உள்ளடக்கத்துக்குச் செல்

ஏவ்சு தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏவ்சு தீவு (Aves Island) என்பது அந்தமான் தீவுகளில் உள்ள ஒரு தீவு ஆகும். இந்தியாவின் ஒன்றியப் பகுதிகளில் ஒன்றான அந்தமான் நிக்கோபார் தீவுகள் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்ட நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியாகும்[1]. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரம் போர்ட் பிளேரில் இருந்து வடக்காக 140 கிலோமீட்டர் தொலைவில் ஏவ்சு தீவு அமைந்துள்ளது.

புவியியல்

[தொகு]

12° 54′ 54″ வடக்கு மற்றும் 92° 56′ 6″ கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில், மாயாபந்தர் நகரத்திற்கு கிழக்கே 3.5 கிலோமீட்டர் தொலைவில் ஏவ்சு தீவு அமைந்துள்ளது. ஏவ்சு கலங்கரை விளக்கம் 2008 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது[2].

நிர்வாகம்

[தொகு]

தென்னை சாகுபடி கூட்டுறவு சங்கத்திற்கு.[3]. சொந்தமான ஏவ்சு தீவு மாயாபந்தர் தாலுக்கா நிர்வாகத்தின் கீழுள்ள ஒரு பகுதியாக இயங்குகிறது [4]

போக்குவரத்து

[தொகு]

மாயாபந்தர் நகரத்திலிருந்து 20 நிமிடப் படகுப் பயணத் தூரத்தில் ஏவ்சு தீவு அமைந்துள்ளது [3].

சுற்றுலா

[தொகு]

தடித்த தென்னை மரங்களின் நிழலில், நீர் மற்றும் சூரிய ஒளியில் நினைவதற்கும் உல்லாசமாக காற்று வாங்கவும் [5]ஏற்ற ஒரு இடமாக ஏவ்சு தீவு இருக்கிறது.

மக்கள் தொகையியல்

[தொகு]

இத்தீவுகளில் உள்ள ஒரேயொரு கிராமத்தில் ஒரு குடும்பம் மட்டுமே வசிக்கிறது. எழுத்தறிவு சதவீதம் 100% ஆகும். [6]

மக்கள்தொகையியல் (2011 கணக்கெடுப்பு)[6]
மொத்தம் ஆண்கள் பெண்கள்
மக்கள்தொகை 2 2 0

விவசாயம் செய்து வரும் இவர்கள் நெல், காய்கறிகள், தென்னை தோட்டப்பயிர்கள், மலை தோட்டப்பயிர்கள் முதலியவற்றைப் பயிடுகின்றனர் [7] [8].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.
  2. "Government of India, Directorate General of Lighthouses and Lightships". www.dgll.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2016-10-18.
  3. 3.0 3.1 [1]
  4. "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
  5. Video
  6. 6.0 6.1 "District Census Handbook - Andaman & Nicobar Islands" (PDF). 2011 Census of India. Directorate of Census Operations, Andaman & Nicobar Islands. Archived from the original (PDF) on 2015-08-01. பார்க்கப்பட்ட நாள் 2015-07-21.
  7. "crops" (PDF). Archived from the original (PDF) on 2016-12-21. பார்க்கப்பட்ட நாள் 2017-02-02.
  8. guide
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏவ்சு_தீவு&oldid=3546653" இலிருந்து மீள்விக்கப்பட்டது