அதிமீயொலிவேகம்
அதிகூடிய மீயொலிவேகம் காற்றியக்கவியலில் அதிமீயொலிவேகம் எனக் குறிக்கப்படுகிறது. 1970-களிலிருந்து மாக் 5-க்கும் அதிகமான வேகங்களைக் குறிப்பிட இப்பதம் பயன்படுத்தப்படுகிறது.[1][2][3]
அதிமீயொலிவேகம் எனக் குறிக்கப்படுவதற்கான மாக் எண் வேறுபடுகிறது, ஏனெனில் காற்றின் பண்பு மாற்றங்கள் வெவ்வேறு வேகங்களில் வெவ்வேறாக இருக்கும்; பொதுவாக மாக் எண் 5 இவ்வகைச் சூழல்களில் பயன்படுத்தப்படுகிறது. மற்றொருவகையில், திமிசுத்தாரைகள் உந்துவிசையைத் தயாரிக்க இயலாத வேகம் அதிமீயொலிவேகம் எனக் குறிக்கப்படுகிறது.
சிறப்பியல்புகள்
[தொகு]அதிமீயொலிவேகத்துக்கான வரையறை குழப்பமாகவும் சில வேளைகளில் விவாதத்துக்குரியதாகவும் உள்ளது, ஏனெனில் மீயொலிவேகத்துக்கும் அதிமீயொலிவேகத்துக்கும் இடையில் ஏதும் தொடர்ச்சியற்ற தன்மை இருப்பதில்லை. மீயொலிவேகப் பகுப்பாய்வுகளில் புறக்கணிக்கப்படக்கூடிய பல பண்புகள் அதிமீயொலிவேகத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. அவ்வாறு முக்கியத்துவம் பெறும் அதிமீயொலிவேகத்தின் தனித்தன்மைகள்:
- அதிர்வுப் படலம்
- காற்றியக்க வெப்பமேற்றம்
- சிதறம் படலம்
- இயல்புவளிம விளைவுகள்
- குறைவான அடர்த்தியின் விளைவுகள்
- காற்றியக்க குணகங்களின் மாக் எண் சார்பற்ற தன்மை.
வெளியிணைப்புகள்
[தொகு]- NASA's Guide to Hypersonics
- Hypersonics Group at Imperial College பரணிடப்பட்டது 2012-10-11 at the வந்தவழி இயந்திரம்
- University of Queensland Centre for Hypersonics
- High Speed Flow Group at University of New South Wales
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Galison, P.; Roland, A., eds. (2000). Atmospheric Flight in the Twentieth Century. Springer. p. 90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-011-4379-0.
- ↑ "Specific Heat Capacity, Calorically Imperfect Gas". Glenn Research Center. NASA. பார்க்கப்பட்ட நாள் 2019-12-27.
- ↑ Anderson, John (2006). Hypersonic and High-Temperature Gas Dynamics (Second ed.). AIAA Education Series. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56347-780-7.