எமெரி விதி
எமெரி விதி (Emery's rule) என்பது பூச்சியியல் வல்லுநர் கார்லோ எமெரியால் முன்மொழியப்பட்ட பரிணாமம் குறித்தி உயிரியல் விதிகளுள் ஒன்றாகும்.
விளக்கம்
[தொகு]1909ஆம் ஆண்டில், பூச்சியியல் வல்லுநர் கார்லோ எமெரி , பூச்சிகளிடையே சமூக ஒட்டுண்ணிகளாக இருப்பவை ஒட்டுண்ணி இனங்கள் அல்லது பேரினங்களுடன் நெருங்கிய தொடர்புடையவையாக இருக்கின்றன (எ.கா., க்ளெப்டோபராசைட்டுகள் ) என்று குறிப்பிட்டார்.[1][2] காலப்போக்கில், இந்த இன உறவுமுறை பல கூடுதல் நிகழ்வுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் இத்தொடர்பு இப்போது எமெரி விதி என்று அழைக்கப்படுகிறது. இது ஹைமனோப்டெராவின் பல்வேறு உயிரலகுகளில் மிகவும் பிரபலமானது. எடுத்துக்காட்டாக, சமூக குளவியான டோலிச்சோவ்சுபுலா அடெல்டெரினா இதன் பேரினத்தின் பிற சிற்றினங்களான, டோலிச்சோவ்சுபுலா நார்வேஜிகா மற்றும் டோலிச்சோவ்சுபுலா அரினேரியா மீது ஒட்டுண்ணி வாழ்க்கை வாழ்கிறது.[3][4] எமரியின் விதி பூஞ்சை, சிவப்புப் பாசி மற்றும் புல்லுருவி போன்ற பிற திணை உயிரினங்களுக்கும் பொருந்தும். இந்த முறையின் முக்கியத்துவமும் பொதுவான பொருத்தமும் இன்னும் விவாதங்களுக்குரிய விடயமாகவே இருக்கின்றன. ஏனெனில் பல விதிவிலக்குகளும் இதில் உள்ளன. இருப்பினும் இந்த நிகழ்வு நிகழும்போது ஒரு பொதுவான விளக்கம் என்னவென்றால், ஒட்டுண்ணிகள் ஓம்புயிரி இனங்களுக்குள்ளேயே சூழ்நிலைத் தகவுத்திறன் ஒட்டுண்ணிகளாகத் தொடங்கியிருக்கலாம் (சில வகை தேனீக்களில்).[5] சிற்றினங்களுக்கிடையேயான ஒட்டுண்ணியாக நன்கு அறியப்பட்டவை, பின்னர் இனப்பெருக்க ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டு, மூதாதையர் இனங்களிலிருந்து பிரிந்தன (மாற்றுவழிச் சிற்றினம் தோன்றல்).
ஒரு ஒட்டுண்ணி இனம் அதன் புரவலருக்கு ஒரு தொகுதிப் பிறப்பில் சகோதர குழுவாக இருக்கும்போது, அந்த உறவு எமரியின் விதியினை "கண்டிப்பாக" கடைப்பிடிப்பதாகக் கருதப்படுகிறது. ஒட்டுண்ணி ஓம்புயிருடன் நெருங்கிய உறவினராக இருக்கும். ஆனால் சகோதரி இனங்கள் அல்ல. இந்த உறவு விதிக்கு "தளர்வான" பின்பற்றலில் உள்ளது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Richard Deslippe (2010). "Social Parasitism in Ants". Nature Education Knowledge. பார்க்கப்பட்ட நாள் 2010-10-29.
In 1909, the taxonomist Carlo Emery made an important generalization, now known as Emery's rule, which states that social parasites and their hosts share common ancestry and hence are closely related to each other (Emery 1909).
- ↑ Emery, C. "Über den Ursprung der dulotischen, parasitischen und myrmekophilen Ameisen". Biologisches Centralblatt 29, 352–362 (1909)
- ↑ Carpenter, J. M., & Perera, E. P. (2006). Phylogenetic relationships among yellowjackets and the evolution of social parasitism (Hymenoptera: Vespidae, Vespinae). பரணிடப்பட்டது 2021-04-18 at the வந்தவழி இயந்திரம் American Museum Novitates, 1-19.
- ↑ Dvořák, L. (2007). Parasitism of Dolichovespula norwegica by D. adulterina (Hymenoptera: Vespidae). பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் Silva Gabreta, 13(1) 65-67.
- ↑ Wenseleers, Tom. "Intraspecific queen parasitism in highly eusocial bee" (PDF). Biology Letters. Royal Society Publishing. Archived from the original (PDF) on 28 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 9 July 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Hines, H. M., & Cameron, S. A. (2010). The phylogenetic position of the bumble bee inquiline Bombus inexspectatus and implications for the evolution of social parasitism. Insectes Sociaux, 57(4), 379-383.