அங்குத்தி சுனை அருவி
Appearance
அங்குத்தி சுனை அருவி (Anguthi sunai water falls) என்பது தமிழ்நாட்டின், சவ்வாது மலை அடிவாரத்தில் உள்ளது.[1] சவ்வாது மலை வேலூர் மாவட்டத்துக்கு உட்பட்டதாக இருந்தாலும், இந்த அருவி அமைந்துள்ள சவ்வாது மலை அடிவாரம் கிருட்டிணகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியாகும். இது கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை - திருப்பத்தூர் சாலையில் சிங்காரப்பேட்டையில் இருந்து 7வது கி.மீட்டரில் அமைந்துள்ள கோவிந்தாபுரம் எனும் கிராமத்தில் இருந்து கிழக்கே செல்லும் சாலையில் 5வது கி.மீட்டரில் ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.[2]
சிறப்பு
[தொகு]இந்த இடம் ஜவ்வாது மலை அடிவாரத்தில் மக்கள் அதிக நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைந்துள்ளதால் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மிக்க இடமாக அறிவிக்கப்பட்டு வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.
சுற்றுலாப் பயணிகளால் பார்க்கப்படும் இடங்கள்
[தொகு]- சஞ்சீவிராயன் திருக்கோயில்
- திரௌபதி அம்மன் திருக்கோயில்
- முருகன் திருக்கோயில்
ஒளிப்படத் தொகுப்பு
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "TNFOREST :: Tamil Nadu Forest Department". www.forests.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
- ↑ Sabarish (2018-06-14). "காகங்களை அலற வைக்கும் அங்குத்தி அருவி ! பாண்டவர்களின் சாபமும், பின்னணியும்..!". https://tamil.nativeplanet.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
{{cite web}}
: External link in
(help)|website=