உள்ளடக்கத்துக்குச் செல்

90377 செட்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
90377 செட்னா ⯲
ஹபிள் தொலைநோக்கி மூலம் செட்னா
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) மைக்கேல் பிறவுண்,
சாட் துருசீலியோ,
டேவிட் இராபினோவித்சு
கண்டுபிடிப்பு நாள் நவம்பர் 14, 2003
பெயர்க்குறிப்பினை
பெயரிடக் காரணம் செட்னா
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் 90377 செட்னா
வேறு பெயர்கள்2003 VB12
சிறு கோள்
பகுப்பு
திரான்சு-நெப்டியூனியப் பொருள்
பிரிந்த பொருள்
ஓர்ட் முகில் பொருள்
காலகட்டம்2010-சூலை-23 (யூநா 2455400.5)
சூரிய சேய்மை நிலை937 வாஅ (Q)
1.402×1014 மீ
140.2 Tm
0.0148 ஒஆ
சூரிய அண்மை நிலை 76.361 வாஅ (q)
1.142 3×1013 மீ
11.423 Tm
அரைப்பேரச்சு 518.57 வாஅ (a)
7.757 6×1013 மீ
77.576 Tm
மையத்தொலைத்தகவு 0.8527
சுற்றுப்பாதை வேகம் ≈11,400
சராசரி சுற்றுப்பாதை வேகம் 1.04 கிமீ/செ
சராசரி பிறழ்வு 358.01°
சாய்வு 11.927°
Longitude of ascending node 144.26°
Argument of perihelion 311.02°
சிறப்பியல்பு
பரிமாணங்கள் 995 ± 80 கிமீ
நிறை ≈1 × 1021 கிகி
அடர்த்தி 2.0 (அனுமானிப்பு) கி/செமீ3
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம்≈0.27 மீ/செ2
விடுபடு திசைவேகம்≈0.518 கிமீ/செ
விண்மீன்வழிச் சுற்றுக்காலம் 0.42 நா (10 ம)
எதிரொளி திறன்0.32 ± 0.06
வெப்பநிலை ≈12 கெ
நிறமாலை வகை(சிவப்பு) B-V=1.24; V-R=0.78[1]
தோற்ற ஒளிர்மை 21.1
20.5 (சுற்றுப்பாதை வீச்சு)
விண்மீன் ஒளிர்மை 1.83 ± 0.05

90377 செட்னா (90377 Sedna; சின்னம்: ⯲)[2] என்பது ஒரு மிகப் பெரும் திரான்சு-நெப்டியூனியப் பொருள். 2012 ஆம் ஆண்டுத் தகவல்களின் படி, இது சூரியனுக்கும் நெப்டியூனுக்கும் இடையில் உள்ள தூரத்தை விட மூன்று மடங்கு அதிக தூரத்தில் உள்ளது. நிறமாலையியலின் படி செட்னாவின் மேற்பரப்பு ஏனைய திரான்சு-நெப்டியூனியப் பொருட்களினது மேற்பரப்புகளை ஒத்துள்ளது, குறிப்பாக நீர், மெத்தேன், நைட்ரசன், மற்றும் தோலின்களைக் கொண்ட பனிக்கட்டி ஆகியவற்றின் கலவைகளாக உள்ளது. சூரியக்குடும்பத்தில் செவ்வாய்க் கோளுக்கு அடுத்து உள்ள சிவப்பு விண்பொருள் செட்னா ஆகும். செட்னா பல வானியலாளர்களால் குறுங்கோள் எனக் கருதப்பட்டாலும்,[3][4][5] பன்னாட்டு வானியல் கழகத்தின் 2006 முன்மொழிவுக்கு அமைய இது ஒரு கோளாக இருக்கவும் தகுதியுடையது,[6], ஆனாலும் வானியல் கழகம் இதனை ஒரு கோளாக அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.[7][8]

