்
26 சனவரி 2021
குடியரசுத் தலைவர்
முன்னையவர்இயூரி ரட்டாசு
சீர்திருத்தக் கட்சியின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
14 ஏப்ரல் 2018
முன்னையவர்அன்னோ பெவ்கூர்
இரிகிகோகு உறுப்பினர்
பதவியில்
3 மார்ச்சு 2019 – 26 சனவரி 2021
தொகுதிஅர்ச்சூ மாகாணம்–இராப்லா மாகாணம்
பதவியில்
6 மார்ச்சு 2011 – 1 சூலை 2014
தொகுதிஅர்ச்சூ–இராப்லா
எசுத்தோனிய
ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1 சூலை 2014 – 5 செப்டம்பர் 2018
பின்னவர்இகோர் கிராசின்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 சூன் 1977 (1977-06-18) (அகவை 47)
தாலின், எசுத்தோனியா
அரசியல் கட்சிஎசுத்தோனிய சீர்திருத்தக் கட்சி
துணைவர்கள்
  • உரூமெட்டு இலீகர்
    (தி. 2002; விவாகரத்து 2006)
  • அர்வோ ஆலிக்கு (தி. 2018)
பிள்ளைகள்1
பெற்றோர்
  • சைம் கேலசு (தந்தை)
  • கிறிசுட்டி கேலசு (தாய்)
கல்வி
இணையத்தளம்kajakallas.ee

கயா கேலசு (Kaja Kallas) எசுத்தோனியா நாட்டு அரசியல்வாதியாவார். 2021 ஆம் ஆண்டு முதல் எசுத்தோனியாவின் பிரதமர் பதவியில் இருந்து வருகிறார். எசுத்தோனியா நாட்டின் பிரதமர் பதவி வகிக்கும் முதல் பெண்மணி என்ற சிறப்புக்கு உரியவராகவும் கருதப்படுகிறார். 2018 ஆம் ஆண்டு முதல் சீர்திருத்தக் கட்சியின் தலைவராக இருந்த இவர் 2019-2021 மற்றும் 2011-2014 ஆம் ஆண்டுகளில் எசுத்தோனியாவின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். கேலசு 2014-2018 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். ஐரோப்பாவிற்கான தாராளவாதிகள் மற்றும் சனநாயகவாதிகளின் கூட்டணிக் கட்சியை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

கல்வி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

கயா கேலசு 1977 ஆம் ஆண்டு சூன் மாதம் 18 ஆம் தேதியன்று எசுத்தோனியா நாட்டின் தாலின் நகரத்தில் பிறந்தார்.[1] எசுத்தோனியாவின் 14 ஆவது பிரதமராகவும் பின்னர் ஐரோப்பிய ஆணையராகவும் இருந்த சைம் கேலசு இவரது தந்தையாவார்.[2] இரண்டாம் உலகப் போரின் போது, 1940 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் எசுத்தோனியா நாட்டின் மீது படையெடுத்து ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து எசுத்தோனியாவில் மரணதண்டனைகள் மற்றும் நாடு கடத்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக ஆறு மாத வயதுடைய கயா கேலசு , கேலசின் தாயார் கிறிசுட்டி மற்றும் பாட்டி ஆகியோர் இசுராலினிச ஆட்சியாளர்களால் சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர். கயா கேலசின் பத்து வயது வரை இவர்கள் அங்கேயே வாழ்ந்தனர்.[3] கேலசின் தாத்தா எட்வார்டு ஆல்வர் (1886-1939), 1918 ஆம் ஆண்டில் எசுத்தோனிய குடியரசை நிறுவுவதற்கு வழிவகுத்த அரசியல்வாதிகளில் ஒருவர் ஆவார். மேலும் இவர் 1918-1919 ஆம் ஆண்டில் புதிதாக சுதந்திரம் பெற்ற எசுத்தோனியா நாட்டு காவல்துறையின் முதல் தலைவராகவும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.[3] பூர்வீக எசுத்தோனிய மொழி பேசுகின்றவர் மற்றும் எசுத்தோனிய சுய-அடையாளம் கொண்டவருமான கயா கேலசு, தொலைதூர இலாட்வியன் மற்றும் பால்டிக்-செருமன் வம்சாவளியைச் சேர்ந்தவர். கேலசின் தந்தை குறித்த வம்சாவளியைப் பற்றி ஆய்வு செய்த புலனாய்வுப் பத்திரிகையாளர்களால் இத்தகவல் கண்டுபிடிக்கப்பட்டது.[4][5]

கயா கேலசு 1999 ஆம் ஆண்டில் எசுத்தோனியாவின் தார்ட்டு பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஐரோப்பிய சட்டத்தில் பயிற்சி பெற்றபோது பிரான்சு மற்றும் பின்லாந்தில் சிறிது காலம் வாழ்ந்தார்.[6] 2007 ஆம் ஆண்டு முதல், இவர் எசுத்தோனிய வணிகப் பள்ளியில் பயின்றார். 2010 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றார்.[7][8]

இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.[9]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

எசுத்டோனிய நாடாளுமன்ற உறுப்பினர் (2011–2014)

[தொகு]

2010 இல், கேலசு எசுத்தோனிய சீர்திருத்தக் கட்சியில் சேர முடிவு செய்தார். இவர் 2011 இல் ஹர்ஜு மற்றும் ராப்லா மாகாண தொகுதிக்கு எசுத்னியா நாடாளுமன்றத்திற்கு (ரிகிகோகு) போட்டியிட்டு 7,157 வாக்குகளைப் பெற்றார். இவர் எசுத்தோனியாவின் 12 வது நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2011 முதல் 2014 வரை பொருளாதார விவகாரக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.[10]

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் (2014–2018)

[தொகு]
2017 ஆம் ஆண்டு ஐரோப்பிய குழுவின் 177 வது கூட்டத்தில் கயா கேலசு.

