4-எத்தில்தொலூயீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
4-எத்தில்தொலூயீன்
P-Ethyltoluene.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-எத்தில்-4-மெத்தில்பென்சீன்
வேறு பெயர்கள்
பாரா-எத்தில்மெத்தில்பென்சீன், பாரா-எத்தில்தொலுயீன்
இனங்காட்டிகள்
622-96-8
பண்புகள்
C9H12
வாய்ப்பாட்டு எடை 120.20 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.861 கி/செ.மீ3
கொதிநிலை 162 °C (324 °F; 435 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

4-எத்தில்தொலூயீன் (4-Ethyltoluene) என்பது CH3C6H4C2H5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். எத்தில்தொலூயீன் பெற்றுள்ள மூன்று மாற்றியன்களில் இச்சேர்மமும் ஒரு மாற்றியனாகும். 3-எத்தில்தொலூயீன், 2-எத்தில்தொலூயீன் என்பவை மற்ற இரண்டு மாற்றியன்களாகும். மூன்று மாற்றியன்களுமே நிறமற்ற நீர்மங்களாகும். இவை சிறப்புமிக்க சில பாலிசிடைரீன்கள் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன.

தயாரிப்பும் பயன்களும்[தொகு]

தொலுயீனை எத்திலேற்றம் செய்து 4-எத்தில்தொலூயீன் தயாரிக்கப்படுகிறது.

CH3C6H5 + C2H4 → CH3C6H4C2H5

அமில வினையூக்கிகளால் இவ்வினை நிகழ்த்தப்படும் போது 2-எத்தில்தொலூயீன், 3-எத்தில்தொலூயீன், 4-எத்தில்தொலூயீன் என்ற மூன்று மாற்றியன்களின் கலவை உருவாகிறது. சிறுமாற்றம் செய்யப்பட்ட சியோலைட்டு வினையூக்கியினால் வினை நிகழும்போது தெரிவுசெய்யப்பட்ட விளைபொருளாக 4-எத்தில்தொலூயீன் உருவாகிறது[1].

4-எத்தில்தொலுயீனை, ஐதரசன் நீக்கம் செய்து 4-வினைல்தொலுயீன் தயாரிக்கப்படுகிறது[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Karl Griesbaum, Arno Behr, Dieter Biedenkapp, Heinz-Werner Voges, Dorothea Garbe, Christian Paetz, Gerd Collin, Dieter Mayer, Hartmut Höke "Hydrocarbons" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002 Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a13_227
  2. Denis H. James; William M. Castor (2007), "Styrene", Ullmann's Encyclopedia of Industrial Chemistry (7th ed.), Wiley, p. 1, doi:10.1002/14356007.a25_329.pub2
"https://ta.wikipedia.org/w/index.php?title=4-எத்தில்தொலூயீன்&oldid=2295520" இருந்து மீள்விக்கப்பட்டது