உள்ளடக்கத்துக்குச் செல்

கர்மங்காட் அனுமன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்மங்காட் அனுமன் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தெலங்காணா
அமைவு:கர்மங்காட், ஐதராபாத்து
கோயில் தகவல்கள்
இணையதளம்:http://karmanghatsrihanumantemple.org/
கர்மங்காட் கோயில் கோபுரம்

கர்மங்காட் அனுமன் கோயில் ( Karmanghat Hanuman Temple ) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் ஐதராபாத்து நகரிலுள்ள அமைந்துள்ள பழமையான மற்றும் பிரபலமான இந்து கோவில்களில் ஒன்றாகும். கோயிலின் பிரதான தெய்வமாக அனுமன் இருக்கிறார். மேலும், கோயில் வளாகத்தில் இராமர், சிவன், சரசுவதி, துர்க்கை, சந்தோஷி மாதா, வேணுகோபால சுவாமி, ஜெகநாதர் போன்ற மற்ற தெய்வங்களும் உள்ளன. இந்த கோயில் சந்தோஷ்நகருக்கு அருகிலுள்ள கர்மங்காட்டில் அமைந்துள்ளது. நாகார்ஜுனா சாகர் வட்டச் சாலைக்கு அருகில் உள்ளது.[1] செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளைத் தவிர அனைத்து நாட்களிலும் கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இது காலை 5.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மாலை 4:30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

புனைவு

[தொகு]

இது பொ.ச. 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது (தோராயமாக 1143). ஒரு காக்கதிய மன்னன் வேட்டையாடச் சென்று ஒரு மரத்தடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, யாரோ இராமரின் பெயரை உச்சரித்துக்கொண்டிருப்பதைக் கேட்டான். அடர்ந்த காடுகளின் நடுவில் அது யார் என்று ஆச்சரியப்பட்ட அவன், அமர்ந்திருக்கும் தோரணையிலுள்ள ஒரு அனுமன் சிலையிலிருந்து வருவதாக அறிந்தான். சிலைக்கு மரியாதை செலுத்தி, அவன் தனது தலைநகருக்குத் திரும்பினான். அன்றிரவு, இறைவன் அவனது கனவில் தோன்றி ஒரு கோவிலைக் கட்டும்படி கேட்டுக்கொண்டார் என்பதாக ஒரு கதை இருக்கிறது. [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Archived copy". Archived from the original on 18 August 2018. பார்க்கப்பட்ட நாள் 16 April 2017.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Archived copy". Archived from the original on 18 August 2018. பார்க்கப்பட்ட நாள் 16 April 2017.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்

[தொகு]