உள்ளடக்கத்துக்குச் செல்

அமைப்பு நிர்வாகி பாராட்டு நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமைப்பு நிர்வாகி பாராட்டு நாள் (System Administrator Appreciation Day) என்றும் சிஸ்அட்மின் நாள் என்றும் SAAD என்றும் குறிப்பிடப்படும் நாளை டெட் கெகாடோசு என்ற அமைப்பு நிர்வாகி உருவாக்கினார். புதிய அச்சுப்பொறிகளை நிறுவியதற்கு நன்றி கூறும்விதமாக சக ஊழியர்கள் அமைப்பு நிர்வாகிக்கு பூக்களும் கனிகளும் நிறைந்த கூடைகளை பரிசளிப்பது போல வந்த ஹுவலெட் பெக்கார்ட் நிறுவனத்தின் இதழ் விளம்பரத்தினால் கெகாடோசிற்கு இத்தகைய எண்ணம் எழுந்தது. அமைப்பு நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் பணியை பாராட்டும் விதமாக இந்த விடுமுறை நாள் விடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு சூலை திங்கின் கடைசி வெள்ளிக்கிழமை இது கொண்டாடப்படுகிறது. முதல் அமைப்பு நிர்வாகி பாராட்டு நாள் சூலை 28, 2010 அன்று கொண்டாடப்பட்டது. அடுத்த விடுமுறை சூலை 29, 2011 அன்று வருகிறது.

பல கணினி மற்றும் இணையம் சார்ந்த பண்பாடுடைய நிறுவனங்கள், திங்க்கீக்,கஃபேபிரஸ் போன்றவை, இந்த விடுமுறை நாளின்போது சிறப்பு பயன்பாட்டு சேவைகளையும் போட்டிகளையும் நடத்துகின்றன. இந்நாளைக் கொண்டாட பல கானாப் பாடல்களும் இயற்றப்பட்டுள்ளன.[1][2] ஆயினும் புகழ்பெற்ற வாழ்த்தட்டை நிறுவனங்களான ஆல்மார்க் போன்றவற்றின் ஆதரவு இன்னமும் கிடைக்கவில்லை.[3] இந்த நாளை தொழில்முறை அமைப்பு நிர்வாகிகள் சங்கம் (League of Professional System Administrators) மற்றும் சேஜ் (SAGE/USENIX) என்ற இரு தொழில்சார் அமைப்புகள் அங்கீகரித்தும் ஆதரவளித்தும் வருகின்றன.[4]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. The System Administrator Day Song (video and mp3)
  2. "UKUUG System Administrator Day Song (video and mp3)". Archived from the original on 2015-05-21. பார்க்கப்பட்ட நாள் 2011-05-03.
  3. Hoyt, Elizabeth (July 27, 2001). "System Administrator Appreciation Day".
  4. MacVittie, Lori (July 28, 2006). "Happy Sysadmin Day!". Network Computing blogs. Archived from the original on ஆகஸ்ட் 2, 2009. பார்க்கப்பட்ட நாள் மே 3, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]