ஒசே முகிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒசே முகிக்கா
José Mujica
உருகுவே நாட்டு அரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 1, 2010[1]
Succeedingதபாரே வாஸ்கெஸ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 20, 1935 (1935-05-20) (அகவை 88)
மொண்டெவிடியோ, உருகுவே
அரசியல் கட்சிஅகண்ட முன்னணி
துணைவர்லூசியா தொப்பலான்ஸ்கி
தொழில்வேளாண்மை

ஒசே அல்பேர்ட்டோ முகிக்கா கோர்தானோ (José Alberto Mujica Cordano), எல் பெப்பே, (பிறப்பு: மே 20, 1935) என்பவர் உருகுவே நாட்டின் அரசியல்வாதியும், உருகுவேயின் அரசுத்தலைவரும் (சனாதிபதி) ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். இவர் 2005 முதல் 2008 வரை அமைச்சராக இருந்தவர், தற்போது மேலவை உறுப்பினராக இருக்கிறார்.

அரசியல் பின்னணி[தொகு]

ஒசே முகிக்கா இளமையிலேயே உருகுவேயின் தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். பின்னர் "டுப்பமாரொசு" என்ற பொதுவுடமைக் கட்சியில் இணைந்து 1960களிலும் 70களிலும் ஆட்சியிலிருந்த இராணுவ ஆட்சிக்கு எதிராக கெரில்லா போரில் பங்கு கொண்டார். இவர் பின்னர் 1972 ஆம் ஆண்டில் சிறைப்பிடிக்கப்பட்டார். 1973 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து 14 ஆண்டுகள் இராணுவச்சிறையில் அடைக்கப்பட்டார். கடுமையான சூழ்நிலைகளில் அடிக்கடி தடுத்து வைக்கப்பட்ட முகிக்கா கிணற்றுக்கு அடியிலும் இரு ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டார்[2]. சிறையில் இருக்கும் போது டுப்பமாரொசின் ஏனைய தலைவர்களுடன் தொடர்பில் இருந்தார்.

1985 மக்களாட்சி ஏற்பட்டவுடன், பொது மன்னிப்பின் கீழ் முகிக்கா விடுதலை ஆனார்.

முகிக்கா பின்னர் டுப்பமாரொசின் ஏனைய உறுப்பினர்களுடன் சேர்ந்து புதிய கட்சியொன்றை ஏற்படுத்தி "அகண்ட முன்னணி" என்ற கூட்டமைப்பில் இணைந்தார். 2003 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் இவரது கட்சி பெரும் வெற்றி பெற்றது.

எளிமையான அரசுத்தலைவர்[தொகு]

உலகின் மிக எளிமையான அரசுத் தலைவர் என பெயர் பெற்றிருக்கிறார்.[3] தன்னுடைய வருமானத்தில் 90 விழுக்காட்டை [3] சமூக நலப்பணிகளுக்காக கொடுத்துவிடுகிறார். 2010-ம் ஆண்டு 1800 [3] டாலர் தான் இவரது சொத்து.

மேற்கோள்கள்[தொகு]

  1. "URUGUAY: Landslide Victory for Former Guerrilla". பார்க்கப்பட்ட நாள் 2009-11-29.
  2. Ex-guerrilla who sought to overthrow state is now set to run it பரணிடப்பட்டது 2012-09-14 at Archive.today, IrishTimes.com
  3. 3.0 3.1 3.2 "கொட்டகையில் குடியிருக்கும் உருகுவே அதிபர்". பிபிசி தமிழோசை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 17, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசே_முகிக்கா&oldid=3536382" இலிருந்து மீள்விக்கப்பட்டது