உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசான் மித்ராசென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசான்
மித்ராசென்
இந்திய தபால் தலையில் மித்ராசென் (2001)
தாய்மொழியில் பெயர்मित्रसेन
பிறப்புமித்ராசென் தாபா மாகர்
(1895-12-29)29 திசம்பர் 1895
தோடா இராணி, பஞ்சாப் மாகாணம், பிரித்தானிய இந்தியா
(இன்றைய இமாச்சலப் பிரதேசம், இந்தியா)
இறப்பு7 ஏப்ரல் 1946(1946-04-07) (அகவை 50)
தேசியம்நேபாளி
பணிபாடகர், கவிஞர், எழுத்தாளர்

மித்ராசென் தாபா மாகர் (29 திசம்பர் 1895 - 7 ஏப்ரல் 1946), ஆசான் மித்ராசென் என்று பிரபலமாக அறியப்படுபவர், நேபாளி நாட்டுப்புற பாடகர், பாடலாசிரியர், நாடக ஆசிரியர் மற்றும் சமூக சேவகர் ஆவார்.[1][2][3][4] நேபாள இசை மற்றும் சமூகத்தின் மேம்பாட்டிற்காகச் சிறு வயதிலேயே தரைப்படையினை விட்டு வெளியேறினார். நேபாள சமூகத்தின் பல்வேறு துறைகளில் மித்ராசென்னின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

மித்ராசென் இந்தியாவின் தரம்சாலாவில் 29 திசம்பர் 1895-ல் மன்பிர்சென் தாபா மாகருக்கும் ராதா தாபா மாகருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது தாத்தா சுரேந்திரசென் தாபா ஆவார். நேபாளத்தின் பர்பத் மாவட்டத்தில் உள்ள ரகு புலா கிராமத்தில் இவரது மூதாதையர் வீடு இருந்தது.[5] இவருக்கு திக்விஜய் சென் தாபா என்ற மகன் உள்ளார்.

கல்வி

[தொகு]

பாக்சு கன்டோன்மென்ட்டைச் சுற்றி பள்ளி இல்லாததால், இவர் ஆரம்பத்தில் தனது தந்தையிடம் கல்வி கற்கத் தொடங்கினார். பின்னர் தனது 8 வயதில் தனது குடியிருப்பிலிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள ஆரம்பப் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்தார். பானுபக்தர் மொழிபெயர்த்த இராமாயணத்தைத் தனது தந்தையிடமிருந்து கற்றார்.[6]

தரைப்படை பணி

[தொகு]

மித்ராசென்னிற்கு 16 வயது ஆனபோது, 1/1 கோர்க்கா ரைபிள்ஸில் ஆட்சேர்ப்பு நடைபெற்றது. இதன் மூலம் தரைப்படையில் சேர்ந்தார். இவரது முன்னோர்கள் முன்பு இதே பிரிவில் பணியாற்றியவர்கள். இவர் 1914-ல் பிரான்சில் தனது படைப்பிரிவுடன் முதலாம் உலகப் போரில் பங்கேற்றார். இவர் 1920-ல் தரைப்படை சேவையை விட்டு விலகினார். நேபாள இசை மற்றும் சமூகத்தின் மேம்பாட்டிற்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் சமூக சேவகராக அர்ப்பணிக்க வேண்டும் என்பதே இவரது ஆர்வமாக இருந்தது.[7]

ஆசான் மித்ராசென் தாபாவின் பாடல்.

இசை பங்களிப்புகள்

[தொகு]
நேபாளத்தின் 1999 அஞ்சல் முத்திரையில் மாஸ்டர் மித்ராசென்.

மித்ராசென் தனது ஆர்மோனியத்துடன் நேபாள மக்கள் வாழ்ந்த இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் நேபாள முழுவதும் இசைப்பயணம் செய்தார். இவரது நாட்டுப்புறப் பாடல்கள் நேபாள மக்களிடையே மிகவும் பிரபலமாகின. இந்த பிரபலமான பாடல்களில் சில: லாஹுரே கோ ரெலிமை ஃபஷைனை ராம்ரோ... லாஹுரே கோ ரெலிமை ஃபஷானை ராம்ரோ... லாஹுரே கோ ரெலிமை ஃபஷைனை ராம்ரோ... , தான் கோ பாலா ஜுல்யோ ஹஜுர் தாஷைன் ரமைலோ, மாலை குத்ருக்கை பர்யோ ஜெதன் திம்ரோ பாஹினி லே.... போன்றவை. இவர் நேபாளி இசையில் 24 வட்டத் தட்டில் 97 பாடல்களைப் பதிவு செய்தார்.[8] இவர் பாடகர் மட்டுமல்ல, நாடகம், கதை, நாவல், கட்டுரை, கவிதை போன்ற துறைகளிலும் பங்களித்துள்ளார்.

நேபாளி சமூகம் மற்றும் இசையில் மித்ராசென்னின் பெரும் பங்களிப்பிற்காக, இந்தியா மற்றும் நேபாள அரசாங்கங்கள் இவரது புகைப்படங்களுடன் அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளன.[9] மித்ராசென் அகாதமியும் நேபாளி இசையை மேம்படுத்தவும், இவரது பாரம்பரியத்தைப் பின்பற்றவும் நினைவுகூரும் சேவையினை செய்கின்றது. இவரது பங்களிப்புகள் இவரை ஒரு ஆசான் மித்ராசென் ஆக்கியது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Master Mitrasen Thapa Magar". www.saavn.com. பார்க்கப்பட்ட நாள் 30 July 2017.
  2. "Khutrukai Paryo Jethan (Adhunik) by Master Mitrasen Thapa Magar on Apple Music". iTunes. பார்க்கப்பட்ட நாள் 30 July 2017.
  3. Manch, Nepal Magar Sangh Gulmi-kathmandu Samparka (28 March 2013). "नेपाल मगर सघं-गुल्मी काठमान्डौ सम्पर्क समिती : Brief History of Magars in Nepal (with 1st Boxer of Nepal Dal Bdr Rana from Arkhale, Gulmi)". नेपाल मगर सघं-गुल्मी काठमान्डौ सम्पर्क समिती. பார்க்கப்பட்ட நாள் 30 July 2017.
  4. Administrator. "'मलाई खुत्रुक्कै पार्‍यो जेठान तिम्रो बैनीले'- नेपाली लोकगीत संगितका अमर स्रस्टा मास्टर मित्रसेनको ११८ औं जन्मोत्सब | literature". www.usnepalonline.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 19 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 30 July 2017.
  5. Harsha Bahadur Budha Magar, p.7.
  6. Harsha Bahadur Budha Magar, p. 11.
  7. Harsha Bahadur Budha Magar, pp. 13–14.
  8. Harsha Bahadur Budha Magar, p. 42.
  9. Himal Khabarpatrika. Kathmandu, Nepal. 1–16 September 2010. p.62.

மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரங்கள்

[தொகு]
  • Harsha Bahadur Budha Magar (1999) Master Mitrasen Thapa Magar. Kathmandu: Pushpavati Budha Magar

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசான்_மித்ராசென்&oldid=4110433" இலிருந்து மீள்விக்கப்பட்டது