கலப்பு பிம்பங்கள்
இரண்டு பிம்பங்களை இணைத்து உருவாகும் ஒளியியற் கண்மாயமே (optical illusion) கலப்பு பிம்பங்கள் (Hybrid image) எனப்படுகிறது. இரண்டு பிம்பங்களின் பகுதிகளை இணைத்து உருவாக்குவதையே கலப்பு பிம்பங்கள் என அழைக்கிறார்கள்.
கலப்பு பிம்பங்கள் பார்க்கும் தூரத்தைப் பொறுத்தும், பார்க்கும் விதத்தைப் பொறுத்தும் இரண்டு விதங்களில் உணரப்படுகிறது. 1994 ஆம் ஆண்டு மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த ஆடி ஒலிவியாவும் (Aude Oliva) மற்றும் கிளாசுகவ் (Glasgow) பல்கலைகழகத்தைச் சேர்ந்த பிலிப்பும் கலப்பு பிம்பங்களை உருவாக்கும் புதிய தொழிற்நுட்பத்தை வெளியிட்டனர். குறைந்த அதிர்வெண் கொண்ட பிம்பத்தையும், அதிக அதிர்வெண் கொண்ட பிம்பத்தையும் இணைக்கும் போது உருவாகும் கலப்பு பிம்பம், பார்க்கப்படும் தூரத்தைப் பொறுத்து பலவிதமாக தோற்றமளிக்கிறது.[1] ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மற்றும் மர்லின் மன்றோ ஆகியோரின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன, இதில் அருகிலிருந்து பார்க்கும் போது ஐன்ஸ்டைனின் படம் தெளிவாகவும், தூரத்திலிருந்து பார்க்கும் போது மர்லினின் படம் தெளிவாகவும் தெரிகின்றது.[2]
See also
[தொகு]References
[தொகு]- ↑ Aude Oliva, Antonio Torralba and Philippe G. Schyns (2006). "Hybrid images". ACM Transactions on Graphics (SIGGRAPH 2006 issue) 25 (3): 527–532. http://cvcl.mit.edu/hybrid/OlivaTorralb_Hybrid_Siggraph06.pdf. பார்த்த நாள்: 2017-11-11.
- ↑ ""Marilyn-Einstein" and other examples". Archived from the original on 2008-02-20. பார்க்கப்பட்ட நாள் 2017-11-11.