இந்திய அரசியலமைப்பின் முகப்புரை
இந்திய அரசியலமைப்பு தொடரின் ஒரு பகுதி |
---|
முகப்புரை |
இந்திய அரசியலமைப்பின் முகப்புரை (भारतीय संविधान की उद्देशिका; The Preamble of Indian Constitution) என்பது இந்திய அரசியலமைப்பின் அறிமுகப்பகுதியாகும். முகப்புரை எழுத்துருச் சட்டத்திற்கான அறிமுகம் எனக்குறிப்பிடலாம். இது அரசியல் அமைப்பின் அறிமுகப் பகுதியாகும்.[1] ஓர் எழுத்துருச் சட்டத்தின் முகப்புரை சட்டமியற்றக் கருதலை திறப்பதற்கான ஒரு திறவுகோல் ஆகும்.[2] பெருபாரி வழக்கில்[3] உச்சநீதிமன்றம் அரசியல் அமைப்பின் முகப்புரை "உருவாக்கியவர்களின் மனதை திறப்பதற்கான ஒரு சாவி மற்றும் அரசியல் அமைப்பில் அவர்கள் உருவாக்கிய பல்வேறு ஏற்பாடுகளின் பொது தேவையாது என்று காட்டுகிறது" எனக் கூறியுள்ளது.
முகப்புரை அரசியல் அமைப்பின் ஒரு பாகம்
[தொகு]சாதாரண ஓர் எழுத்துருச் சட்டத்தில் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள முகப்புரைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை, மேலும் அது அத்தகைய எழுத்துருச் சட்டத்தின் பாகமாகவும் அங்கிகரிக்கப்படுவதில்லை. ஆனால், அரசியல் அமைப்புடன் இணைக்கப்படும் முகப்புரைக்கு அணைத்து வித முக்கியத்துவமும் தரப்படும். முனைவர் டீ.டீ.பாசு-வின் கூற்றின் படி "ஓர் எழுத்துருச் சட்டம் முழுமையாக வாசிக்கப்பட வேண்டும் மற்றும் இயற்றப்பட்ட பாகம் என்ற நிலைக்கு முகப்புரை எழுத்துருச் சட்டத்தின் பாகமாகும்"[4]
இதை உருவாக்கிய அரசியல் நிர்ணய சபையின் செயல்பாடுகளில் இருந்து, இந்திய அரசியல் அமைப்பிற்கான முகப்புரை, அரசியல் அமைப்பின் ஏனைய பாகங்களைப் போன்று இயற்றப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது தெளிவாக புரிந்து கொள்ள முடியும். முகப்புரை அரசியல் அமைப்பு நிர்ணய சபையின் வாக்கெடுப்பிற்கு உள்ளாக்கப்படப் போது "முகப்புரை அரசியல் அமைப்பின் பாகமாக நிலைகொள்ளும்" என்று எடுத்துரைக்கப்பட்டு இருந்தது, அது எடுத்துரைக்கப்பட்ட முறையிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டது. ரீ பெருபாரி யூனியன் வழக்கில் இந்த சங்கதி (fact) உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை, இதனால் உச்சநீதிமன்றம் முகப்புரை அரசியல் அமைப்பின் பாகம் அல்ல எனக்கூறியது. பின்பு, கேசவானந்த பாரதி வழக்கில்[5] முகப்புரை வரையப்பட்ட வரலாறும் அது இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதும் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதின் விளைவாக, உச்சநீதிமன்றம், இந்திய அரசியல் அமைப்பிற்கான முகப்புரை, இந்திய அரசியல் அமைப்பின் உள்ளார்ந்த ஒரு பாகம் ஆகும் என வகுத்துக்கூறியது. உச்சநீதிமன்றம் மேலும் கூறியதாவது "முகப்புரை ஒன்றிணைந்த அமெரிக்க நாடுகளின் அரசியல் அமைப்பின் முகப்புரையைப் பற்றிக் கூறுவதுப் போன்று அரசியல் அமைப்பிற்கு முன்னால் நடந்துச் செல்வதல்ல".
முகப்புரையின் உள்ளடக்கம்
[தொகு]நாம், இந்திய மக்கள்......
