உள்ளடக்கத்துக்குச் செல்

கல்வெட்டுப் படி எடுத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்வெட்டு படி எடுத்தல் என்பது கல்வெட்டின் சரியான நகலைப் பெறுவதற்கு கல்வெட்டியலில் மேற்கொள்ளப்படும் ஒரு செயலாகும். இது ஆங்கிலத்தில் Estampage என்ற நுட்பச் சொல்லால் குறிக்கப்படுகிறது.

ஜெயந்தி மதுகரின் கூற்றுப்படி, [1] கல்வெட்டு படி எடுத்ததல் என்பது பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:

தெளிவாகப் படிப்பதற்காக, கல்வெட்டுகளை ஒரு காகிதத் தாளில் ‘பதித்தல்’ (a process of ‘stamping’ the inscriptions from the stone on to a piece of paper for a clearer read)

மெரியம்-வெப்ஸ்டர் அகராதி இதை இவ்வாறு வரையறுக்கிறது: [2]

மை பூசப்பட்ட காகிதத்தில் பதிக்கப்படும் ஒரு கல்வெட்டின் மறுபதிப்பு (an impression of an inscription made on inked paper)

சொற்பிறப்பியல்

[தொகு]

இந்திய தொல்லியல் துறையின் (ASI) கல்வெட்டுக் கிளையின் முன்னாள் இயக்குநரான டி.எஸ் இரவிசங்கரின் கருத்துப்படி, கல்வெட்டு படி எடுத்தலை குறிக்கும் "Estampage" என்ற சொல்லானது கல்வெட்டு வல்லுநர்களால் பயன்படுத்தப்படும் ஒரு இந்தியச் சொல்லாகும். [1] எவ்வாஆயினும், மொழியியல் அடிப்படையில் சரியான விளக்கம் என்னவென்றால், இது "Estampage" (எஸ்டாம்பேஜ்) என்ற பிரெஞ்சு சொல்லிலிருந்து உருவானது. உண்மையில் இது "Stamping" (பதித்தல்) என்று பொருள்படும். நடைமுறையில், எஃகு தொழில்துறையில் முத்திரையிடுதல் 'Stamping' என்றால் காய்ச்சி அடித்தல் (Forging) என்று பொருள். பல்வேறு பொருட்களின் மீது முத்திரை. பதித்தல் என்றும் இச்சொல் பொருள் தரும். இரண்டாவதாகச் சொல்லப்பட்ட பொருளிலேயே கல்வெட்டுத்துறையும் estampage என்னும் இச்சொல்லைக் கையாள்வதாகத் தெரிகிறது.

கல்வெட்டு படி எடுத்தல் செயல்முறை

[தொகு]

கல்வெட்டு படி எடுக்கும் செயல்முறையில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ள பாறையின் மீது ஈரமான காகிதம் வைத்து அழுத்தப்படுகிறது. அதனால் கல்வெட்டின் ஒருவகையான படி உருவாகிறது. பின்னர் அந்த அழுத்தப்பட்ட காகிதத்தின் மீது மை (பொதுவாக, நிலக்கரி அல்லது இந்திய மை) ஒரு துரிகை கொண்டு ஒற்றப்படுகிறது. [3]

ஒரு படி எடுக்கும் செயல்முறை [3] கீழே பட்டியலிடப்பட்டுள்ளது:

  • ஒரு தூரிகையை தண்ணீரில் ஊற வைக்கவும்
  • பின்னர் இத்தூரிகையைப் பயன்படுத்தி கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கும் கற்பாறையின் மேற்பரப்பை சுத்தம் செய்யவும்.
  • ஒரு பெரிய ஈரமான காகித்தத்தை (அல்லது காகித அடுக்கை) எடுத்து கற்பாறையின் மேற்பரப்பில் விரிக்கவும்.
  • ஈரமான காகிதத்தின் மீது பன்றி முடியில் செய்த அடிப்பானை (Dabber) பயன்படுத்தி மெதுவாகத் தட்டவும்.
  • காகிதத்தின் மேற்பரப்பின் மீது கல்வெட்டின் பதிவு தெளிவாக தெரிவதற்கு, இந்திய மை (பொதுவாக கருப்பு நிறத்தில்) தோய்த்த துரிகையால் ஒற்றி எடுக்கவும்.
  • கல்வெட்டின் ஒற்றிய பதிவு முழுமையடைந்தவுடன், கல் மேற்பரப்பில் ஒட்டிக்கொண்டிருக்கும் காகிதத்தை நன்கு உலர விடவும்.
  • காகிதம் காய்ந்தவுடன், அதை மெதுவாகப் பிரித்து எடுக்கவும்.
  • இருண்ட (கருப்பு) பின்னணியில் வெள்ளை நிற எழுத்துக்களாக (எழுத்துகளின் பள்ளங்கள்) தோன்றும் மை பதிவை (எஸ்டேம்பேஜ்) கவனித்து சரிபார்க்கவும்.

