கலாசா மொழி
கலாசா மொழி | |
---|---|
Default
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | kls |
கலாசா மொழி, பாக்கித்தானின் வடமேற்கு முன்னரங்க மாகாணத்திலுள்ள சித்ரால் மாவட்டத்தின் தாமெல் பள்ளத்தாக்குப் பகுதியில் பேசப்படும் ஒரு மொழியாகும். இது இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தின், இந்திய-ஈரானிய மொழித் துணைக் குடும்பத்தில் உள்ள இந்திய-ஆரிய மொழிப் பிரிவைச் சேர்ந்தது. இம் மொழி தார்டிக் மொழிகளுள் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
கலாசா மொழி பேசுவோர் எல்லோரும் தொடக்கத்தில் தமக்கென ஒரு சமயத்தைப் பின்பற்றி வந்தனர். பிற்காலத்தில் பலர் இசுலாம் மதத்துக்கு மாறிவிட்டனர் எனினும் சுமார் 3000 பேர் வரை இன்னமும் தங்கள் மரபுவழிச் சமயத்தையே பின்பற்றி வருகின்றனர்.
இம் மொழி தொடர்பில் நிபுணரான ரிச்சார்ட்டு ஸ்ட்ராண்ட் என்பவர், கலாசா என்னும் பெயர் ஆப்கானித்தானின், நூரித்தான் மாகாணத்தில் கலாசா பள்ளத்தாக்கின் வடமேற்குப் பகுதியில் வாழும் நூரித்தானி மக்களின் இனப் பெயரோடு தொடர்பு உடையது எனக் கருதுகிறார். பல நூற்றாண்டுகளுக்கு முன் தெற்குச் சித்ரால் பகுதிவரை பரவியிருந்த இவர்களிடம் இருந்தே இப் பெயரை கலாசா மொழி பேசுவோர் பெற்றிருக்கலாம் என்பது இவர் கருத்து. எனினும், இந்திய-ஈரானிய மொழிப் பிரிவின் இன்னொரு குழுவைச் சார்ந்த நூரித்தானி மொழியாகிய கலாசா -அலா மொழிக்கும், இந்திய-ஆரிய மொழியாகிய கலாசா-முன் மொழிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.