புளுட்டோ கோளின் நான்கில் மூன்று பங்கு அளவு கொண்ட இது சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. 2003 நவம்பர் மாதம் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவால் இக் கோள் கண்டுபிடுக்கப்பட்டது. கதிரவனுக்கும் பூமிக்குமுள்ள தூரத்தைப்போல் 90 மடங்கு அதிகத் தொலைவில் உள்ள இதன் நீள்வட்டப் பாதையில் ஒருமுறைச் சுற்றிவர 10500 ஆண்டுகளாகிறது. செவ்வண்ணத்திலிருக்கம் இக் கோள், ஒரு சிறு கோளேயாகும். இதன் விட்டம் 1800 கிலோ மீட்டராகும். இதன் பரப்பு வெப்பநிலை -240 செல்சியசு ஆகும். செட்னாவின் நீண்டபாதைக்குக் காரணம் புற விண்மீன்களின் கவர்ச்சி விசையாக இருக்கலாம். அல்லது பிற சூரியகுடும்பத்திலுள்ள கோளை, நமது சூரியன் கவர்ந்து இழுத்துக் கொண்டதாகவும் இருக்கலாம். [சான்று தேவை]

கண்டுபிடிப்பு

[தொகு]

டாக்டர் மைக் பிரவுன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு நவம்பர், 2003ம் ஆண்டில் சூரியக் குடும்பத்தின் இந்தப் புதிய வான்பொருளைக் கண்டுபிடித்தனர். இக்கோள் சூரியனிலிருந்து 1700 கோடி கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோளுக்கு முதன்முதலில் வழங்கப்பட்ட பெயர் 2003விபி12 என்ற குறியீடு ஆகும்.

பெயர் காரணம்

[தொகு]

செட்னா என்ற பெயர் கிரேக்க பெண் கடவுள்களில் ஒன்று. ஆர்டிக் பனிப் பிரதேச இன்யூட்(INUIT) மக்களின் கடல் தேவதையின் பெயரே செட்னா ஆகும். ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள உயிரினங்களை உருவாக்கியது இந்த பெண் தெய்வம் தான் என நம்பப்படுகிறது.

செட்னாவின் அமைப்பு

[தொகு]
The orbit of Sedna lies well beyond these objects, and extends many times their distances from the Sun
செட்னாவின் சுற்றுவட்டப் பாதை: செட்னா (சிவப்பு), வியாழன் (ஆரஞ்சு) சனி (மஞ்சள்), யுரேனஸ் (பச்சை), நெப்டியூன் (நீலம்) மற்றும் புளூட்டோ (பர்ப்பிள்)
  • செட்னா சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இது சூரியனின் வெப்பம் படாததால் உறைந்த நிலையில் காணப்படுகிறது. சுமார் 1180 முதல் 2360 கிலோமீட்டர் விட்டம் கொண்டது.

சுற்றுவட்ட பாதை

[தொகு]

செட்னா இதுவரை எந்த சூரிய குடும்ப கோள்களிலும் இல்லாத வினோதமான சுற்றுவட்ட பாதையை கொண்டுள்ளது.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Stephen C. Tegler (2006-01-26). "Kuiper Belt Object Magnitudes and Surface Colors". Northern Arizona University. Retrieved 2006-11-05.
  2. U+2BF2 ⯲. David Faulks (2016) 'Eris and Sedna Symbols,' L2/16-173R, Unicode Technical Committee Document Register.
  3. Barucci, et al. (2010). "(90377) Sedna: Investigation of surface compositional variation". The Astronomical Journal 140: 6. http://iopscience.iop.org/1538-3881/140/6/2095/. 
  4. Rabinowitz, Schaefer, Tourtellotte, 2011. "SMARTS Studies of the Composition and Structure of Dwarf Planets". Bulletin of the American Astronomical Society, Vol. 43
  5. Malhotra, 2010. "On the Importance of a Few Dwarf Planets". Bulletin of the American Astronomical Society, Vol. 41
  6. O. Gingerich (2006). "The Path to Defining Planets" (PDF). Harvard-Smithsonian Center for Astrophysics and IAU EC Planet Definition Committee chair. பார்க்கப்பட்ட நாள் 2007-03-13.
  7. "Planetary Names: Planet and Satellite Names and Discoverers". Gazetteer of Planetary Nomenclature. International Astronomical Union (Working Group for Planetary System Nomenclature). பார்க்கப்பட்ட நாள் 10 June 2012.
  8. NASA. "List of Dwarf Planets". Archived from the original on 2015-11-24. பார்க்கப்பட்ட நாள் 2012-06-09.
  9. "Mysterious Sedna". science.nasa.gov. nasa. பார்க்கப்பட்ட நாள் 6 August 2016.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=90377_செட்னா&oldid=3479754" இலிருந்து மீள்விக்கப்பட்டது