உள்ளடக்கத்துக்குச் செல்

ஏண்டிக் மகளிர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏண்டிக் மகளிர் கல்லூரி
முந்தைய பெயர்கள்
கவுகாத்தி மகளிர் கல்லூரி
வகைபொதுத்துறை
உருவாக்கம்1939 (86 ஆண்டுகளுக்கு முன்னர்) (1939)
முதல்வர்ரஜிப் குமார் தாஸ்
பட்ட மாணவர்கள்19 துறைகள்
அமைவிடம், ,
வளாகம்நகர்ப்புறம், மொத்தம் 2 ஏக்கர்கள் (0.0081 km2)
சேர்ப்புகுவகாத்தி பல்கலைக்கழகம்
இணையதளம்www.hgcollege.edu.in

ஏண்டிக் மகளிர் கல்லூரி என்பது கவுகாத்தி பல்கலைக்கழகத்தினுடன் இணைவு பெற்ற ஒரு கல்லூரி ஆகும். [1] இது இந்திய மாநிலமான அசாமில் அமைந்துள்ள பழமையான கல்லூரிகளில் ஒன்றாகும். இங்கு கலை மற்றும் அறிவியலில் இளங்கலை படிப்புகள் வழங்கப்படுகிறது.

வரலாறு

[தொகு]

இக்கல்லூரி துவக்கத்தில் பன்பஜார் மகளிர் உயர்நிலைப் பள்ளியாக வேர்கொண்டு இருந்தது. பின்னர், அண்டிக் மகளிர் கல்லூரி 1939 ஆம் ஆண்டு கவுகாத்தி மகளிர் கல்லூரியாக நிறுவப்பட்டது. திருமதி ராஜபால தாஸ் கல்லூரியின் நிறுவனர் முதல்வர் ஆவார். இந்த கல்லூரி துவக்கத்தில் கவுகாத்தி நகரின் பன்பஜார் பகுதியில் அமைந்திருந்தது. 1940 இல் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, கல்லூரி அண்டிக் மகளிர் கல்லூரி என பெயர் மாற்றப்பட்டது (குறிப்பிடப்பட்ட கொடையாளியான ஆர். கே. அண்டிக்கின் நினைவாக பெயரிடப்பட்டது), மேலும் கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றது. 1948 இல் கௌகாத்தி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து கல்லூரி கௌகாத்தி பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றது [2]

கல்லூரி முதல்வர்கள்

[தொகு]

கல்லூரியில் பதினொரு முதல்வர்கள் பணியாற்றி உள்ளனர்: [2]

ஆண்டு முதல்வர் குறிப்பு
1939–1965 ராஜபால தாஸ்
1965–1974 சரத் சந்திர கோஸ்வாமி
1974–1984 அமேதா ரசூல்
1984–1992 ரத்ன காந்தா பருவா
1994–2000 ககன் சந்திர பருவா
2004-2014 இந்திரா பர்டோலோய்
2015 - 2022 உத்பல் தத்தா
2023 - ரஞ்சித் சர்மா

கல்லூரி வளாகம்

[தொகு]

குவஹாத்தியில் திகாலிபுகுரி குளத்தின் மேற்குக் கரையில் இந்தக் கல்லூரி அமைந்துள்ளது. [2] தற்போதைய வளாகம் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. எதிர்கால விரிவாக்கத்திற்காக அசாம் அரசு கூடுதலாக நான்கு ஏக்கர் நிலத்தை கல்லூரிக்காக ஒதுக்கீடு செய்துள்ளது. [2]

கல்லூரி மாணவர்கள் தங்கி பயில்வதற்காக அமைக்கபட்டுள்ள நிர்மல் ப்ரோவா போர்டோலோய் விடுதி திகாலிபுகுரி குளத்தின் கிழக்குப் பகுதியில் அதாவது கல்லூரி வளாகத்திற்கு எதிரே அமைந்துள்ளது. [3] இந்த மாணவர் விடுதியானது விடுதி காப்பாளர் மற்றும் பிற பணியாளர்களுக்கான கூடுதல் குடியிருப்பு வளாகத்துடன் கூடிய மூன்று மாடி கட்டடமாக உள்ளது. [3]

துறைகள்

[தொகு]

இந்தக் கல்லூரியானது பதினெட்டு துறைகளைக் கொண்டதாக உள்ளது. அதில் பெரிய மற்றும் பொதுப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. [4] இக்கல்லூரி கலை மற்றும் அறிவியல் பீடங்களில் உயர் பட்டப்படிப்பு வரையிலான படிப்புகளை வழங்குகிறது. [5] பயிற்று மொழியாக ஆங்கிலம் உள்ளது. இருப்பினும், அசாமிய மொழியும் ஆங்கிலத்திற்கு துணையாகப் பயன்படுத்தப்படுகிறது. தேசிய கல்வி முறைக்கு இணங்க, அசாம் மாநிலத்தில் 10+2+3 அமைப்பு பின்பற்றப்பட்டு. 1984-85 கல்வி ஆண்டில் இருந்து மூன்றாண்டு பட்டப்படிப்பு (TDC) அறிமுகப்படுத்தப்பட்டது. [5]