கல்வெட்டு ஆய்வாளர்கள் வழக்கமாக கல்வெட்டு படிகளை படித்து விளங்கிக்கொள்ள நீண்ட காலம் (நாட்கள் முதல் வாரங்கள் வரை) எடுத்துக்கொள்கிறார்கள். இவர்கள் கல்வெட்டைப் படித்து புரிந்துகொள்ளவும், பகுப்பாய்வு செய்யவும், ஒலிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்ப்பு செய்யவும் முயற்சிக்கிறார்கள்.

பயன்பாடு

[தொகு]

இந்தியாவிற்குள், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பல பொருட்களும் கல்வெட்டு படி எடுக்கப்பட்டுள்ளன. [4] [5] அவற்றில் பின்வருவன சில அடங்கும்:

அருங்காட்சியகங்கள் மற்றும் காட்சிப்படுத்தல்

[தொகு]

2016 ஆம் ஆண்டில், இந்திய தொல்லியல் துறையின் (ஆங்கிலம்: Archaeological Survey of India) தென் மண்டலத்தின் கல்வெட்டுக் கிளையானது, தென்னிந்தியாவின் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் யூஜென் ஜூலியஸ் தியோடர் ஹூல்ஷின் நினைவு அருங்காட்சியகம் மற்றும் கல்வெட்டு புகைப்படக் கண்காட்சி என்ற பெயரில் புதிய, நிரந்தர அருங்காட்சியகம் மற்றும் கல்வெட்டுப்படிகளின் கண்காட்சியைத் திறந்தது. இந்த அருங்காட்சியகம், அசோகரின் 159வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அசோகரின் பண்டைய கல்வெட்டுகளைப் புரிந்துகொள்வதற்காக புகழ்பெற்ற ஒரு ஜெர்மானிய கல்வெட்டு வல்லுநரும் இந்தியவியலாளருமான இ. ஹுல்ஷின் (E. Hultzsch) பெயரிடப்பட்டது. [7]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 What do the inscription stones of Bengaluru say? Jayanthi Madhukar. The Hindu. December 16, 2017. பார்த்த நாள் 2017-12-19
  2. "Definition of ESTAMPAGE". www.merriam-webster.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-12-19.
  3. 3.0 3.1 Aswatha, Shashaank M.; Talla, Ananth Nath; Mukhopadhyay, Jayanta; Bhowmick, Partha (2014-11-01). A Method for Extracting Text from Stone Inscriptions Using Character Spotting. Lecture Notes in Computer Science (in ஆங்கிலம்). Springer, Cham. pp. 598–611. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-319-16631-5_44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783319166308. {{cite book}}: |journal= ignored (help)
  4. Indian Epigraphy : a Guide to the Study of Inscriptions in Sanskrit, Prakrit, and the other Indo-Aryan Languages.
  5. "EPIGRAPHY - ARCHAEOLOGY". www.tnarch.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2017-12-19.
  6. Winckworth, C. P. T. (1929). "A NEW INTERPRETATION OF THE PAHLAVI CROSS-INSCRIPTIONS OF SOUTHERN INDIA". The Journal of Theological Studies 30 (119): 237–244. https://archive.org/details/sim_journal-of-theological-studies_1929-04_30_119/page/237. 
  7. Swaminathan, T. s Atul (2016-03-29). "ASI opens museum of estampages from across India" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. http://www.thehindu.com/news/cities/chennai/asi-opens-museum-of-estampages-from-across-india/article8407198.ece.