இலியுகோபேனைட்டு
இலியுகோபேனைட்டு Leucophanite | |
---|---|
விளிம்பில் 4-5 மி.மீ நீளம் கொண்ட ஊசிகளாக இலியுகோபேனைட்டு | |
பொதுவானாவை | |
வகை | இனோசிலிக்கேட்டு |
வேதி வாய்பாடு | (Na,Ca)2BeSi2(O.OH.F)7 |
இனங்காணல் | |
படிக அமைப்பு | நேர் சாய்சதுரம் |
மேற்கோள்கள் | [1][2][3][4][5] |
இலியுகோபேனைட்டு (Leucophanite) என்பது (Na,Ca)2BeSi2(O.OH.F)7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். கால்சியம் இடம்பெற்றுள்ள இடத்தில் சீரியம் தனிமம் பதிலீடாக இடம்பெற்றும் இக்கனிமம் அறியப்படுகிறது. இனோசிலிக்கேட்டு வகை கனிமமாக அணைவுக் கூட்டமைப்பில் இலியுகோபேனைட்டு காணப்படுகிறது.
கியூபெக், உருசியா போன்ற நாடுகளில் மஞ்சள், பச்சை, வெண்மை நிறங்களில் பெக்மாடைட்டு தீப்பாறைகளாகவும் கார வகை அணைவுப் பாறைகளாகவும் முச்சாய்வு படிகங்களாக இலியுகோபேனைட்டு தோன்றுகிறது. நார்வே, கியூபெக், உருசியா ஆகிய நாடுகளில் கிடைக்கிறது.
1840 ஆம் ஆண்டு நார்வே நாட்டின் லாங்கசுன்டிபோர்டு மாவட்டத்தில் இலியுகோபேனைட்டு முதன் முதலில் கண்டறியப்பட்டது. கிரேக்க மொழியில் வெண்மை என்ற பொருள் கொண்ட இலியுகோசு என்ற சொல்லையும் தோற்றம் என்ற பொருள் கொண்ட பேனின் என்ற சொல்லையும் சேர்த்து இலியுகோபேனைட்டு என்ற பெயர் உருவாக்கப்பட்டது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் இலியுகோபேனைட்டு கனிமத்தை Lph[6] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mineralienatlas
- ↑ Mindat
- ↑ Webmineral data
- ↑ Mineral data publishing - PDF
- ↑ Mineral galleries பரணிடப்பட்டது 2006-09-07 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.