உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்பிரிக்காவின் பெரு நதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
The African Great Lakes system, in blue.
Map of larger region including the East African Rift and the entire so-called Great Rift Valley
Satellite view of the African Great Lakes region and its coastline.

ஆப்பிரிக்காவின் பெரு நதிகள் (சுவாகிலி - மாசிவா மாக்கு) என்பது வரிசையாக நதிகள் இணைந்து கிழக்கு ஆப்பிரிக்க பிளவு பகுதியில் காணப்படும் பிளவு பள்ளத்தாக்கு நதிகளின் ஒரு பாகத்தை உருவாக்குகிறது. இவற்றுள் பரப்பில் உலகின் மூன்றாவது பெரிய நன்னீர் ஏரியான விக்டோரியா ஏரி, ஆழத்திலும் கன அளவிலும் உலகின் இரண்டாவது பெரிய நன்னீர் ஏரியான டான்ஜானிகா ஏரி, பரப்பளவில் உலகின் எட்டாவது பெரிய நன்னீர் ஏரியான மாலாவி முதலியன அடங்கும்.[1] இவற்றின் மொத்த கன அளவு 31,000 கி. மீ ³ (1700 மில்லி கன அடி) ஆகும், இது பைக்கால் ஏரி அல்லது வட அமெரிக்க பெரு ஏரிகளை விட அதிகம் ஆகு‌ம். இது நமது கோளின் மேற்பரப்பில் உறையாத நீரின் 25% ஆகும். ஆப்பிரிக்காவின் பெரும் பிளவு ஏரிகள் முந்தைய அல்லது பழைய கால சுற்று சூழலின் தாயகமாகும். உலகின் மொத்த மீன் இனங்களில் 10% இங்கு வசிக்கின்றன. புருண்டி, காங்கோ சனநாயக குடியரசு, கென்யா, மாலவி, ருவாண்டா, டான்செனியா மற்றும் உகண்டா போன்ற நாடுகள் ஆப்பிரிக்க பெரு ஏரி பகுதியில் உள்ளன.[2]

ஏரிகள் மற்றும் வடிநிலங்கள்

[தொகு]

கீழ்கண்ட பகுதிகள், ஆப்பிரிக்க பெரு ஏரி பகுதியில் காணப்படும் வடிநிலப் பகுதிகளின் குழுவாக பிரிக்கப்பட்ட பட்டியலில் காணப்படுகிறது. ஆப்பிரிக்க பெரு ஏரி பகுதியில் காணப்படும், ஏரிகளுக்கும் கொடுக்கப்பட்ட பட்டியலுக்கும் வித்தியாசம் உள்ளது. ஒரு வேளை பிளவு பள்ளத்தாக்கின், க்யாகோ போன்ற சிறு நதிகள் குறிப்பாக அவைகள் வடிநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தால் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

வெண் நைல் நதியில் கலக்கும் வடிகால் பகுதிகள்

[தொகு]

● விக்டோரியா ஆறு ● ஆல்பர்ட் ஆறு ● எட்வர்டு ஆறு

காங்கோ நதியில் கலக்கும் வடிகால் பகுதிகள்.

[தொகு]

● டாங்கணியாகோ ஆறு ● கிவு ஆறு

ஷைர் ஆற்றின் வழியாக ஸாம்பெஸியில் கலக்கும் வடிகால் பகுதி

[தொகு]

● மால்வி ஆறு

எண்டோர்ஹெயிக் வடிநிலம் (வரம்புக்கு உட்பட்ட பகுதி - தன்னில் வந்து சேரும் நீரை வெளியில் மற்ற நீர் தேக்கங்களுக்கு பாய விடாது) ● டர்கானோ ஆறு

ஆப்பிரிக்க பெரு ஏரி பகுதி

[தொகு]

