உள்ளடக்கத்துக்குச் செல்

அமர்காண்டாக் விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமர்காண்டாக் எக்ஸ்பிரஸ் (Amarkantak Express) தினசரி செயல்படக்கூடிய ஒரு அதிவிரைவு ரயில் சேவையாகும். இது வண்டி எண் 12853 மற்றும் 12854 என்ற எண்களுடன் செயல்படுகிறது. அமர்காண்டாக் எக்ஸ்பிரஸ் மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபால் சந்திப்பிற்கும், சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரான துர்க் நகரத்தின் ரயில் நிலையத்திற்கும் இடையே செயல்படுகிறது. அமர்காண்டாக் எக்ஸ்பிரஸ், 8225 மற்றும் 8226 என்ற வண்டி எண்களுடன் செயல்பட்ட போபால் – பிலாஸ்பூர் மஹாநதி எக்ஸ்பிரஸ், 8291 மற்றும் 8292 என்ற வண்டி எண்களுடன் செயல்பட்ட போபால் – ராய்பூர் எக்ஸ்பிரஸ், அத்துடன் 1235 மற்றும் 1236 என்ற எண்களுடன் செயல்பட்ட போபால் – ஜபல்பூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களுக்கு பதிலாக இயக்கப்பட்டது.

பெயர்க் காரணம்

[தொகு]

மத்திய பிரதேச மாநிலத்தின் அனூப்பூர் மாவட்டத்தின், யாத்திரீக நகரமான அமர்காண்டாக் பெயரின் அடிப்படையில் ‘அமர்காண்டாக் எக்ஸ்பிரஸ்’ என்று இந்த ரயில்சேவை அழைக்கப்படுகிறது. மத்திய இந்தியாவின் மிகப்பெரிய நதியான நர்மதா நதி இந்நகரத்திற்கு அருகே தனது பயணத்தினை தொடங்குகிறது.

வந்தடையும் நேரமும் புறப்படும் நேரமும்

[தொகு]

வண்டி எண் 12854 போபால் சந்திப்பில் இருந்து தினமும் மாலை 3.40 மணியளவில் புறப்பட்டு, துர்க் நகரத்தினை அடுத்த நாள் காலை 7.55 மணியளவில் வந்தடையும். வண்டி எண் 12853, தினமும் துர்க் நகரத்தில் இருந்து மாலை 6.20 மணியளவில் புறப்பட்டு போபால் சந்திப்பினை அடுத்த நாள் காலை 10.30 மணியளவில் சென்றடையும். அமர்காண்டாக் எக்ஸ்பிரஸ், அதன் இலக்கினை அடையும் முன் 28 நிறுத்தங்களைக் கொண்டுள்ளது.[1][2]

வழிப்பாதையும் நிறுத்தங்களுக்கான நேரமும்

[தொகு]
எண் நிலையத்தின்

பெயர் (குறியீடு)

வரும்

நேரம்

புறப்படும்

நேரம்

நிற்கும்

நேரம் (நிமிடங்கள்)

கடந்த

தொலைவு (கி.மீ)

நாள் பாதை
1 துர்க்

(DURG)

தொடக்கம் 18:20 0 0 கி.மீ 1 1
2 பிலாய்

Pwr Hs (BPHB)

18:28 18:30 2 நிமி 10 கி.மீ 1 1
3 ராய்ப்பூர்

சந்திப்பு (R)

18:55 19:00 5 நிமி 37 கி.மீ 1 1
4 டில்டா

(TLD)

19:31 19:33 2 நிமி 75 கி.மீ 1 1
5 படபாரா

(BYT)

19:50 19:52 2 நிமி 101 கி.மீ 1 1
6 பிலாஸ்பூர்

சந்திப்பு (BSP)

20:50 21:05 15 நிமி 147 கி.மீ 1 1
7 கார்கி

சாலை (KGB)

21:29 21:31 2 நிமி 179 கி.மீ 1 1
8 பெல்கானா

(BIG)

21:48 21:50 2 நிமி 195 கி.மீ 1 1
9 பென்ட்ரா

சாலை (PND)

22:46 22:48 2 நிமி 248 கி.மீ 1 1
10 அனூப்பூர்

சந்திப்பு (APR)

23:32 23:35 3 நிமி 298 கி.மீ 1 1
11 அம்லை

(AAL)

