கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்வர்டு-கியோட்டோ எழுத்துப்பெயர்ப்பு முறை (Harvard-Kyoto Convention) என்பது உரோமன் எழுத்து முறையை அடிப்படையாகக் கொண்ட ஆசுக்கி (ASCII) முறையில், தேவநாகரி எழுத்து முறையில் எழுதும் சமற்கிருத ஒலிகளை எழுத்துப்பெயர்ப்புச் செய்தல் ஆகும். இது மின்னஞ்சல் வழியும் மின்வழியதான எழுத்துகளில் பரிமாறப்படும் சூழல்களிலும் பயன்படுகின்றது.