ஆப்பிரிக்க பெரு ஏரி பகுதியானது அதன் பெரும் ஏரியைச் சுற்றி அமைந்துள்ள நகரங்களால் ஆன பகுதியைக் குறிக்கும். இது புருண்டி, காங்கோ சனநாயக குடியரசு, கென்யா, மாலவி,ருவாண்டா டான்செனியா மற்றும் உகண்டா போன்ற நாடுகள் அமைந்ததாகும். பாண்டு சுவாகிலி மொழியே இங்கு அதிகம் பேசப்படுகிறது.[3]மேலும் இம் மொழி இங்கு காணப்படும் நான்கு நாடுகளுக்கு தேசிய மொழி மற்றும் ஆட்சி மொழியாக உள்ளது. தான்சானியா, கென்யா, உகண்டா, ருவாண்டா மற்றும் காங்கோ சனநாயக குடியரசு நாடுகளில் இம் மொழியே பேசப்படுகிறது. அதிகப் படியான மக்கள் தொகை பெருக்கம் 107 மில்லியன் மக்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது மற்றும் தேவைக்கு அதிகமான வேளாண்மை இவற்றால் இப்பகுதி சிறு சிறு நாடுகளாக கட்டமைககப்பட்டு உள்ளது. இவற்றில் மிகவும் வலிமை வாய்ந்த நாடுகள் ஆவன முடியாட்சி நடைபெறும் புகாண்டோ, புனியாரோ, ருவாண்டா மற்றும் புருண்டி ஆகும். வழக்கத்திற்கு மாறாக துணை சகாரா ஆப்பிரிக்காவில் பாரம்பரிய எல்லைகள் எல்லாம் காலனி ஆதிக்கத்தின் கீழ் பராமரிக்கப் பட்டு வருகிறது. காலனி ஆதிக்கத்திற்கு விருப்பமாய் இல்லாத முடியரசுகள் எல்லாம் உருவாக்க பட்ட தேசிய எல்லைகள் மூலம் பிரிக்கப்பட்டு உள்ளது அல்லது குறைந்த அளவு ஐரோப்பிய தாக்கம் உள்ளதாக கருதப்படும் நாடுகள் மீது காலனிகளுக்கு பிரியமான நாடுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. நைல் நதியின் தேடப்படும் மூலமாக இப்பகுதி உள்ளதால் ஐரோப்பியர்களின் ஆர்வத்தை தூண்டுவதாக இருந்து வந்துள்ளது. இங்கு வந்த ஐரோப்பியர்கள் கிறித்துவ சமய பரப்பும் குழுவினர் ஆகு‌ம் அவர்களால் அங்குள்ள மக்களை மாற்ற முடியவில்லை ஆனால் பின்னாட்களில் காலனி ஆதிக்கத்திற்கு வழி வகுத்தது. இவர்களின் வெளி உலகோடு கூடிய அதிகப் படியான தொடர்பு இங்குள்ள மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் அழிவுக்குள்ளாக்கும் தொற்று நோய்கள் வந்தன. சுதந்திரத்திற்கு பின் இந்நாடு வள வாய்ப்புடைய உள்ளார்ந்த ஆற்றல் கொண்ட நாடாக அடையாளம் காணப்பட்டதால் இது அநேக உள்நாட்டு போர்களுக்கும் சண்டைகளுக்கும் இடமாக ஆனது. இதிலிருந்து தான்செனியா னாடு மட்டுமே தப்பியது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழக புள்ளி விவர கணக்கின்படி காங்கோ நாட்டு அகதிகளை அதிக அளவில் வரவேற்றது தான்சானியா தான். அதிகம் பாதிக்கப் பட்ட பகுதிகள் மிக அதிக அளவில் வறுமையைச் சந்தித்தன. [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "~ZAMBIA~". www.zambiatourism.com. பார்க்கப்பட்ட நாள் 2008-03-14.
  2. "International Documentation Network on the Great African Lakes Region". Princeton University Library. பார்க்கப்பட்ட நாள் 22 November 2013.
  3. Shema, Rutagengwa Claude. "Great Lakes Region of Africa – Burundi". Regional Coordinator Great Lakes Peace Initiative (GLPI). பார்க்கப்பட்ட நாள் 22 November 2013.
  4. "Great Lakes Region News". UNHCR. பார்க்கப்பட்ட நாள் 22 October 2015.