கல்லூரியில் வழங்கப்படும் படிப்புகள் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு: [4]

சங்கங்கள்

[தொகு]

கல்லூரியில் செயல்பட்டு வரும் சங்கங்களின் பட்டியல் பின்வருமாறு: [6]

  • ஆங்கிக் - பண்பாட்டு செயல்பாட்டுக்கான சங்கம்
  • சாகச விளையாட்டு செயல்பாடுகள்
  • அசாமி இலக்கிய சங்கம்
  • வானியல் சங்கம்
  • போஹேமியன் சோல்ஸ்- நாடக சங்கம்
  • விவாதம் செய்யும் சங்கம்
  • பொருளாதார சங்கம்.
  • கல்வி மற்றும் உளவியல் சங்கம்
  • தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரிவு
  • ஏண்டிக் மகளிர் கல்லூரி அறிவியல் சங்கம்
  • சுகாதார விழிப்புணர்வு பிரிவு
  • மனை அறிவியல் சங்கம்
  • தத்துவ ஆய்வு வட்டம்.
  • ஒளிப்பட சங்கம்
  • செம்பட்டை சங்கம்
  • சமசுகிருத சதானம்
  • ஸ்ரீஜன் - ஆக்கப்பூர்வமான எழுத்துக்கான சங்கம்
  • ஆங்கிலத்தில் படைப்பாற்றல் எழுதுவதற்கான சங்கம்
  • மகளிர் ஆய்வு ஆராய்ச்சி மையங்களின் மையம்

விழாக்கள்

[தொகு]

கல்லூரி ஆண்டு அமர்வின் போது இரண்டு முக்கிய விழாக்களைக் கொண்டாடப்படுகிறது: [3]

  • புதிய மாணவர் சமூகம்
  • சரசுவதி பூசை
  • பண்பாட்டு வாரத்தைத் தொடர்ந்து பண்பாட்டு இரவு

மாணவர் சங்கம்

[தொகு]

அண்டிக் மகளிர் கல்லூரி மாணவர் சங்கம் என்பது கல்லூரி மாணவிகளின் பேரவை ஆகும். கல்லூரியில் சேரும் ஒவ்வொரு மாணவியரும் அதன் உறுப்பினராக கட்டாயம் இருபார்கள். சங்கத்தின் நிர்வாகிகள் ஆண்டுதோறும் தேர்தல் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாணவர் சங்கமானது மாணவர்களிடையே விளையாட்டு, விவாதம், பண்பாட்டு நிகழ்வுகள், சமூக சேவை போன்ற பல்வேறு செயல்பாடுகளை ஏற்பாடு செய்கிறது. மாணவர்களின் திறன்களை வளர்க்கும் ஊடகமாக ஆண்டுதோறும் இதழ்களை வெளியிடுகிறது. [6]

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவிகள்

[தொகு]
  • சகுந்தலா சவுத்ரி, சமூக சேவகர். [7]
  • சுதக்சனா சர்மா, அசாமிய மொழி பாடகர் மற்றும் இசைக்கலைஞர். [8]
  • ரஜினி பசுமதரி இந்திய திரைப்பட நடிகை, இயக்குநர்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Nearly 3000 apply in Handique Girls College". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 June 2012. Archived from the original on 3 January 2013. பார்க்கப்பட்ட நாள் 4 August 2012.
  2. 2.0 2.1 2.2 2.3 "About Us". Handique Girls College. Archived from the original on 19 April 2012. பார்க்கப்பட்ட நாள் 4 August 2012.
  3. 3.0 3.1 3.2 "Hostels". Handique Girls College. Archived from the original on 7 September 2012. பார்க்கப்பட்ட நாள் 4 August 2012.
  4. 4.0 4.1 "Departments". Handique Girls College. Archived from the original on 7 September 2012. பார்க்கப்பட்ட நாள் 4 August 2012.
  5. 5.0 5.1 "Faculty". Handique Girls College. Archived from the original on 19 April 2012. பார்க்கப்பட்ட நாள் 4 August 2012.
  6. 6.0 6.1 "Students". Handique Girls College. Archived from the original on 7 September 2012. பார்க்கப்பட்ட நாள் 4 August 2012.
  7. Tribune, The Assam (2010-09-15). "Shakuntala Choudhary feted by Handique Girls College". assamtribune.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
  8. Desk, Sentinel Digital (2023-07-04). "Renowned singer Sudakshina Sarma passes away in Guwahati - Sentinelassam". www.sentinelassam.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏண்டிக்_மகளிர்_கல்லூரி&oldid=3903498" இலிருந்து மீள்விக்கப்பட்டது