அபதனி மக்கள்
தான்/தானில், அபதனி, அப தனி | |
---|---|
திருமணதின்போது அபதானி பெண் | |
மொத்த மக்கள்தொகை | |
43,777[1] (2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இந்தியா (அருணாசலப் பிரதேசம்) | |
மொழி(கள்) | |
அபதனி • ஆங்கிலம் • இந்தி | |
சமயங்கள் | |
தோன்யி-போலோ • கிறிஸ்தவம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
தானி மக்கள் |
அபதனி (Apatani) அல்லது தான், தானில் என்பது இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் கீழ் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள ஜிரோ பள்ளத்தாக்கில் வாழும் பழங்குடியின மக்கள் ஆவர்.[2] இவர்கள் அபதனி, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர்.
வாழ்க்கை முறை
[தொகு]பண்ணை விலங்குகளையோ அல்லது இயந்திரங்களையோப் பயன்படுத்தாமல் செய்யப்படும் அவர்களின் நெல் சாகுபடி முறை மற்றும் அவர்களின் விவசாய முறை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அவர்களின் நிலையான சமூக வன அமைப்பும் இதே போல் அமைந்துள்ளது. யுனெஸ்கோ அபதானி பள்ளத்தாக்கை அதன் "மிக அதிக உற்பத்தித்திறன்" மற்றும் "தனித்துவமான" சூழலியல் பாதுகாப்பிற்காக உலக பாரம்பரிய தளமாக சேர்க்க முன்மொழிந்துள்ளது.[3] இவர்களுக்கு 'திரீ மற்றும் 'மியோகோ' என்ற இரண்டு முக்கிய திருவிழாக்கள் உள்ளன . ஜூலை மாதம், திரீயின் விவசாய திருவிழாவானது அபரிதமான அறுவடை மற்றும் அனைத்து மனிதகுலத்தின் செழிப்புக்காகவும் பிரார்த்தனைகளுடன் கொண்டாடப்படுகிறது. பாகு-இத்து, தமிந்தா, பைரி நடனம் போன்றவை இவ்விழாவில் நிகழ்த்தப்படும் முக்கிய கலாச்சார நிகழ்ச்சிகளாகும்.[4] இன்றுவரை முன்னோர்களால் நட்பை நினைவுகூரும் வகையில் மியாகோ திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பு பிணைப்பு தற்போதைய உறுப்பினர்களால் அடுத்தடுத்த தலைமுறைக்கு முன்னோக்கி கொண்டு செல்லப்படுகிறது. இது கிட்டத்தட்ட மார்ச் நடுப்பகுதியிலிருந்து ஏப்ரல் நடுப்பகுதி வரை ஒரு மாதம் கொண்டாடப்படுகிறது. இந்த காலகட்டத்தில், உணவு மற்றும் பானங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
கிழக்கு இமயமலையின் முக்கிய இனக்குழுக்களில் ஒன்றான அபதனிகள், முறையான நில பயன்பாட்டு நடைமுறைகள் மற்றும் இயற்கை வள மேலாண்மை மற்றும் பாதுகாப்பு பற்றிய வளமான பாரம்பரிய சூழலியல் அறிவைக் கொண்ட ஒரு தனித்துவமான நாகரிகத்தைக் கொண்டுள்ளனர். பல நூற்றாண்டுகளாக முறைசாரா பரிசோதனை மூலம் இதைனை பெற்றனர். பழங்குடியினர் பல்வேறு திருவிழாக்கள், சிக்கலான கைத்தறி வடிவமைப்புகள், கரும்பு மற்றும் மூங்கில் கைவினைத் திறன்கள் மற்றும் புல்யன் எனப்படும் துடிப்பான பாரம்பரிய கிராம சபைகள் ஆகியவற்றுடன் தங்கள் வண்ணமயமான கலாச்சாரத்திற்காக அறியப்படுகிறார்கள். இது ஜிரோ பள்ளத்தாக்கை ஒரு வாழ்க்கை கலாச்சார நிலப்பரப்புக்கு ஒரு சிறந்த உதாரணமாக மாற்றியுள்ளது. அங்கு மனிதர்களும் சுற்றுச்சூழலும் ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கும் நிலையில் மாறிவரும் காலங்களிலும், பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் ஆன்மீக நம்பிக்கை அமைப்புகளால் வளர்க்கப்பட்டு வருகின்றன.[5]
-
ஒரு அபதானி பெண் கூடையுடன் வயலுக்குச் செல்கிறாள்.
-
திருவிழாவின் போது பாரம்பரிய உடையில் ஒரு அபதானி பெண்.
சான்றுகள்
[தொகு]- ↑ "A-11 Individual Scheduled Tribe Primary Census Abstract Data and its Appendix". www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 17 February 2021.
- ↑ Blackburn, Stuart H. (1 January 2016). Into the Hidden Valley: A Novel (in ஆங்கிலம்). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789385288906.
- ↑ "Unique Apatani impresses The Telegraph, 17 June 2005. URL last accessed 21 October 2006.
- ↑ NEZCC – North East Zone Cultural Centre பரணிடப்பட்டது 12 சனவரி 2007 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Centre, UNESCO World Heritage. "Apatani Cultural Landscape - UNESCO World Heritage Centre". whc.unesco.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 April 2017.
வெளி இணைப்புகள்
[தொகு]மேலும் படிக்க
[தொகு]- von Fürer-Haimendorf, Christopher. (1962) The Apa Tanis and Their Neighbors. New York: The Free Press of Glencoe.