[தொகு]முகப்புரை "நாம், இந்திய மக்கள்" (We, the people of India) ஆகிய வார்த்தைகளுடன் திறக்கிறது. இந்த வார்த்தைகள் எந்தவொரு மாற்று கருத்தும் இன்றி, இந்த அரசியல் அமைப்பு இந்திய மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களே இயற்றி அவர்களுக்கே நல்கிக்கொண்டது என தெரிவுறுத்துகிறது. இது தெரிவுப்படுத்துவது என்னவென்றால் இந்தியாவின் முழு இறைமாட்சியை இந்திய மக்கள் தங்களிடத்திலயே தக்கவைத்துள்ளனர் என்பதாகும். அரசியல் அமைப்பை உருவாக்கியவர்கள் தேசம் முழுமைக்குமான சார்பாளர்கள் என்று கூறப்படாததாலும் மக்களின் நேரடி வாக்கெடுப்பினால் சரிபார்க்காததாலும், இது வரலாற்று உண்மையில்லை என்று இந்த சங்கதியை தர்கிக்க முடியும்.
இறையாண்மை சமூகத்துவ சமயசார்பற்ற ஜனநாயக குடியரசு
[தொகு]இறையாண்மை
[தொகு]"இறையாண்மை" (sovereign) என்றச் சொல் அதிகாரம் அதன் சொந்த சுற்றுவட்டத்திற்குள் முழுமையானதும் கட்டுப்பாடற்றதும் எனக்குறிப்பிடுகிறது[6]. இது இந்திய ஒருபோதும் வெளியில் உள்ள அதிகார அமைப்பை சார்ந்து இருக்காது என்றும் இந்திய உள்ளார்ந்தும் வெளியார்ந்தும் இறைமாட்சியாகும் என விளக்குகிறது.
சமூகத்துவம்
[தொகு]"சமூகத்துவ" (socialist) என்றச் சொல் முகப்புரையில் அரசியலமைப்பு (42-வது சீர்திருத்த) செய்யுள், 1976 (The Constitution (42nd Amendment) Act, 1976) -ன் வாயிலாக உட்படுத்தப்பட்டதாகும். சமூகத்துவம் என்றச் சொல் உற்பத்தி, விநியோகம் மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றின் நடத்திப்பு நாட்டுடமை ஆக்கப்பட்ட அரசியல் முறையைக் குறிக்கும். இங்கு, இதை இவ்வாறு பொருள்விளக்கி கூறமுடியாது. திரு ஸ்வான் சிங்க் ஆவடியில் நடந்த அகில இந்திய காங்கிரசு செயற்குழு (AICC) கூட்டத்தில், இந்த 'சமூகத்துவம்' (socialism) என்றச் சொல் கலப்பு பொருளாதாரம் என்ற குறிக்கோளில் சுருங்குவதாகும் என்றும், அதற்கு மேல் ஒன்றும் இல்லை எனக்கூறியுள்ளார். மேலும் திருமதி இந்திரா காந்தி, முதன்மை அமைச்சராக (Prime Minister) இருந்தபோது, இந்தியாவில் சமூகத்துவ என்றச் சொல் 'வாய்ப்பு சமத்துவம்' அல்லது 'மக்களுக்கு ஒரு மேலான வாழ்க்கை' என்ற நாட்டின் குறிக்கோளை குறிக்கிறது என்று விளக்கியுள்ளார். அவர் ஜனநாயகத்தைப் போன்று சமூகத்துவமும் மாறுபட்ட நாடுகளில் மாறுபட்ட ரீதியில் பொருள்விளக்கக் கூடியது என்று கூறினார். அவர், இதனால் தெளிவுபடுத்துவது என்னவென்றால் சமூகத்துவத்தை பற்றி இந்தியாவிற்கு சொந்த கருத்துள்ளது என்பதாகும் மற்றும், அவர் முழுக்க தேவைப்படுவது மக்களுக்கான மேலான வாழ்க்கையாகும்.
