கக்கயம் அணை
Appearance
கக்கயம் அணை | |
---|---|
Kakkayam Dam Reservoir | |
புவியியல் ஆள்கூற்று | 11°33′04″N 75°55′30″E / 11.551°N 75.925°E |
கக்கயம் (Kakkayam) என்பது கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டதின், கூராச்சுண்டில் அமைந்துள்ள ஒரு அணையாகும். கக்கயம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான மேற்குத் தொடர்ச்சி மலையின் புறப்பகுதியிலும் அமைந்துள்ளது. இதன் பகுதியானது மலபார் வனவிலங்கு சரணாலயத்தில் 7,421 ஹெக்டேர் (18,340 ஏக்கர்) யானைகள் மற்றும் காட்டெருதுகள் உள்ளிட்ட காட்டு விலங்குகளின் தங்குமிடமாக உள்ளது. கக்கயத்தில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. ககயம் பகுதியானது மலையேற்றம், பாறை ஏற்றப் பகுதியாகும்.
இந்த நீர்த்தேக்கமானது குற்றியாடி நீரிமின்நிலைய திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 2450 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த நீர்மின்நிலையத்தில் இருந்து வெளியேறும் நீர் ஒரு ஆற்றில் சேர்ந்து பெருவண்ணாமொழி நீர்ப்பாசன திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.[1]
படக்காட்சியகம்
[தொகு]-
கக்கயம் மலைகள்
-
கக்கயம் அணைக்கு அருகிலுள்ள கக்கயம் பள்ளத்தாக்கு
-
கக்கயம் அணை (2018)
-
மழைக்காடு மூடுபனியில் கக்காயம் அணை
-
கக்கயம் பள்ளத்தாக்கு ஏரி
கக்கயத்திலிருந்து தொலைவு
[தொகு]- கோழிக்கோடு (58 கி.மீ)
குறிப்புகள்
[தொகு]- ↑ tripuntold - "Kakkayam Dam", Retrieved on 11 June 2020.