உள்ளடக்கத்துக்குச் செல்

கட்ச்சின் பெரிய பருவகால உவர் சதுப்பு நிலம்

ஆள்கூறுகள்: 24°05′11″N 70°38′16″E / 24.08639°N 70.63778°E / 24.08639; 70.63778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Designations
Invalid designation
அலுவல் பெயர்Runn of Kutch
தெரியப்பட்டது5 நவம்பர் 2002
உசாவு எண்1285[1]
நீல பச்சை நிறத்தில் கட்சின் பெரிய ரான் பகுதி, நாசாவின் செய்மதி படம்
குஜராத் மாநிலத்தில் கட்சின் பெரிய ரான் மற்றும் சிறிய ரான் பகுதியைக் காட்டும் வரைபடம்
கட்சின் ரான் பகுதியில் உயர்ந்த இடத்தை காட்டும் அறிவிப்புப் பலகை
வெள்ளை கட்ச் பாலைவனம்
கட்ச் பகுதியில் சில மைல் தொலைவில் கடக ரேகை கடக்கும் இடம்

கட்ச்சின் பெரிய பாலைவனம் அல்லது கட்ச்சின் பெரிய பருவகால உவர் சதுப்பு நிலம் (Great Rann of Kutch or Rann of Kutch seasonal salt marsh) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2] இப்பகுதியில் வாழும் மக்களை கட்சி மக்கள் என்று பெயர்.[3]

அமைவிடம் மற்றும் விளக்கம்

[தொகு]

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தின் சிறிய பருவகால உவர் சதுப்பு நிலத்தை (Little Rann of Kutch) ஒட்டி அமைந்த கட்ச்சின் பெரிய பருவகால உவர் சதுப்பு நிலத்தின் தெற்கில் பன்னி புல்வெளி நிலங்கள் (Banni grasslands) உள்ளது. இது கட்ச் வளைகுடாவிற்கும், தெற்கு பாகிஸ்தானின் சிந்து ஆற்றின் முகத்துவாரத்திற்கு இடையே 30,000 சதுர கிலோமீட்டர்கள் (10,000 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது. சிறிய கட்ச் ரான் பரப்பையும், பெரிய கட்ச் ரான் பரப்பையும் ரான் ஆப் கட்ச் எனப்வர்

அரபுக் கடல் மட்டத்திலிருந்து 15 மீட்டர் உயரம் கொண்ட உவர் நீரும், சதுப்பு நிலமும் கொண்ட இப்பகுதியில் கோடைக்காலத்தில் உப்பு உற்பத்தி செய்கிறது."Rann of Kutch, India". Earth Snapshot. 6 November 2008. p. 2. Archived from the original on 2 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 22 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)</ref>[4] இராஜஸ்தான் மாநிலத்தின் ஆரவல்லி மலைத்தொடரில் உற்பத்தில் லூனி ஆறு, ரூபென் ஆறு மேற்கு பனாஸ் ஆறுகள் வடகிழக்கு கட்ச் சதுப்பு நிலத்தில் பாய்கிறது.[5]

மணற்பாங்கான முட்புதர்கள் கொண்ட இப்பகுதி பறவைகள், காட்டுக் கழுதை போன்ற காட்டுயிர்களின் காப்பகமாக உள்ளது.[5][6][7]இந்திய காட்டு கழுதை சரணாலயம் இப்பகுதியில் உள்ளது.

தட்ப வெப்பம்

[தொகு]

கோடைக்காலத்தின் கட்ச் பாலைவனத்தின் அதிகபட்ச வெப்பம் 49.5 °C மற்றும் குளிர்காலத்தில் 0 °C (32 °F) ஆக உள்ளது.[8]

சமயங்கள்

[தொகு]

இப்பகுதியில் இந்துக்கள், இசுலாமியர், சீக்கியர் மற்றும் சமணர்கள் அதிகம் வாழ்கின்றனர்.

பெரிய ரான் ஆப் கட்ச்சில் செல்லும், இந்திய-பாகிஸ்தானை பிரிக்கும் சர் கிரீக் பன்னாட்டு எல்லைக் கோடு

சுற்றுலா

[தொகு]
டிசம்பர்-பிப்ரவரி மாதங்களில் நடைபெறும் கட்ச் திருவிழாவின் போது அமைக்கப்பட்ட கூடாரங்கள்

இப்பகுதியில் டிசம்பர், சன்வரி மற்றும் பிப்ரவரி மாதங்ளில் கட்ச் திருவிழா நடைபெறும். அவ்வமயம் சுற்றுலா பயணிக்களுக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய ஆயிரக்கணக்கான கூடாரங்கள் அமைக்கப்படுகிறது. கூடாரத்திற்கும், உணவுக்கும் மட்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திருவிழாவில் இந்திய நாட்டின் அனைத்து வகையான உணவுகள் ஒரே இடத்தில் கிடைக்குமாறு உணவகங்கள் உள்ளது. கட்ச் திருவிழாவின் போது அன்றாடம், ஒட்டகச் சவாரி, யோகா, அனைத்து மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. கட்ச் ரான் திருவிழா குஜராத் மாநில சுற்றுலாத்துறை நடத்துகிறது.[9]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Runn of Kutch". Ramsar Sites Information Service. பார்க்கப்பட்ட நாள் 25 April 2018.
  2. "Gujarat Tourism Document" (PDF). Gujarattourism.com. Archived from the original (PDF) on 12 December 2010. பார்க்கப்பட்ட நாள் 22 November 2013.
  3. INTERNATIONAL LAW REPORTS VOLUME 50. Cambridge University Press. 1976. p. 464. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780406876522.
  4.   "Cutch, Runn of". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 7. (1911). Cambridge University Press. 
  5. 5.0 5.1 "Rann of Kutch seasonal salt marsh". Terrestrial Ecoregions. World Wildlife Fund.
  6. Gandhi, Divya (2018-12-22). "How Mumbai’s residents fought, and won, a battle on behalf of flamingos" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/sci-tech/energy-and-environment/how-mumbais-residents-fought-and-won-a-battle-on-behalf-of-flamingos/article25799289.ece. "Flamingos — lesser and greater — are found across the country, and migrate from as far as Iran. Many of those that flock to Mumbai come from sites closer home, such as Gujarat’s Rann of Kutch, where they breed and nest on mudflats" 
  7. Kannadasan, Akila (2020-02-10). "Flocktails and friendship" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/sci-tech/energy-and-environment/flocktails-and-friendship/article30782808.ece. "The flamingoes come from the Rann of Kutch in Gujarat in December and leave towards the end of March." 
  8. "Encyclopaedia of Earth". Eoearth.org. பார்க்கப்பட்ட நாள் 22 November 2013.
  9. [ https://www.gujarattourism.com/fairs-festivals/cultural-festivals/rann-utsav பரணிடப்பட்டது 2019-10-06 at the வந்தவழி இயந்திரம் Rann Utsav]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rann of Kutch
என்பதில் ஊடகங்கள் உள்ளன.