4-நைட்ரோதொலுயீன்
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1-மெத்தில்-4-நைட்ரோபென்சீன்
| |
வேறு பெயர்கள்
p-நைட்ரோ தொலுயீன்
| |
இனங்காட்டிகள் | |
99-99-0 | |
ChemSpider | 13863774 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7473 |
| |
பண்புகள் | |
C7H7NO2 | |
வாய்ப்பாட்டு எடை | 137.14 g·mol−1 |
தோற்றம் | படிகத் திண்மம்[1] |
மணம் | வலிமையற்ற, அரோமாட்டிக்[1] |
அடர்த்தி | 1.1038 கி·செ.மீ−3 @ 75°செ [2] |
உருகுநிலை | 51.63 °C (124.93 °F; 324.78 K)[2] |
கொதிநிலை | 238.3 °C (460.9 °F; 511.4 K)[2] |
0.04% (20°செ)[1] | |
ஆவியமுக்கம் | 0.1 மி.மீ.பாதரசம் (20°செ)[1] |
-72.06·10−6 செ.மீ3/மோல் | |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 106 °C; 223 °F; 379 K [1] |
வெடிபொருள் வரம்புகள் | 1.6%-?[1] |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
1231 மி.கி/கி.கி (சுண்டெலி, வாய்வழி) 1960 மி.கி/கி.கி (எலி வாய்வழி) 1750 மி.கி/கி.கி (முயல் வாய்வழி)[3] |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
TWA 5 ppm (30 mg/m3) [skin][1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
TWA 2 பகுதி/மில்லியன் (11 மி.கி/மீ3) [தோல்][1] |
உடனடி அபாயம்
|
200 பகுதி/மில்லியன் [1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
4-நைட்ரோதொலுயீன் (4-Nitrotoluene) என்பது CH3C6H4NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். பாரா-நைட்ரோதொலுயீன் என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் வெளிர் மஞ்சள் நிறத்தில் ஒரு திண்மமாகக் காணப்படுகிறது. சாயங்கள் தயாரிப்பில் ஒரு முக்கியமான வேதிப்பொருளாக 4-நைட்ரோதொலுயீன் பயன்படுத்தப்ப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]தொலுயீனை நைட்ரசனேற்றம்[4] செய்வதன் மூலமாக 4-நைட்ரோதொலுயீன் மற்றும் இதனுடைய பிற மாற்றியன்களைத் தயாரிக்க இயலும்.
வினைகள்
[தொகு]எதிர்பார்க்கப்படும் அனைத்து வினைகளிலும் 4-நைட்ரோதொலுயீன் வினைபுரிகிறது. உதாரணமாக இது ஐதரசனேற்றம் அடைந்து பாரா- தொலுயிடினைக் கொடுக்கிறது.
பயன்கள்
[தொகு]4-நைட்ரோதொலுயீன் சல்போனேற்ற வினையில் ஈடுபட்டு 4-நைட்ரோதொலுயீன்-2-சல்போனிக் அமிலத்தைக் கொடுக்கிறது. (மெத்தில் தொகுதிக்கு அடுத்ததாக SO3H தொகுதி) பெருமளவில் தயாரிக்கப்படும் இச்சேர்மம் சிடைபீன் வழிபொருட்கள் தயாரிப்பில் முக்கியபங்கு வகிக்கின்றன. இவ்வழிபொருட்கள் சாயங்கள் எனப்படுகின்றன. 4,4'-டைநைட்ரசோ மற்றும் 4,4'-டைநைட்ரோ-2,2-சிடைபிண்டைசல்போனிக் அமிலங்கள் போன்றவை சில உதாரணங்களாகும்[4].
பாதுகாப்பு
[தொகு]சுண்டெலிகளிடத்தில் இச்சேர்மம் புற்றுநோயை உருவாக்குகிறது என்பதற்கான சில ஆதாரங்கள் உள்ளன[5].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0464". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ 2.0 2.1 2.2 Lide DR, ed. (2004). CRC handbook of chemistry and physics: a ready-reference book of chemical and physical data (85 ed.). Boca Ratan Florida: CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0485-7.
- ↑ "Nitrotoluene". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ 4.0 4.1 Gerald Booth "Nitro Compounds, Aromatic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH: Weinheim, 2005. எஆசு:10.1002/14356007.a17_411
- ↑ National Toxicology, Program (2002). "Toxicology and carcinogenesis studies of p-nitrotoluene (CAS no. 99-99-0) in F344/N rats and B6C3F(1) mice (feed studies)". National Toxicology Program technical report series (498): 1–277. பப்மெட்:12118261.