உள்ளடக்கத்துக்குச் செல்

தூண்டில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரபுவழி தூண்டில் மூலம் மீன்பிடித்தல், மட்டக்களப்பு
புதுவகை இயந்திரத் தூண்டில், இங்கிலாந்து கெனட் எவொன் கால்வாயில்

தூண்டில் மீன் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணம் ஆகும். தற்காலத்தில் பல்வகைப்பட்ட புதுவகைத் தூண்டில்கள் பயன்பாட்டில் உள்ளன. மரபுரீதியிலான தூண்டில், தூண்டில் கோல், தூண்டில் ஊசி, இழை, மிதவை(இதை சில இடங்களில் மப்புலி என அழைப்பர்)என்பவற்றைக் கொண்டிருக்கும். தூண்டில் ஊசியில் வேறுபட்ட இரைகளை பொருத்தி அதனைக் கவரவரும் மீன் பிடிக்கப்படுகிறது.[1][2][3]

தூண்டில் ஊசி

[தொகு]
தூண்டில் ஊசி

தூண்டில் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஊசி தூண்டில் ஊசி ஆகும். இது சிறப்பான வளைவையும் கொக்கி போன்ற கூர்முனையையும் கொண்டு காணப்படும். முனைப்பகுதியில் இரை பொருத்தப்படும். முனையிலுள்ள கொக்கி தூண்டிலை சுண்டி இழுக்கும் போது மீனின் தொண்டையில் செருகிக் கொள்ளும்.

இரை

[தொகு]

மீன்பிடித்தலில் இரு வகையான இரைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை இயற்கை இரைகள், செயற்கை இரைகள் என்பவையாகும்.

இயற்கை இரை

[தொகு]

தூண்டில் மூலம் மீன் பிடித்தலில் இயற்கை இரையாக பூச்சிக் குடம்பிகள், கீடங்கள், புழுக்கள், மண்புழு, சிறியமீன்கள், தவளைகள் என்பன பயன்படுத்தப்படுகின்றன. இவை உண்மையான மணம், நிறம், தன்மை என்பவற்றைக் கொண்டிருப்பதால் செயற்கை இரையை விட செயற்றிறன் மிக்கவையாகும்.

அளவு

[தொகு]

தூண்டில் ஊசிகளுக்கு பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகள் எதுவும் இல்லை. இதனால் உற்பத்தியாளர்களிடையே தூண்டிலின் அளவு முரணாக உள்ளது. இருப்பினும், ஒரு உற்பத்தியாளரின் தூண்டில் சீரானவையாக உள்ளது.

தூண்டில் அளவுகள் பொதுவாக ஒரு எண் அமைப்பு மூலம் குறிப்பிடப்படுகின்றன. இது அளவு வரம்பின் நடுவில் அளவு 1 தூண்டில் வைக்கிறது. சிறிய கொக்கிகள் பெரிய முழு எண்களால் குறிப்பிடப்படுகின்றன (எ.கா. 1, 2, 3...). பெரிய கொக்கிகள் முழு எண்களை அதிகரிப்பதன் மூலம் ஒரு சாய்வு மற்றும் பூஜ்ஜியத்தை (எ.கா. 1/0 (ஒன்று), 2/0, 3/0...) மூலம் குறிப்பிடப்படுகிறது. எண்கள் ஒப்பீட்டு அளவுகளைக் குறிக்கின்றன. இந்த எண்கள் பொதுவாக இடைவெளியுடன் தொடர்புடையது (புள்ளி முனையிலிருந்து சங்கு வரையிலான தூரம்). சந்தையிலுள்ள சிறிய தூண்டில் அளவு 32, பெரியது 20/0.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ewalt, David M. (5 August 2005). "No. 19: The Fish Hook". Forbes. Archived from the original on June 30, 2012. Retrieved 23 April 2017.
  2. Thomas, Terence B. "Fishing - Early history". Encyclopædia Britannica. Retrieved 2022-09-01.
  3. Bryant, Reid (2016-07-28). "Survival Fishing: How to Make a Gorge Hook". Field and Stream. Retrieved 2022-09-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூண்டில்&oldid=4099650" இலிருந்து மீள்விக்கப்பட்டது