உள்ளடக்கத்துக்குச் செல்

அஜ்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அஜ்கார் (AJGAR) என்பது அகிர், ஜாட், குஜ்ஜர் மற்றும் ராஜ்புத் சாதிகளின் கூட்டணியாகும். இதனை முதன்முதலில் சர் சோட்டு ராம் என்பர் முன்மொழிந்தார். ராம் என்பவர் கிராமப்புற தலைவர் மற்றும் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் அரசியல்வாதி ஆவார்.[1]

இந்த கோட்பாடு பின்னர் 1970களில் சௌத்ரி சரண் சிங்கால் உத்தரபிரதேசத்தில் இந்திய தேசிய காங்கிரசின் ஏகபோகத்தை உடைக்க இவரது விவசாய (கிசான்) அரசியலின்[2] ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்பட்டது.[3] அகிர்கள், ஜாட் இனமக்கள், குஜ்ஜர்கள் மற்றும் ராஜபுத்திரர்கள் ஒரே சமூக மற்றும் இனக் குழுவைச் சேர்ந்தவர்கள்: சத்திரியர் குலம் எனும் இனக் கோட்பாட்டுக் குழுவினைச் சார்ந்தவர்கள் இவர்கள்.[4]

குறிக்கோள் மற்றும் நோக்கம்

[தொகு]

பிற்படுத்தப்பட்ட சாதியினர் உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் செழிப்பாக உள்ளனர் மற்றும் கிராம சமூக கட்டமைப்பின் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். தற்போது, இந்தியாவில் உள்ள பஞ்சாயத்து ராஜ், இந்த சாதிகளுக்கு இடையேயான திருமணங்கள் கலப்பு திருமணமாகக் கருதப்படாது என்று முடிவு செய்துள்ளது.[5] இவர்கள் சத்திரியர்கள் என்று அழைக்கப்படும் ஒற்றை அமைப்பின் கீழ் உள்ளனர். இவர்களின் சமூக நிலைமைகள் பெரும்பாலும் இவர்களின் பொருளாதார நிலைக்கு ஒத்திருக்கின்றன. பட்டியல் சாதியினரை விடச் சிறந்த மற்றும் உயர் சாதியினருக்கு நெருக்கமாக உள்ளனர். அஜ்கார் மாநிலத்தில் அரசியல் அதிகாரத்தைப் பெற உருவான அமைப்பாகும்.

அரசியல் வெற்றி

[தொகு]

மேற்கு உத்தரப்பிரதேசத்தில், பசுமைப் புரட்சியின் போது அஜ்கார் கூட்டணியின் செல்வாக்கும் அதிகாரமும் அதிகரித்தது.[3][6] ஆனால் அஜ்கார் அமைப்பு பரவலான ஆதரவைப் பெறத் தவறியது.[7] இருப்பினும், பின்னர் 1989-ல், வி.பி. சிங் மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் ராஜபுத்திரர்களையும் இணைக்க அஜ்கார் கூட்டமைப்பினை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.[8] 

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jaffrelot, Christophe (2003). India's Silent Revolution: The Rise of the Lower Castes in North India (in ஆங்கிலம்). Hurst. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781850656708.
  2. Jaffrelot, Christophe (2003). India's Silent Revolution: The Rise of the Lower Castes in North India (in ஆங்கிலம்). Hurst. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781850656708.
  3. 3.0 3.1 Price, Pamela (2012-07-26). Power and Influence in India: Bosses, Lords and Captains (in ஆங்கிலம்). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781136197987.
  4. Brij Kishore Sharma. Social, Economic and Political Contribution of Caste Associations in Northern India: A Case Study of All India Jat Mahasabha. Har Anand Publications, 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788124114124.
  5. Marriages among Ahir, Jaat, Gujjar and Rajput will not be "inter-caste"
  6. Lucia Michelutti (2002). "Sons of Krishna: the politics of Yadav community formation in a North Indian town" (PDF). London School of Economics and Political Science University of London. p. 34. பார்க்கப்பட்ட நாள் 20 May 2015.
  7. Shafiuzzaman (2003). The Samajwadi Party: A Study of Its Social Base, Ideology, and Programme. APH Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176484480.
  8. Rajendra Vora. Indian Democracy: Meanings and Practices. SAGE Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5150-019-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜ்கார்&oldid=3500694" இலிருந்து மீள்விக்கப்பட்டது