உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்கானித்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி (The People's Democratic Party of Afghanistan (PDPA) பாரசீக மொழி: حزب دموکراتيک خلق افغانستان‎, பஷ்தூ மொழி: د افغانستان د خلق دموکراټیک ګوند‎) 1965 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தியதி ஆப்கானிஸ்தானில் உருவாக்கப்பட்டது. இது ஒரு சிறுபான்மைக் கட்சி என்றாலும் ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் முகம்மது தாவூத் கான் தனது மைத்துனர் முகம்மது ஷாகீர் ஷாவை ஆட்சியில் இருந்து அகற்ற இக்கட்சி உதவியது. இறுதியில் முகம்மது தாவூத் கான் கட்சியின் எதிரியாகி அரசின் உயர் பதவிகளில் இருந்த ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளை பதவியிலிருந்து நீங்கினார். இந்நிகழ்ச்சி சோவியத் ஒன்றியத்துடனான உறவை சீர்குலைத்தது.

வெளி இணைப்புகள்

[தொகு]