அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
தமிழ்நாடு அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 7, 2021
சட்டப்பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 25, 2016
தொகுதிதிருவெறும்பூர் (சட்டமன்றத் தொகுதி)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 திசம்பர் 1977 (1977-12-02) (அகவை 46)
திருச்சிராப்பள்ளி
அரசியல் கட்சிதிமுக
துணைவர்ஜனனி
பெற்றோர்
வாழிடம்(s)திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா

அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Anbil Mahesh Poyyamozhi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் ஆவார்.

இளமையும் கல்வியும்[தொகு]

மகேஷ் பொய்யாமொழி, திருச்சிராப்பள்ளி ஈ. ஆர். மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் ஏப்ரல் 2001இல் திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியில் கணினி பயன்பாட்டியலில் முதுநிலைப் படிப்பை முடித்தார். பத்தாண்டுகள் பல்வேறு தகவல் தொழில்நுட்பத் துறைகளில் மென்பொருள் உருவாக்குநராகப் பணியாற்றிய பிறகு, திமுக கட்சியில் சேர்ந்தார்.

அரசியல்[தொகு]

பொய்யாமொழி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழியின் மூத்த மகனும், முன்னாள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) அமைச்சர் அன்பில் ப. தர்மலிங்கத்தின் பேரனுமாவார்.[1] இவரது மாமா அன்பில் பெரியசாமியும் ஓர் அரசியல்வாதி ஆவார். திமுக கட்சியின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நண்பர் ஆவார். இரு குடும்பங்களுக்கு இடையே பல தசாப்தங்களாக நீடிக்கும் நட்பு தாத்தா அன்பில் பி. தர்மலிங்கம், மு. கருணாநிதி காலம் தொடங்கி; தந்தையர் அன்பில் பொய்யாமொழி, மு.க.ஸ்டாலின்; இப்போது மகன்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் என மூன்று தலைமுறைகளாக அறியப்படுகிறது.

2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] திமுகவின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராகவும் உள்ளார்.[4]

2021ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற்ற 16வது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் திருவெறும்பூர் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் 2021 மே மாதம் ஏழாம் தேதி அன்று பதவியேற்றார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. அன்பில் மகேஷின் கிடு கிடு வளர்ச்சி... கிறுகிறுக்கும் திருச்சி திமுகவினர்!. விகடன் இதழ். {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help); Unknown parameter |Date= ignored (|date= suggested) (help)
  2. 15th Assembly Members List. Archived from the original on 2016-12-04. பார்க்கப்பட்ட நாள் 2020-09-29. {{cite book}}: Cite has empty unknown parameters: |Date= and |2= (help)
  3. Descendants shine in party of rising sun. The Hindu. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help); Unknown parameter |Date= ignored (|date= suggested) (help)
  4. திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமனம்: திமுக அறிவிப்பு. தி ஹிந்து தமிழ். {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help); Unknown parameter |Date= ignored (|date= suggested) (help)
  5. தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6