5-குளோரோமெத்தில்பர்பியூரால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
5-குளோரோமெத்தில்பர்பியூரால்
ChloromethFurfural.png
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
5-( குளோரோமெத்தில்)பியூரான்-2-கார்பால்டிகைடு
வேறு பெயர்கள்
5-(குளோரோமெத்தில்)-2-பியூரால்டிகைடு
இனங்காட்டிகள்
1623-88-7
ChemSpider 66800
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 74191
பண்புகள்
C6H5ClO2
வாய்ப்பாட்டு எடை 144.55 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

5-குளோரோமெத்தில்பர்பியூரால் (5-Chloromethylfurfural) என்பது C4H2O(CH2Cl)CHO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பியூரானின் 2- மற்றும் 5- நிலைகளில் முறையே பர்மைல் (CHO), குளோரோமெத்தில் (CH2Cl) குழுக்கள் பதிலீடு செய்யப்பட்டு இச்சேர்மம் உருவாகிறது. பிரக்டோசையும் இதர செல்லுலோசு வழிப்பெறுதிகளையும் ஐதரோகுளோரிக் அமிலத்தைப் பயன்படுத்தி நீர்நீக்கம் செய்து 5-குளோரோமெத்தில்பர்பியூராலைத் தயாரிக்கலாம். இதுவொரு நிறமற்ற நீர்மமாகும் [1]. இச்சேர்மத்தை ஒடுக்க வினைக்கு உட்படுத்தி 5-மெத்தில்பர்பியூராலையும், நீராற்பகுப்புக்கு உட்படுத்தி ஐதராக்சிமெத்தில்பர்பியூராலையும் பெற முடியும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. I. J. Rinkes "5-Methylfurfural" Org. Synth. 1934, volume 14, 62. எஆசு:10.15227/orgsyn.014.0062