கல்லகர்–ஆலண்டர் சிதைவு வினை
கல்லகர்–ஆலண்டர் சிதைவு வினை (1946) (Gallagher–Hollander degradation) என்பது ஒரு நேரியல் அலிஃபாட்டிக் காபொட்சிலிக் அமிலத்தில் இருந்து பைருவீக் அமிலத்தை வெளியேற்றி எண்ணிக்கையில் இரண்டு கார்பன் அணுக்கள் குறைவாகக் கொண்டுள்ள ஒரு புதிய அமிலத்தைத் தருகின்ற வினையாகும்.[1] இவ்வினையின் அசலான நோக்கம் தொடர் வினைகள் மூலமாக பித்தவமிலம் உருவாக்குதலுடன் தொடர்புடையது ஆகும். தயனைல் குளோரைடுடன் வினைபுரிந்து அமிலகுளோரைடு (2) உருவாதல் ஈரசோமீத்தேனுடன் வினைபுரிந்து ஈரசோகீட்டோன் (3) உருவாதல், ஐதரோகுளோரிக் அமிலத்துடன் வினைபுரிந்து குளோரோமெத்தில் கீட்டோன் (4) உருவாதல், குளோரின் கரிம ஒடுக்கவினைக்குட்பட்டு மெத்தில்கீட்டோன் (5) உருவாதல், கீட்டோன் ஆலசனேற்றம் அடைந்து (6) பைரிடீனுடன் நீக்க வினையில் ஈடுபட்டு ஈனோன் (7) உருவாகி இறுதியாக குரோமியம் மூவொட்சைட்டுடன் ஆக்சிசனேற்றம் அடைந்து பிசுனார்கோலனிக் அமிலம் உண்டாகிறது (8).
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Vincent P. Hollander and T. F. Gallagher. Partial synthesis of compounds related to adrenal cortical hormones. VII. degradation of the side chain of cholanic acid J. Biol. Chem., Mar 1946; 162: 549–54 இணைப்பு பரணிடப்பட்டது 2009-01-07 at the வந்தவழி இயந்திரம்