4,4’-தயோயிருவனிலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
4,4’-தயோயிருவனிலின்
4,4'-Thiodianiline.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
4-(4-அமினோபீனைல்)சல்பானில்லனிலின்
வேறு பெயர்கள்
பா,பா& முதன்மை;-தயோயிருவனிலின்; பிசு(4-அமினோபீனைல்) சல்பைடு; 4,4'-தயோவனிலின்
இனங்காட்டிகள்
139-65-1 Yes check.svgY
ChEBI CHEBI:82374 N
ChEMBL ChEMBL348856 N
ChemSpider 8435 N
EC number 205-370-9
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C19303 N
பப்கெம் 8765
UNII 6GGU990BQF Yes check.svgY
பண்புகள்
C12H12N2S
வாய்ப்பாட்டு எடை 216.3 கி/மோல்
தோற்றம் பழுப்பு-பழுப்பான ஊதா தூள் அல்லது ஊசிகள்
அடர்த்தி 1.26 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 464.8 °C (868.6 °F; 738.0 K) @ 760மிமீபாதரசம்
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 234.9 °C (454.8 °F; 508.0 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

4,4’-தயோயிருவனிலின் (4,4'-Thiodianiline) என்பது C12H12N2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரோமாட்டிக் அமீனாகக் கருதப்படும் இச்சேர்மம் மனிதர்களில் புற்றுநோயை உருவாக்கும் தன்மையைக் கொண்ட்தென ஊகிக்கப்பட்டுகிறது.

பண்புகள்[தொகு]

4,4’-தயோயிருவனிலின் எரியக்கூடியது அல்ல. ஆனால் வெப்பமடையும் போது இது சிதைவடைந்து எரிச்சலூட்டும் மற்றும் நச்சுப் புகையை உருவாக்கும். நுண்ணுயிர்க்கொல்லியான தாப்சோன் இதன் ஒப்புமைச் சேர்மமாகும்.

தயாரிப்பு[தொகு]

அதிகப்படியான அனிலினில் கந்தகம் பலமணி நேரம் கொதிக்கவைக்கப்படும்போது 4,4’-தயோயிருவனிலினின் மூன்று மாற்றியன்களான (1,1'; 1,4; 4,4') தயோயிருவனிலின்கள் உற்பத்தியாகின்றன. [1] 1871 ஆம் ஆண்டில் மெர்சு மற்றும் வீத் மற்றும் 1894 ஆம் ஆண்டில் கே.ஏ. ஆஃப்மான் ஆகியோர் இதே விளைபொருள்கள் மற்றும் இவற்றுடன் உடன் நிகழ்வு விளைபொருள்களை தயாரித்தனர் என்று அதே செய்தி இதழ் ஆவணப்படுத்தியுள்ளது. வினை கலவையுடன் ஈய ஆக்சைடு சேர்க்கும்போது 4,4’-தயோயிருவனிலின் உற்பத்தியை அதிகரிக்க முட்டியுமென நீட்சுகி மற்றும் போத்தாப் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. [2]

தற்போது அமெரிக்காவில் 4,4’-தயோயிருவனிலின் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

பயன்[தொகு]

சில வகையான நிறம் நிறுத்துச் சாயங்கள் தயாரிப்பில் 4,4’-தயோயிருவனிலின் ஒரு வேதியியல் இடைநிலையாகப் பங்கேற்கிறது. தாப்சோன் என்ற மருந்து தயாரிப்பில் இது பெரிதும் பயனாகிறது.

நச்சுத்தன்மை[தொகு]

4,4’-தயோயிருவனிலின் சால்மோனெல்லா வகை பாக்டீரியாக்களில் சடுதிமாற்ற பிறழ்வுகளை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வக எலிகள் மற்றும் சுண்டெலிகளில் கட்டிகளை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Hodgson, Herbert Henry (January 1924). "Direct sulphuration of aniline". J. Chem. Soc., Trans. 1924 (125): 1855–1858. doi:10.1039/CT9242501855. http://pubs.rsc.org/is/content/articlelanding/1924/ct/ct9242501855#!divAbstract. பார்த்த நாள்: 11 February 2016. 
  2. Nietzki, R; Bothof, Heinrich (1894). "The Understanding of Thioanilines". Reports of the German Chemical Society 27 (3): 3261–3263. doi:10.1002/cber.189402703119. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=4,4’-தயோயிருவனிலின்&oldid=3001833" இருந்து மீள்விக்கப்பட்டது