ஒளியியற் கண்மாயம்
பொருளின் உண்மைத் தோற்றத்திலிருந்து காட்சிப் புலனுணர்வு மூலம் பெற்ற படிமம் வேறுபடுதல் ஒளியியற் கண்மாயம் (Optical Illusion) எனப்படும்.
உடலியல் ஒளியியற் கண்மாயம்
[தொகு]அதிக ஒளியைப் பார்த்த பின் தோன்றும் பின்தோற்றங்களை உடலியல் ஒளியியற் கண்மாயத்துக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.[1] படிமமொன்றின் ஒளிர்வு, நிறம், அமைவு, அளவு, நகர்வு முதலியவை உடலியல் ஒளியியற் கண்மாயத்தை ஏற்படுத்துவதற்குப் பங்களிக்கின்றன.
எர்மன் நெய்யரி மாய உணர்ச்சியில் வெள்ளைப் புள்ளிகள் கறுப்புப் புள்ளிகளாகத் தோன்றுவதும் உடலியல் ஒளியியற் கண்மாயமே ஆகும்.[2]
கலைஞர்கள்
[தொகு]எம். சி. எசுசர், பிரிட்செட்டு இரிலே, சால்வடார் இடாலி, கிசெப்பி அர்சிம்போல்டோ, மார்செல் துச்சாம்பு, விக்டர் வசரேலி, சார்லசு ஆலன் கில்பர்டு முதலியோர் ஒளியியற் கண்மாயங்களை உருவாக்கிய கலைஞர்கள் ஆவர்.
காட்சியகம்
[தொகு]-
எப்பின்காசு மாய உணர்ச்சி
-
சிற்றுண்டிச்சாலைச் சுவர் மாய உணர்ச்சி
-
பேக்கு-மேன் மாய உணர்ச்சி
-
நகர்வு மாய உணர்ச்சி