1789 ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சியின் போது சுதந்திரம்,சமத்துவம்,சகோதரத்துவம் ஆகியன முக்கிய முழக்கங்களாயின. இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இவற்றிற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
சமயசார்பின்மை
[தொகு]"சமயசார்பற்ற" (secular) என்றச் சொல்லும் அரசியலமைப்பு (42-வது சீர்திருத்த) செய்யுள், 1976-ன் வாயிலாக உட்படுத்தப்பட்டது ஆகும். நாடு எந்தவொரு சமயத்தையும் நாட்டு சமயமாக அங்கிகரிக்காது, மற்றும் தனிநபர்களின் சமய, நம்பிக்கை அல்லது வழிபாடு உரிமையில் எந்தவிதத்திலும் தலையிடாமல் சமமாக மதித்தலெ இதன் விளக்கமாகும்[7]. இதன் பொருள் நாடு சமயமற்றது என்றோ அல்லது இந்தியா சமயத்திற்கு எதிரானது என்றோ பொருள் இல்லை. சமயத்தின் காரியத்தில் நாடு நடுநிலையானதாகும். இது எந்தவொரு சமயத்தை பின்பற்றவோ பரப்பவோ செய்யாது, சமய நடத்திப்புகளில் தலையிடவும் செய்யாது. அதாவது, நாடு மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்புக்கு உட்பட்டதாகது. இது மனிதனுக்கும் மனிதனுக்கும் தொடர்புடன் உட்பட்டதாகும்.
ஜனநாயகம்
[தொகு]இந்தியாவின் அரசியல் கட்டமைப்பு ஒரு ஜனநாயக குடியரசு என்ற நிலைக்காகும். ஜனநாயகம் என்றால் ஜனங்களால் ஆன அரசு அமைப்பு என்பதாகும். இங்கு நாட்டின் வயது வந்தோர் அரசு நிர்வாகத்தில் நேரடியாக அல்லது மறைமுகமாக பங்குவகிக்கிறார்கள். ஜனநாயகம் நேரடி ஜனநாயகம் அல்லது மறைமுக ஜனநாயகமாக இருக்கலாம். நேரடி ஜனநாயகத்தில் அணைத்து ஜனங்களும் அரசு அதிகாரத்தை செயல்படுத்துகிறார்கள். அரசியல் அமைப்பை மாற்றியமைப்பது உள்பட உள்ள வாக்கெடுப்புகளில் ஜனங்கள் பங்கேற்கின்றனர். மறைமுக ஜனநாயகம் ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளர்கள் நேரடியாக அரசை நிர்வாகம் செய்வதாகும். இந்தியா மறைமுக ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்ட நாடாகும்.
குடியரசு
[தொகு]ரிப்பப்ளிக் (Republic) என்பது ஒரு வகையான அரசு முறையாகும், இதில் நாட்டின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், மற்றும் க்ரேட் பிரிட்டனில் மன்னர் போன்று ஒரு மரபிய முடியரசு அல்லாதது ஆகும். றிபப்லிக் இரண்டு வகைப்படும் குடியாட்சி மற்றும் குடியரசு. குடியாட்சி என்றால் நாட்டின் அல்லது தேசத்தின் ஆட்சியக (executive) தலைவரே நாட்டின் தலைவராக செயல்படுவதாகும். குடியரசு என்றால் அரசுத் தலைவர் நாட்டின் தலைவராக செயல்படுவதாகும். இந்திய அரசியல் அமைப்பு இந்தியாவை 'குடியரசு முறை அரசாக' கட்டமைத்துள்ளது, இதில் முழுமையான அதிகாரம் நாட்டு மக்களிடம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய குடியரசு முடியரசுக்கான மாற்றாகும். ஆனாலும், இந்திய தலைவர் என்ற படலம் ஆட்சியகம் (Executive) என்ற தலைப்பின் கீழ் வருவது குழப்பத்தை ஏற்படுத்துவதாகும். ஏனெனில் இந்திய தலைவர் என்றப் பதவி பிரித்தானிய மன்னர் (crown) -க்கு இணையான பதவியாகும், அல்லாமல், ஒன்றிணைந்த அமெரிக்க நாடுகளின் தலைவரின் பதவிக்கு இணையானது அல்ல.
நீதி, தன்செயலுரிமை, சமத்துவம் ஆகிய உறுதி
[தொகு]சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி
[தொகு]இந்திய அரசியலமைப்பு குடிமக்களுக்கு சமூக, பொருளாதார, அரசியல் நீதியை (JUSTICE, social, economic and political) உறுதிசெய்ய முன்மொழிகிறது.
