உள்ளடக்கத்துக்குச் செல்

உலக மனிதநேய நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக மனிதநேய நாள்
பிற பெயர்(கள்)WHD
கடைபிடிப்போர்ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள்
நாள்19 ஆகத்து
நிகழ்வுஆண்டுதோறும்l

உலக மனிதநேய நாள் (World Humanitarian Day) என்பது மனிதாபிமானப் பணியாளர்களையும், மனிதாபிமான காரணங்களுக்காக தங்களது உயிர்களை இழந்தவர்களையும் நினைவுகூரும் ஒரு நாள் ஆகும். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் சுவீடனால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒன்றுக்கு அமைய இந்நாளை ஆண்டுதோறும் ஆகத்து 19 ஆம் நாள் கொண்டாடுவதெனத் தீர்மானிக்கப்பட்டது.[1] இந்நாளிலேயே ஐநா பொதுச் செயலரின் ஈராக்க்குக்கான சிறப்புத் தூதர் சேர்ச்சியோ வியெய்ரா டி மெல்லோ என்பவரும் அவரது 21 பணியாளர்களும் பகுதாது நகரில் குண்டுத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டனர்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை Session 63 Resolution A-63-L.49. World Humanitarian Day A/63/L.49 11 December 2008. Retrieved 2008-12-11.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_மனிதநேய_நாள்&oldid=2564880" இலிருந்து மீள்விக்கப்பட்டது