2014 தேர்தலில் கேலசு ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்டு 21,498 வாக்குகளைப் பெற்றார். ஐரோப்பிய பாராளுமன்றத்தில், கேலசு தொழில், ஆராய்ச்சி மற்றும் எரிசக்தி குழுவில் பணியாற்றினார் மற்றும் உள்நாட்டு சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த குழுவிலும் உறுப்பினராக இருந்தார். இவர் ஐரோப்பிய ஒன்றிய-உக்ரைன் நாடாளுமன்ற ஒத்துழைப்புக் குழுவின் துணைத் தலைவராகவும், யூரோனெஸ்ட் நாடாளுமன்ற சபைக்கான பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்காவுடனான உறவுகளுக்கான பிரதிநிதியாகவும் இருந்தார்.[1]

மற்ற நடவடிக்கைகள்

[தொகு]
  • பிரண்ட்ஸ் ஆஃப் யுரோப் அறங்காவலர் குழுவின் உறுப்பினர் (2020 முதல்)
  • வெளிநாட்டு உறவுகள் பற்றிய ஐரோப்பிய குழு (ஈ.சி.எஃப்.ஆர்), உறுப்பினர் [11]
  • பெண்கள் பொருளாதார மன்றம், ஆலோசனைக் குழு உறுப்பினர் [12]
  • மாதிரி ஐரோப்பிய ஒன்றிய தாலின், புரவலர் [13]
  • ஐரோப்பிய லிபரல் யூத் (LYMEC), வழிகாட்டி
  • ஐரோப்பிய இளம் தலைவர்கள், உறுப்பினர்
  • இளம் தொழில்முனைவோருக்கான ஈராஸ்மஸ், எம்இபி தூதர்
  • ஐரோப்பிய இணைய மன்றம், அரசியல் உறுப்பினர்
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கான ஐரோப்பிய மன்றம் (EUFORES), வாரியத்தின் உறுப்பினர்
  • உலகளாவிய இளம் தலைவர்கள், உறுப்பினர்
  • பெண்கள் அரசியல் தலைவர்கள், உறுப்பினர்

ஆதாரம்:[14]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "8th parliamentary term, European Parliament". europarl.europa.eu. Archived from the original on 6 March 2019. பார்க்கப்பட்ட நாள் 4 March 2019.
  2. Dobush, Grace (4 March 2019). "Digital Savvy Estonia Is Set to Get Its First Female Prime Minister". Fortune. Archived from the original on 8 March 2019. பார்க்கப்பட்ட நாள் 7 March 2019.
  3. 3.0 3.1 Even further from Russia: what is known about the new head of the Estonian government, Europeeska Pravda, 26 January 2021
  4. Lääne Elu. Siim Kallas: eliidi raputamine on õige eesmärk. (in Estonian). Retrieved 2 February 2021.
  5. Eesti Ekspress. Siim Kallas: "'Minu vanaema oli lätlane? Väga huvitav!"'. (in Estonian). Retrieved 3 February 2021.
  6. Tambur, Silver (21 May 2014). "Estonian candidates for the European Parliament: Kaja Kallas (Reform Party)". Estonian World. பார்க்கப்பட்ட நாள் 6 April 2021.
  7. "Kaja Kallas". பார்க்கப்பட்ட நாள் 4 March 2019.
  8. Deloy, Corinne (3 March 2019). "Victory for the centre-right opposition (ER) in the general elections in Estonia" (PDF). The Foundation Robert Schuman. Archived (PDF) from the original on 7 March 2019. பார்க்கப்பட்ட நாள் 7 March 2019.
  9. "Kaja Kallas". valitsus.ee. பார்க்கப்பட்ட நாள் 2021-01-27.
  10. "Biography". Kaja Kallase. Archived from the original on 16 June 2016. பார்க்கப்பட்ட நாள் 28 ஜனவரி 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help); Unknown parameter |= ignored (help)
  11. "The ECFR Council". ecfr.eu. Archived from the original on 25 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 26 January 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. "Advisory Board Members". Women Economic Forum. பார்க்கப்பட்ட நாள் 26 January 2021.
  13. "Model European Union Tallinn". facebook.com. பார்க்கப்பட்ட நாள் 26 January 2021.
  14. "Organisatsioonid". Kaja Kallas. பார்க்கப்பட்ட நாள் 26 January 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காயா_கால்லாசு&oldid=3928806" இலிருந்து மீள்விக்கப்பட்டது