இசுபீசிசு பிளான்டாரம்
முதல் பதிப்பின் அட்டைப்படம் | |
நூலாசிரியர் | கரோலஸ் லின்னேயஸ் |
---|---|
நாடு | சுவீடன் |
மொழி | இலத்தீன் |
பொருண்மை | தாவரவியல் |
வெளியிடப்பட்டது | இலாரன்சியசு சால்வியசு (1 மே 1753) |
ஊடக வகை | அச்சுப் பதிப்பு |
பக்கங்கள் | xi, 1200 + xxxi |
OCLC | 186272535 |
இசுபீசிசு பிளான்டாரம் (Species Plantarum; தமிழில் தாவரச் சிற்றினங்கள்) என்பது கரோலஸ் லின்னேயஸ் எழுதிய புத்தகம் ஆகும். இதன் முதல் பதிப்பு 1753-ல் வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தில் புத்தகம் வெளிவந்த நேரத்தில் அறியப்பட்ட அனைத்து வகையான தாவர சிற்றினங்களையும் பட்டியலிட்டு இருந்தது. இந்தப் புத்தகம் இருசொற் பெயரீடு முறையினைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கான முதல் முயற்சியாகவும் தாவரங்களுக்குப் பெயரிடுவதற்கான தொடக்கப் புள்ளியாகவும் அமைந்தது.
வெளியீடு
[தொகு]தாவரச் சிற்றினங்கள்[Note 1] புத்தகமானது மே 1, 1753 அன்று லாரன்டியஸ் சால்வியஸ் ஸ்டாக்ஹோமில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டது.[1][2][Note 2] இதன் இரண்டாவது பதிப்பு 1762-1763-ல் வெளியிடப்பட்டது.[1] மூன்றாவது பதிப்பு 1764-ல் வெளியிடப்பட்டது. மூன்றாவது பதிப்பிற்கும் இரண்டாவது பதிபிற்கும் வேறுபாடு அதிகமில்லை.[4] பெர்லின் தாவரவியல் பூங்காவின் இயக்குநரான கார்ல் லுட்விக் வில்டெனோவின் வழிகாட்டுதலின் கீழ் 1778-ல் லின்னேயஸ் இறந்த பிறகு மேலும் பதிப்புகள் வெளியிடப்பட்டன. இதன் ஐந்தாவது பதிப்பு 1800ஆம் ஆண்டு நான்கு தொகுதிகளாக வெளியிடப்பட்டது.[5]
முக்கியத்துவம்
[தொகு]தாவரச் சிற்றினங்கள் எந்தவொரு பெரிய உயிரினங்களுக்கும் பெயரிடும் இருசொற் பெயரீடு முறையை முழுமையாகத் தொடர்ந்து பயன்படுத்திய தாவரவியல் புத்தகமாகும்.(லினேயஸின் சிசுடமா நேச்சரேவின் பத்தாவது பதிப்பு 1758-ல் முதன்முறையாக விலங்குகளுக்கும் இதே நுட்பத்தைப் பயன்படுத்தினர்). இந்த புத்தக வெளியீட்டிற்கு முன்னர், ஒரு தாவரச் சிற்றினம், பிளாண்டகோ ஃபோலிஸ் ஓவாடோ-லான்சோலாடிஸ் புபெசென்டிபஸ், ஸ்பிகா சிலிண்டிரிகா, ஸ்காபோ டெரெட்டி (Plantago foliis ovato-lanceolatis pubescentibus, spica cylindrica, scapo tereti) என நீண்ட பல்லுறுப்புக்கோவை மூலம் அறியப்பட்டது. இதன் பொருள் "பளபளப்பான முட்டை-ஈட்டி வடிவ இலைகள் கொண்ட வாழைமரம், ஒரு உருளை வடிவ கூர்மையான குறுகலான தரைக்காம்புடன் கூடியது"[6] அல்லது நேபெட்டா புளோரிபஸ் இண்டெரப்டி இசுபைகாடிசு பெடுங்குலேடிஸ் (Nepeta floribus interrupte spicatis pedunculatis)(அதாவது "தண்டு, குறுக்கிடப்பட்ட கூர்மையான பூக்கள் கொண்ட நேபெட்டா").[7] தாவரச் சிற்றினங்கள், இந்த சிக்கலான பெயர்களை இரண்டு-பகுதி கொண்ட பெயர்களாக மாற்றியது. இதில் ஒற்றை-சொல் பேரினப் பெயராகவும் மற்ற-சொல் குறிப்பிட்ட அடைமொழி அல்லது "அற்பமான பெயர்" ஆகியவற்றைக் கொண்டது. மேலே உள்ள இரண்டு எடுத்துக்காட்டுகள் முறையே பிளாண்டகோ மீடியா (Plantago media) மற்றும் நெப்டா கேடாரியா (Nepeta cataria) எனப் பெயரிடப்பட்டது.[6][7] இருசொற் பெயரீடு முறையானது கால்நடைகள் உண்ணும் தாவரங்களைப் பற்றிய மாணவர் ஆய்வுத் திட்டம் ஒன்றில் முதலில் உருவாக்கப்பட்டது.[8]
