உள்ளடக்கத்துக்குச் செல்

Sridhar G/மணல்தொட்டி1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பந்தபுளி (Panthapuli) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தென்காசி மாவட்டத்தில் இருக்கும் சங்கரன்கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். திருநெல்வேலி-இராசபாளையம் நெடுஞ்சாலையில் இக்கிராமம் அமைந்துள்ளது.

2008 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடந்த கோவில் நுழைவுப் போராட்டத்தின் போது இந்த கிராமம் பரவலாகப் பேசப்பட்டது. அனைவரையும் கோவிலில் நுழைய அனுமதிக்க வேண்டும் என்பதற்காக நடைபெற்ற தலித்துகள் மற்றும் தலித்துகள் அல்லாதவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களாகும். இந்தக் காரணத்திற்காக பந்தபுலி கிராமத்தில் அமைந்துள்ள கண்ணநல்லூர் மாரியம்மன் கோவில் 2008 ஆம் ஆண்டு வரை மூடப்பட்டிருந்தது. இந்தியப் பொதுவுடைமை கட்சி (மார்க்சியம்) 2008 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று தலித்துகளுடன் சேர்ந்து கோவிலில் நுழையப் போவதாக அறிவித்தது. இதனால் சுமார் 400 தலித் அல்லாதவர்கள் கிராமத்தை விட்டு வெளியேறி அருகிலுள்ள மலைப்பகுதியில் குடியேறினர்.[1]

தலித்களுக்கு ஆதரவாக மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் கோயிலுக்குள் நுழைய அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதன் விளைவாக, தலித்துகள் தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறி கிராமத்திற்கு அருகிலுள்ள மலையடிவாரத்தில் குடியேறினர். 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி முதலமைச்சர் மு. கருணாநிதி பிறப்பித்த அரசாணையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஜி.பிரகாஷ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அசுரா கர்க் ஆகியோர் தலைமையில் தலித் மக்கள் தலித் அல்லாதவர்களின் எதிர்ப்பையும் கோபத்தையும் மீறி கோயிலுக்குள் நுழைந்தனர். அப்போது முதல் பூசைகள் ஒரு வழக்கமான அடிப்படையில் அனைவருக்குமாக செய்யப்படுகின்றன.[2][3][4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Curfew clamped in Panthapuli
  2. 10-yr fight: Dalits defy ban and enter temple பரணிடப்பட்டது 2008-12-27 at the வந்தவழி இயந்திரம்
  3. After a decade, Dalits defy Hindu ban, enter temple
  4. Temple gates thrown open to dalits after a decade
  5. Dalits offer prayers at Kannanallur temple
"https://ta.wikipedia.org/w/index.php?title=Sridhar_G/மணல்தொட்டி1&oldid=3900696" இலிருந்து மீள்விக்கப்பட்டது