இதில் சமூக நீதி (social justice) என்றால் நலன், வாய்ப்பு, நிலை, எண்ணிக்கை, சமயம், ஜாதி, பட்டம் மற்றும் இதைப் போன்ற பாகுபாடுகளினால் ஏற்படும் அனைத்து விதமான சமத்துவம் இல்லாய்மையை களைதல் என்பதாகும்[8]. இதை அடைவதற்கான வழிமுறைகள் அரசியலமைப்பின் பாகம் நான்கில் கூறப்படுகிறது.
பொருளாதார நீதி (economic justice) என்ற கூற்றின் பொருள் பொருளாதார அழுத்த நிலைப்புள்ளியில் இருந்துள்ள நீதியாகும். சுருக்கக் கூறினால் சம வேலைக்கு சம கூலி என்பதாகும். அதாவது அனைத்து நபர்களுக்கும் ஜாதி, பாலினம் அல்லது சமூக நிலை என்பவைக்கு அப்பால் உழைப்பிற்கான நியாயம் கிடைத்தாக வேண்டும் என்பதாகும்.
அரசியல் நீதி (political justice) என்றால் அரசியல் காரியங்களில் ஆட்களுக்கிடையெ எந்தவொரு தேவையற்ற வேற்றுமையும் இருக்காது என்பது ஆகும். அரசியல் நீதியை உறுதிசெய்ய, அரசியலமைப்பு அகிலாண்ட வயதுவந்தார் வாக்குரிமை (universal adult suffrage) முறையை ஏற்றுக்கொண்டுள்ளது.
எண்ணம், கருத்து, பக்தி, நம்பிக்கை மற்றும் வழிபாடு தன்செயலுரிமை
[தொகு]தன்செயலுரிமை (liberty) நேர்மறையாக காண்பது போன்று எதிர்மறையாகவும் காணமுடியும். எதிர்மறை கூற்றில் நாட்டின் பாகத்தில் இருந்து தனிநபர் செயல்பாட்டில் எந்தவொரு தலையீடும் இருக்காது என்பதாகும். நேர்மறையாக கண்டால், தேசிய வாழ்க்கைக்கு பொருத்தமாக இருக்க வேண்டி தனிநபர் உரிமைகளை அமைத்து தருதலாகும். அரசியலமைப்பு எண்ணம், கருத்து, பக்தி, நம்பிக்கை மற்றும் வழிபாடு ஆகியவற்றிற்கான தன்செயலுரிமை தனிநபர் மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானது என்று கண்டு இவற்றை உறுதிசெய்ய முன்மொழிகிறது[9].
படிநிலை மற்றும் வாய்ப்பு சமத்துவம்
[தொகு]சமயம், எண்ணிக்கை, ஜாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் குடிமக்களுக்கு இடையிலான அனைத்து விதமான வேற்றுமைகள் அல்லது வேறுபாடுகளை களைவதனால், சிறப்பு பெயர் மற்றும் தீண்டாமை ஆகியன களைவதின் வாயிலாக பொது இடங்களை அனைவருக்கும் திறந்து கொடுப்பதனால், நாட்டின் கீழ் உள்ள எந்தவொரு அலுவலகத்திலும் வேலைவாய்ப்பு அல்லது நியமிப்பு தொடர்பான காரியங்களில் சம வாய்ப்பு உறுதி செய்வதனால் இந்திய மக்களுக்கு படிநிலை மற்றும் வாய்ப்பு சமத்துவம் (equality of status and of opportunity) உறுதிசெய்ய வேண்டுகிறது.
உடன்பிறப்புணர்வு, தனிநபர் கண்ணியம், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைபாடு
[தொகு]உடன்பிறப்புணர்வு (fraternity) என்பது அனைத்து ஜனங்களும் ஒரே தாய்நாட்டின் ஒரே மண்ணின் மைந்தர்கள் என்ற உணர்வைக் கொண்டிருந்தலாகும். இந்திய எண்ணிக்கை, சமயம், மொழி மற்றும் பண்பாடு ஆகியவற்றால் வேறுபட்டு கிடப்பதை கவனத்தில் கொண்டெ வரைவு செயற்குழு இதை முகப்புரையில் இணைத்தது. அரசியலமைப்பில் உடன்பிறப்புணர்வை வெளிப்படுத்தி எடுத்துரைக்கும் ஏற்பாடுகள் ஏதும் இல்லை. என்றாலும், அரசியலைப்பில் பொது குடித்துவம், இந்திய குடிமகன் இந்திய ஆட்சிப்பகுயின் எந்தவொரு இடத்திற்கும் விருப்பத்திற்கு செல்ல, தங்க மற்றும் வசிக்க, எந்தவொரு தொழில், வணிகம், வாணிபம் செய்திட உள்ள உரிமை தொடர்பான ஏற்பாடுகள் உடன்பிறப்புத்துவ ஊக்கத்தை உருவாக்குகிறது[10].
