உள்ளடக்கத்துக்குச் செல்

இராம் கோபால் (நடனக் கலைஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம் கோபால், கார்ல் வான் வெக்டனின் புகைப்படம், 1938.

பிஸ்ஸானோ ராம் கோபால் (Bissano Ram Gopal) (பிரித்தானிய அரசின் ஒழுங்கு ) (20 நவம்பர் 1912 [1] - 12 அக்டோபர் 2003) ஒரு இந்திய நடனக் கலைஞரும் நடன இயக்குனருமான ஆவார். இவர் பெரும்பாலும் ஒரு தனிப்பாடலாக நடித்து தனது நீண்ட வாழ்க்கை முழுவதும் விரிவாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஒரு நவீனத்துவவாதியான இவர், பாரம்பரிய இந்திய நடனத்தை பாலே ஆடற்கலையுடன் இணைத்து நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்.[2] மேலும், இந்திய நடனக் கலைஞர் உதய் சங்கருடன் சேர்ந்து 1930களில் மேலை நாடுகளில் இந்தியப் பாரம்பரிய நடனத்தை முதன்முதலில் வெளிப்படுத்தவும் செய்தார்.[3] போலந்து விமர்சகர் ததேயஸ் ஜெலென்ஸ்கி இவரை "இந்தியாவின் நிஜின்ஸ்கி" என்று அழைத்தார். "

ஒரு நடன இயக்குனராக, லெஜண்ட் ஆஃப் தாஜ்மஹால், டான்ஸ் ஆஃப் தி செட்டிங் சன், டான்ஸஸ் ஆப் இந்தியா போன்ற தனது நடனத் தயாரிப்புகளுக்காக மிகவும் பிரபலமானவர்.[4] 1960 ஆம் [5] நடனக் கலைஞரான அலிசியா மார்கோவாவுடன் இணைந்து நிகழ்த்திய "இராதா-கிருஷ்ணா" என்ற நிகழ்ச்சிக்காவும் இவர் குறிப்பிடப்படுகிறார் [6]

சொந்த வாழ்க்கை

[தொகு]

கோபால், இந்தியாவின் பெங்களூரில் 1912 நவம்பர் 20 ஆம் தேதி பிறந்தார். ஒரு பர்மிய தாயும், ஒரு பாரிஸ்டரான ராஜ்புத் தந்தையும் இவரது பெற்றோராவர்.[2][7] இவரது பாட்டி நன்கு அறியப்பட்ட நடனக் கலைஞர். தனது வாழ்க்கையில் ஆரம்பத்தில் குஞ்சு குருப் மற்றும் சந்து பானிக்கர் ஆகியோரிடம் கதகளியைக் கற்றார். [8]

1940களின் ஆரம்பத்தில், இவர் பநதநல்லூர் பாணியின் குரு மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடமும் அதைத் தொடர்ந்து முத்துகுமரன் பிள்ளையிடமும் பரதநாட்டியம் கற்கத் தொடங்கினார்.[9] அவர் சோஹன்லால் மற்றும் பௌரி பிரசாத் ஆகியோரிடமிருந்து கதக் கற்றுக் கொண்டார். பின்னர், மணிப்பூரி நடனம் கூட கற்றுக் கொண்டார்.[8]

நடனத்தில் இவரது பணியைப் பாராட்டி பிரித்தானிய அரசு 1990 ஆம் ஆண்டில் பேரரசின் ஒழுங்கு என்னும் கௌரவத்தை வழங்கியது.[10] பின்னர், 1990 ஆம் ஆண்டில் இந்தியாவின் இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான தேசிய அகாதமியான சங்கீத நாடக அகாதமி தனது சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் [3] என்ற கௌரவத்தை வழங்கியது

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

1960 களில், இலண்டனின் செல்சியாவில் வசித்து வந்தபோது, எடித் அலெக்சாண்டர் என்பவரை மணந்தார். எடித் விரைவிலேயே மறைந்தார். தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை.[7]

இறப்பு

[தொகு]

இவர் இங்கிலாந்தின் தெற்கு இலண்டனில் உள்ள குரோய்டோனில் இறந்தார்.[11][12]

படைப்புகள்

[தொகு]
  • Indian dancing, by Ram Gopal, Serozh Dadachanji. Phoenix House, 1951.
  • Ram Gopal: rhythm in the heavens : an autobiography, by Ram Gopal. Secker and Warburg, 1957

மேற்கோள்கள்

[தொகு]
  1. His passport gives his year of birth as 1917, but his contemporaries insisted it must have been closer to 1912 –
  2. 2.0 2.1 "Obituary: Ram Gopal: Classical Indian dancer who introduced the west to the ethos and discipline of his homeland's traditional art". https://www.theguardian.com/news/2003/oct/13/guardianobituaries.india. 
  3. 3.0 3.1 "Classical dancer Ram Gopal dies in London". http://www.indianexpress.com/oldStory/33522/. 
  4. "Obituary: Ram Gopal". The Daily Telegraph. 24 October 2003. https://www.telegraph.co.uk/news/obituaries/1444926/Ram-Gopal.html. 
  5. Markova her life and art by Anton Dolin W.H. Allen london 1955
  6. "Ram Gopal, Dancer Who Opened Western Eyes to India, Dies". த நியூயார்க் டைம்ஸ். 15 October 2003. https://www.nytimes.com/2003/10/15/obituaries/15GOPA.html. 
  7. 7.0 7.1 "Obituary: Ram Gopal". The Daily Telegraph. 24 October 2003. https://www.telegraph.co.uk/news/obituaries/1444926/Ram-Gopal.html. 
  8. 8.0 8.1 "Ram Gopal: the legend". டெக்கன் ஹெரால்டு. 26 October 2003 இம் மூலத்தில் இருந்து 5 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140505104959/http://archive.deccanherald.com/deccanherald/nov02/at4.asp. 
  9. "Ambassador of Indian dance". 24 October 2003 இம் மூலத்தில் இருந்து 10 நவம்பர் 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031110171622/http://www.hindu.com/fr/2003/10/24/stories/2003102401720500.htm. 
  10. "Obituary: Ram Gopal: Classical Indian dancer who introduced the west to the ethos and discipline of his homeland's traditional art". தி கார்டியன். 13 October 2003. https://www.theguardian.com/news/2003/oct/13/guardianobituaries.india. 
  11. Theatre World, Vol. No. 60 (2003–2004), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55783-650-7/பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55783-651-5
  12. ObiTribute: Ram Gopal (1912–2003), by Ashish Mohan Khokar, Bangalore narthaki.

வெளி இணைப்புகள்

[தொகு]