பூனைக்கு பிடித்தமான செடி
வகைப்பாடு[தொகு]
தாவரவியல் பெயர் : நிப்பீட்டா கேட்டாரியா Nepeta cataria
குடும்பம் : சிங்கோசியீ (Gingkoaceae)
இதரப் பெயர்[தொகு]
பூனையை வசிகரிக்கும் செடி (Catnip catnep, Catmint)
செடியின் அமைவு[தொகு]
இச்செடி 2 முதல் 3 அடி உயரம் வளரக்கூடியது. இதனுடைய இலை இதய வடிவத்தில் இருக்கும். இதனுடைய இலையும், தண்டும் வாசனை உடையது. இந்த வாசனை பூனைக்கு மிகவும் பிடித்தமானது. இதிலும் காய்ந்து போன இலையின் வாசனை பூனைக்கு மிக மிக பிடிக்கும். இது பூனையை வசீகரித்து மயக்கி கவர்ந்திழுக்கும். இதனுடைய வாசனையை வைத்து சில விலங்குகளை பிடிக்கிறார்கள். இந்த செடியின் வாசனை பூனைக்கு மிகவும் பிடிப்பதால் இதை பூனையை வசீகரிக்கும் செடி என்று அழைக்கிறார்கள்.
இதனுடைய காய்ந்த இலையை டீ போல் அருந்துகிறார்கள். இது காரத்தன்மை உடையது. இந்த டீ உண்மையில் சுறுசுறுப்பை தருகிறது. மேலும் ஞாபக சக்தியையும், கொடுக்கிறது. இதை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் அதிக காலம் உயிர் வாழ்கிறார்கள் என கூறுகிறார்கள்.
காணப்படும் பகுதிகள்=[தொகு]
இதன் தாயகம் ஐரோப்பா ஆகும். உலகம் முழவதும் வளர்க்கிறார்கள். இதனுடைய பூ இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும். இச்சாதியில் 150 இனச்செடி உள்ளது.
மேற்கோள்[தொகு]
| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001