அய்மே ஆர்கண்ட்
பிரான்சுவா பியேர் அமி ஆர்கண்ட் François Pierre Ami Argand | |
---|---|
பிரான்சுவா பியேர் அமி ஆர்கண்ட் | |
பிறப்பு | ஜூலை 5, 1750 ஜெனீவா |
இறப்பு | அக்டோபர் 14, 1803 |
தேசியம் | சுவிட்சர்லாந்து |
துறை | வேதியியல் |
அறியப்படுவது | எண்ணெய் விளக்கு |
அய்மே ஆர்கண்ட் (Aimé Argand, ஜூலை 5, 1750 - அக்டோபர் 14, 1803) சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு இயற்பியலாளரும், வேதியியலாளரும் ஆவார். இவர் எண்ணெய் விளக்கின் வடிவமைப்பைப் பெருமளவு மேம்படுத்தினார். இவர் புதிதாக வடிவமைத்த எண்ணெய் விளக்கு இவரது பெயரைத் தழுவி ஆர்கண்ட் விளக்கு என அழைக்கப்பட்டது.[1]
இவரது முழுப்பெயர், பிரான்சுவா பியேர் அமி ஆர்கண்ட். இவர் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் 10 பிள்ளைகளுள் ஒன்பதாவதாகப் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு கைக் கடிகாரம் செய்பவர். அய்மே ஆர்கண்ட் ஒரு மதகுரு ஆகவேண்டும் என அவரது தந்தையார் விரும்பினார். ஆனால் இவருக்கு அறிவியல் மீதே அதிக ஆர்வம் இருந்தது. இதனால், புகழ் பெற்ற தாவரவியலாளரும், காலநிலையியலாளருமான ஹோராஸ்-பெனடிக்ட் டி சோசுரே என்பவரிடம் மாணவராகச் சேர்ந்தார். இவர் தனது இருபதுகளின் பிற்பகுதியில் பாரிசில் இருந்தபோது காலநிலையியல் தொடர்பான பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். பின்னர் இவர் வேதியியல் ஆசிரியராகப் பணியேற்றுக் கொண்டார். வைனிலிருந்து பிராந்தி தயாரிக்கும் முறையை மேம்படுத்திய இவர் தனது சகோதரருடன் இணைந்து வடிசாலை ஒன்றை அமைத்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wolfe, John J. Brandy, Balloons, & Lamps: Ami Argand, 1750-1803 (Southern Illinois University Press, 1999). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8093-2278-1
- ↑ அய்மே ஆர்கண்ட், வத்திக்கான் வானொலி