குறிப்பிட்ட அடைமொழிக்குப் பிறகு, லின்னேயஸ் ஒவ்வொரு சிற்றினத்திற்கும் ஒரு சிறிய விளக்கத்தையும், ஒரு ஒத்த சொல்லையும் கொடுத்தார். சிறிய வகைகளில் சில வார்த்தைகளை உள்ளடக்கிய விளக்கங்கள் கவனமாகவும் கடுமையானதாகவும் இருந்தன.[9]|group=Note}} எடுத்துக்காட்டாக, கிளைசிரிசாவில், மூன்று சிற்றினங்கள் (கிளைசிரிசா எக்கினாட்டா, கிளிசிரிசா கிளப்ரா மற்றும் "கிளைசிரிசா கிர்சுட்டா ", முறையே "லெகுமினிபசு எக்கினாடிசு (leguminibus echinatis)","லெகுமினிபசு கிளாப்ரிசு"மற்றும் "லெகுமினிபசு ஹிர்சுடிசு".[10]
முதன் முதலில் இருசொல் பெயரிடல் முறையினைப் பயன்படுத்தியதோடும், தொடர்ந்து இம்முறையினைப் பயன்படுத்தியதாலும் தாவரச் சிற்றினங்கள் பெரும்பாலான தாவரங்களின் பெயரிடலுக்கு "தொடக்கப் புள்ளியாக" அமைந்தது (கடத்துத்திசுவற்ற தாவரங்களின் பெயரிடல் மற்றும் அனைத்து பூஞ்சைகளிலும் பின்னர் இம்முறையே பயன்படுத்தப்பட்டது).[6]
உள்ளடக்கம்
[தொகு]தாவரச் சிற்றினங்கள் வெளியான நேரத்தில் லின்னேயஸுக்குத் தெரிந்த ஆயிரக்கணக்கான தாவர சிற்றினங்கள் பற்றிய விளக்கங்களைக் கொண்டிருந்தது. முதல் பதிப்பில், அகலிபா ஆஸ்ட்ராலிசு (Acalypha australis) முதல் சைகோபில்லம் இசுபினோசம் (Zygophyllum spinosum) வரை 5,940 தாவரச் சிற்றினப் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.[11] புத்தக அறிமுகத்தில், லின்னேயஸ் 10,000க்கும் குறைவான தாவர சிற்றினங்கள் இருப்பதாக மதிப்பிட்டிருந்தார்.[12] ஆனால் தற்போது பூக்கும் தாவரங்களில் மட்டும் சுமார் 400,000 சிற்றினங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது.[13]
லின்னேயஸின் பாலியல் வகைப்பாடு முறையின்படி, சுமார் 1000 பேரினங்கள் 24 வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டன.[14] தாவர சிற்றினங்களில் பேரினங்கள் பற்றிய விளக்கங்கள் எதுவும் இல்லை.. இவை ஜெனரா பிளாண்டாரம் ("தாவர பேரினங்கள்")(Genera Plantarum) எனும் துணை தொகுதியாக வழங்கப்பட்டன. இதன் ஐந்தாவது பதிப்பு தாவர சிற்றினங்கள் முதல் பதிப்பு வெளியான நேரத்தில் அச்சிடப்பட்டது. லின்னேயஸ் "பாலியல் அமைப்பு" முறையானது ஒரு செயற்கையான அமைப்பு என்று ஒப்புக்கொண்டார்.[10] மாறாக இது பொது மரபுவழியினை துல்லியமாகப் பிரதிபலிக்கிறது என்றும்[14] இந்த அமைப்பின் எளிமை, சூல் முடி மற்றும் மகரந்தங்கள் போன்றவையுடன் மலரின் பாகங்களின் எளிய எண்ணிக்கையின் அடிப்படையில் சரியான வகுப்பை விரைவாகக் கண்டுபிடிப்பதை நிபுணர்கள் அல்லாதவர்களுக்கும் எளிதாக்கியது எனக் கருத்திட்டார்.[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ Its full title is Species plantarum, exhibentes plantas rite cognitas ad genera relatas, cum differentiis specificis, nominibus trivialibus, synonymis selectis, locis natalibus, secundum systema sexuale digestas.