உடன்பிறப்புணர்வை பரப்பிட வேண்டி தனிநபர் கண்ணியம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஆகையால், முகப்புரையில் கூறப்படுகிற கண்ணியம் ஒவ்வொரு தனிநபர் சார்ந்ததாகும். இது அனைத்து நபர்களுக்கும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதால் கிடைக்க செய்கிறது மற்றும் அதேவேளையில், இதை அடைவதற்கு அரசாங்கத்திற்கான வழிகாட்டல் நெறிக்கொள்கையில் தரமான வாழ்க்கை, மனித தகுதிக்கான நியாயமான வேலை ஆகியன கூறப்படுகிறது.தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டை நிலைநாட்ட வேண்டியே உடன்பிறப்பு என்ற உணர்வு காக்கப்படுகிறது.
1949, நவம்பர் இருபத்தி-ஆறாம் நாள்
[தொகு]முகப்புரை இந்திய மக்கள் அரசியலமைப்பை ஏற்று, இயற்றி, தங்களுக்கே 1949, நவம்பர் இருபத்தி-ஆறாம் நாள் தந்து கொண்டனர் என கூறுகிறது. ஆனால், அரசியலமைப்பு நடைமுறைக்கு வரும் நாளாக 1950, ஜனவரி இருபத்தி-ஆறு நிச்சயிக்கப்பட்டுள்ளது. உறுப்பு 394 அரசியல் அமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளான 1949, நவம்பர் இருபத்தி-ஆறு அன்று 5, 6, 7, 8, 9, 60, 324, 367, 379 மற்றும் 394 ஆகிய உறுப்புகள் நடைமுறைக்கு வரும் என்றும், ஏனைய ஏற்பாடுகள் 1950, ஜனவரி இருபத்தி-ஆறு அன்று நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முகப்புரை
[தொகு]“ | நாம், இந்திய மக்கள், உறுதி கொண்டு முறைப்படி தீர்மானித்து, இந்தியாவை ஓர் இறையாண்மை சமூகத்துவ சமயசார்பற்ற ஜனநாயக குடியரசாக கட்டமைத்திட, மற்றும் இதன் எல்லா குடிமக்களுக்கும்
மற்றும் தனிநபர் கண்ணியத்தையும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டையும் உறுதிப்படுத்த அனைவரிடத்திலும் உடன்பிறப்புணர்வை ஊக்குவித்திட. இந்த 1949, நவம்பர் இருபத்தி-ஆறாம் நாள் நம்முடைய அரசியல் நிர்ணய சபையில் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு முறைமையை, இதன்படி ஏற்று, சட்டமாக்கி நமக்கு தருகிறோம். |
” |
மேற்கோள்
[தொகு]- ↑ Collins, New Gem Dictionary
- ↑ புர்ராகூர் கோல் கம்பெனி லிமிடெட் v. இந்திய ஒன்றியம், AIR 1961 SC 954
- ↑ Re Berubari Union and Exchange of Enclaves, Reference by the President under Article 143(1), AIR 1960 SC 845
- ↑ D.D.BASU, Commentary on the constitution of India, S.C.Sarkar & Sons (p) Ltd. Calcutta, vol.A 1982, 139
- ↑ Kesavananda Bharati v. State of Kerala AIR 1973 SC 1461
- ↑ Salmond's Jurisprudence, 1948, 143
- ↑ M.G.P. Nair v. State of Kerala, AIR 2005 SC 3053
- ↑ Consumer Educational & Research Centre v. Union of India, AIR 1995 SC 922
- ↑ articles 19(1)(a) and 25 to 28
- ↑ Seervai, H.M., Constitutional Law of India, 1, 1991, 282