உள்ளடக்கத்துக்குச் செல்

இராமேசுவரம் பெருஞ்சிலந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Poecilotheria hanumavilasumica
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
Mygalomorphae
குடும்பம்:
Theraphosidae
துணைக்குடும்பம்:
Poecilotheriinae
பேரினம்:
Poecilotheria
இனம்:
P. hanumavilasumica
இருசொற் பெயரீடு
Poecilotheria hanumavilasumica
Smith & Carpenter, 2004
வேறு பெயர்கள்
  • Rameshwaram Ornamental
  • Rameshwaram Parachute Spider

இராமேசுவரம் பெருஞ் சிலந்தி (Poecilotheria hanumavilasumica) என்பது தமிழ்நாட்டின் இராமேசுவரம் தீவில் காணப்படும் ஒருவகைச் சிலந்தியாகும்.

கண்டுபிடிப்பு

[தொகு]

இராமேசுவரம் அனுமார் கோயில் அருகே உள்ள புளிய மரங்களில் இந்தப் பெருஞ் சிலந்தியை ஆண்ட்ரூ ஸ்மித் என்பவர் 2004 இல் கண்டுபிடித்தார்.[1] அனுமார் கோயில் அருகே ஆண்ட்ரூ ஸ்மித் கண்டுபிடித்ததால் அவரின் பெயரையும் அனுமார் பெயரையும் இணைத்துப் பொயெசிலோதுரியா ஹனுமான்விலாசுமிகா (Poecilotheria hanumavilasumica) என்ற விலங்கியல் பெயர் இதற்குச் சூட்டப்பட்டது. இராமேசுவரம் பாராசூட் ஸ்பைடர் (Rameshwaram Parachute Spider) என்று ஆங்கிலத்தில் இந்தச் சிலந்தி அழைக்கப்படுகிறது.

தோற்றம்

[தொகு]

புளிய மரப்பொந்துகளில் காணப்படும் இந்தச் சிலந்திகள் சுமார் 8 அங்குல நீளம் கொண்டது. பார்ப்பதற்கு மனித முகம் அளவு காணப்படுகிறது. சிலந்தியின் கால்களில் மஞ்சள் நிறக்கோடுகள் காணப்படும். பொயெசிலோதெரியா (Poecilotheria) எனப்படும் இந்தப் பெருஞ்சிலந்தி தென் அமெரிக்கக் காடுகளில் வாழும் உலகின் மிகப்பெரிய சிலந்தியான கோலியாத் போர்ட் ஈட்டர் சிலந்தி வகைகளைச் சேர்ந்தது. இந்தச் சிலந்தியின் நச்சுத்தன்மை பாம்புகள், எலிகள், பூச்சிகளைக் கொல்லக்கூடியது. ஆனால் மனிதரை ஒன்றும் செய்யாது.

அழியும் நிலை

[தொகு]

இராமேசுவரத்தில் இந்தப் பெருஞ்சிலந்திகளைக் கணக்கெடுத்தபோது சுமார் 500-க்கும் குறைவான சிலந்திகளே கண்டெடுக்கப்பட்டன. இவை பார்ப்பதற்குப் பெரியதாக இருப்பதால் மக்கள் பயத்தினால் அடித்துக் கொன்றுவிடுகின்றனர். இதனால் இந்தச் சிலந்திகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.[2]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 Siliwal, M., Molur, S. & Daniel, B.A. (2008). "Poecilotheria hanumavilasumica". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)CS1 maint: multiple names: authors list (link)
  2. அழிவின் விளிம்பில் ராமேசுவரம் ராட்சத சிலந்தி: கள ஆய்வு நடத்தி பாதுகாக்க கோரிக்கை தி இந்து (தமிழ்), 07.02.2015