- ↑ The book was actually published in two volumes, the first being on 24 May and the second on 16 August. However, for practical purposes, the dates of issue for volumes was arbitrarily set on 1 May, see Stearn, W.T. (1957), The preparation of the Species Plantarum and the introduction of binomial nomenclature, in: Species Plantarum, A Facsimile of the first edition, London, Ray Society: 72 and ICN (Melbourne Code)[3] Art. 13.4 Note 1: "The two volumes of Linnaeus' Species plantarum, ed. 1 (1753), which appeared in May and August, 1753, respectively, are treated as having been published simultaneously on 1 May 1753."
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Carolus Linnæus, Species Plantarum, Stockholm 1762–3". Collection Highlight Summer 2007. University of Aberdeen. 2007. Archived from the original on 30 April 2018. பார்க்கப்பட்ட நாள் 20 October 2013.
- ↑ Winston, Judith (20 ஏப்பிரல் 2012). Describing Species: Practical Taxonomic Procedure for Biologists. Columbia University Press. p. 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780231506656. பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்பிரல் 2018.
- ↑ McNeill, J.; Barrie, F.R.; Buck, W.R.; Demoulin, V.; Greuter, W.; Hawksworth, D.L.; Herendeen, P.S.; Knapp, S.; Marhold, K.; Prado, J.; Prud'homme Van Reine, W.F.; Smith, G.F.; Wiersema, J.H.; Turland, N.J. (2012). International Code of Nomenclature for algae, fungi, and plants (Melbourne Code) adopted by the Eighteenth International Botanical Congress Melbourne, Australia, July 2011. Vol. Regnum Vegetabile 154. A.R.G. Gantner Verlag KG. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-87429-425-6.
- ↑ Clive A. Stace (1991). "The development of plant taxonomy". Plant Taxonomy and Biosystematics (2nd ed.). Cambridge University Press. pp. 17–64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-42785-2.
- ↑ V. N. Naik (1984). "A review of pre-Darwinian classification". Taxonomy of Angiosperms. Tata McGraw-Hill. pp. 9–24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780074517888.
- ↑ 6.0 6.1 6.2 Katherine E. Cullen (2006). "Carl Linnaeus (1707–1778): binomial nomenclature system". Biology: The People Behind the Science. Infobase Publishing. pp. 28–43. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8160-7221-7.
- ↑ 7.0 7.1 Roger Spencer, Rob Cross & Peter Lumley (2007). "Latin names, the binomial system and plant classification". Plant Names: a Guide to Botanical Nomenclature (3rd ed.). CSIRO Publishing. pp. 14–15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780643099456.
- ↑ Britannica Educational Publishing (2009). "Carolus Linnaeus". The 100 Most Influential Scientists of All Time. Rosen Publishing Group. pp. 93–97. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781615300402.
- ↑ "Glycyrrhiza hirsuta Linnaeus". The Linnaean Plant Name Typification Project. Natural History Museum. பார்க்கப்பட்ட நாள் 28 October 2013.
- ↑ 10.0 10.1 Duane Isely (2002). "Carl Linnaeus". One Hundred and One Botanists. Purdue University Press. pp. 86–93. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781557532831.
- ↑ Robert W. Kiger. "Index to Binomials Cited in the First Edition of Linnaeus' Species Plantarum". Hunt Institute for Botanical Documentation. Archived from the original on 2018-07-12. பார்க்கப்பட்ட நாள் 2018-07-12.
- ↑ Gustav Heinrich von Bongard (1835). "Historical sketch of the progress of botany in Russia, from the time of Peter the Great to the present day; and on the part which the Academy has borne in the advancement of this science". Companion to the Botanical Magazine 1: 177–186. https://books.google.com/books?id=OU4CAAAAYAAJ&pg=PA177.
- ↑ "How many flowering plants are there in the world?". Royal Botanic Gardens, Kew. பார்க்கப்பட்ட நாள் 28 October 2013.
- ↑ 14.0 14.1 Carnegie Library of Pittsburgh (2011). "Plant world". The Handy Science Answer Book. Visible Ink Press. pp. 403–450. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781578593637.
நூல் பட்டியல்
[தொகு]- Linnaeus, Carl (1753). Species Plantarum: exhibentes plantas rite cognitas, ad genera relatas, cum differentiis specificis, nominibus trivialibus, synonymis selectis, locis natalibus, secundum systema sexuale digestas (1st. ed.). Stockholm: Impensis Laurentii Salvii.
- Linnaeus, Carl (1763). Species Plantarum: exhibentes plantas rite cognitas, ad genera relatas, cum differentiis specificis, nominibus trivialibus, synonymis selectis, locis natalibus, secundum systema sexuale digestas (2nd. ed.). Stockholm: Impensis Laurentii Salvii.
- Species Plantarum at Project Gutenberg I-III IV–V VI–X XI–XIII text
- Linnaeus Link Union Catalogue