4-பிப்பெரிடினோன்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பிப்பெரிடின்-4-ஓன் | |
| வேறு பெயர்கள்
4-பிப்பெரிடோன் அசினானோன் அசினான்-4-ஓன் | |
| இனங்காட்டிகள் | |
| 41661-47-6 | |
| ChemSpider | 31091 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| C5H9NO | |
| வாய்ப்பாட்டு எடை | 99.13 g·mol−1 |
| கொதிநிலை | 79 °C (174 °F; 352 K) |
| தீங்குகள் | |
| தீப்பற்றும் வெப்பநிலை | 91 °C (196 °F; 364 K) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
4-பிப்பெரிடினோன் (4-Piperidinone) என்பது C5H9NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பிப்பெரிடின் சேர்மத்தின் வழிப்பெறுதியாக இச்சேர்மம் கருதப்படுகிறது. வேதியியல் சேர்மங்களையும் மருந்து வகைப்பொருட்களையும் தயாரிக்குபோது ஓர் இடைநிலை வேதிப்பொருளாக 4-பிப்பெரிடினோன் பயன்படுத்தப்படுகிறது.
பிப்பெரிடோன்கள்
[தொகு]பிப்பெரிடோன் கட்டமைப்புக் கூட்டை பகிர்ந்து கொள்ளூம் சேர்மங்கள் அனைத்தும் பிப்பெரிடோன்கள் எனப்படுகின்றன. பெட்ரெங்கோ-கிர்ட்சுசெங்கோ பிப்பெரிடோன் தொகுப்பு வினை பிப்பெரிடோன்களை தயாரிக்க உதவும் தொகுப்பு வினையாகக் கருதப்படுகிறது. இவ்வினையில் ஓர் ஆல்க்கைல்-1,3-அசிட்டோன் டைகார்பாக்சிலேட்டுடன் பென்சால்டிகைடையும் ஓர் அமீனையும் சேர்த்து வினை நிகழ்த்தப்படுகிறது[1]. இந்த பலபகுதி வினை ஆண்ட்சுசெ பிரிடின் தொகுப்பு வினையுடன் தொடர்பு கொண்ட வினையாகும்.
இதையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ueber die Condensation von Aceton-dicarbonsäureestern mit Benzaldehyd unter Anwendung von Ammoniak P. Petrenko-Kritschenko, N. Zoneff Berichte der deutschen chemischen Gesellschaft Volume 39 Issue 2, Pages 1358 - 1361 1906 எஆசு:10.1002/cber.19060390234