23:44 23:46 2 நிமி 311 கி.மீ 1 1
12 புர்ஹார்

(BUH)

00:03 00:05 2 நிமி 320 கி.மீ 2 1
13 ஷாஹ்டோல்

(SDL)

00:28 00:30 2 நிமி 339 கி.மீ 2 1
14 பீர்சிங்பூர்

(BRS)

01:04 01:06 2 நிமி 377 கி.மீ 2 1
15 உமரியா

(UMR)

01:32 01:34 2 நிமி 406 கி.மீ 2 1
16 காண்ட்னி

சௌத் (KTES)

03:10 03:15 5 நிமி 468 கி.மீ 2 1
17 ஜபல்பூர்

(JBP)

04:25 04:30 5 நிமி 557 கி.மீ 2 1
18 மதன்

மஹால் (MML)

04:34 04:36 2 நிமி 561 கி.மீ 2 1
19 ஸ்ரீதம்

(SRID)

05:09 05:11 2 நிமி 610 கி.மீ 2 1
20 நரசிங்க்பூர்

(NU)

05:45 05:47 2 நிமி 641 கி.மீ 2 1
21 கரேலி

(KY)

06:02 06:04 2 நிமி 657 கி.மீ 2 1
22 கடர்வாரா

(GAR)

06:24 06:26 2 நிமி 685 கி.மீ 2 1
23 பாங்கேடி

(BKH)

06:47 06:49 2 நிமி 716 கி.மீ 2 1
24 பிபரியா

(PPI)

07:03 07:05 2 நிமி 735 கி.மீ 2 1
25 சோஹங்க்பூர்

(SGP)

07:18 07:20 2 நிமி 753 கி.மீ 2 1
26 இட்டரிசி

சந்திப்பு (ET)

08:20 08:30 10 நிமி 802 கி.மீ 2 1
27 ஹோஷங்காபாத்

(HBD)

08:48 08:50 2 நிமி 820 கி.மீ 2 1
28 ஒபைடுலா

கஞ்சு (ODG)

09:36 09:38 2 நிமி 858 கி.மீ 2 1
29 ஹபீப்கஞ்சு

(HBJ)

10:01 10:03 2 நிமி 888 கி.மீ 2 1
30 போபால்

சந்திப்பு (BPL)

10:30 முடிவு 0 894 கி.மீ 2 1

சராசரி வேகம்

[தொகு]

தினசரி இருதிசைகளிலும் செயல்படும் இந்த ரயில்சேவையானது சராசரியாக மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் செயல்படுகிறது. வண்டி எண் 12854 சராசரியாக 7 நிமிடங்கள் தாமதத்துடன் புறப்படுகிறது, அத்துடன் சராசரியாக 57 நிமிடங்கள் தாமதத்துடன் வந்தடைகிறது. அதேபோல் வண்டி எண் 12853 சராசரியாக 3 நிமிடங்கள் தாமதத்துடன் புறப்படுகிறது, அத்துடன் சராசரியாக 64 நிமிடங்கள் தாமதத்துடன் வந்தடைகிறது.[3][4]

போபால் – பிலாஸ்பூர் பாதையில் செயல்படும் இதர தொடருந்து சேவைகள்

[தொகு]
  • 12441/12441 ராஜ்தானி எக்ஸ்பிரஸ்
  • 18233/18234 நர்மதா எக்ஸ்பிரஸ்
  • 18235/18236 போபால் – பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ்
  • 18237/18238 சத்தீஸ்கர் எக்ஸ்பிரஸ்
  • 18437/18474 ஜோத்பூர் – புரி எக்ஸ்பிரஸ்
  • 12409/12410 எச். நிசாமுதீன் – ராய்கர் கோண்ட்வானா எக்ஸ்பிரஸ்

குறிப்புகள்

[தொகு]
  1. "Running Train Status". Running Status. பார்க்கப்பட்ட நாள் 11 July 2015.
  2. "Amarkantak Express Timetable". cleartrip.com. Archived from the original on 2015-07-05. பார்க்கப்பட்ட நாள் 11 July 2015.
  3. "Details of Stations between Bhopal Junction and Durg Junction". Indian Rail Info. பார்க்கப்பட்ட நாள் 11 July 2015.
  4. "Details of Stations between Durg Junction and Bhopal Junction". Indian Rail Info. பார்க்கப்பட்ட நாள் 11 July 2015.