உள்ளடக்கத்துக்குச் செல்

ஆல்பிரைட் முடிச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆல்பிரைட் முடிச்சு
பெயர்கள்ஆல்பிரைட் முடிச்சு, ஆல்பிரைட் சிறப்பு
வகைதொடுப்பு
அவிழ்ப்புjamming
பொதுப் பயன்பாடுமீன்பிடித்தல்

ஆல்பிரைட் முடிச்சு என்பது தூண்டில் மூலம் மீன்பிடித்தலில் பயன்படும் ஒரு முடிச்சு ஆகும். இது இரண்டு வெவ்வேறு அளவு விட்டங்களைக் கொண்ட கயிறுகளைத் தொடுப்பதற்குப் பயன்படும் உறுதியான முடிச்சு ஆகும். எடுத்துக்காட்டாக ஒற்றையிழைக் கயிற்றைப் பின்னல் கயிற்றுடன் தொடுப்பதற்கு இதைப் பயன்படுத்தலாம். இந்த முடிச்சு ஒப்பீட்டளவில் சீரானது. அதனால் இம் முடிச்சிட்ட கயிறுகள் தேவைப்படுமிடத்து தவாளிகள் (groove), வழிகாட்டு அமைப்புக்கள் ஊடாக இலகுவாகச் செல்லக்கூடியதாக உள்ளது. சிலர் இந்த முடிச்சின் மேல் இரப்பரை அடிப்படையாகக் கொண்ட பூச்சு ஒன்றைப் பூசுவர். இது முடிச்சை மேலும் சீரானதாக ஆக்குவதுடன், அதைப் பலமுள்ளதாகவும் ஆக்குகிறது.

இம் முடிச்சைக் கட்டும்போது கயிற்றை சீரான சுருள்வடிவில் பெரிய கயிற்றின் தடத்தில் சுற்றுவது முக்கியமானது.

குறிப்புகள்

[தொகு]


இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்பிரைட்_முடிச்சு&oldid=2742632" இலிருந்து மீள்விக்கப்பட்டது