34டி/கேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
34டி/கேல்
34D/Gale
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்): வால்டெர் பிரடெரிக் கேல்
கண்டுபிடித்த நாள்: சூன் 7, 1927
வேறு குறியீடுகள்: 1927 L1, 1938 L1
சுற்றுவட்ட இயல்புகள் A
ஊழி: சூலை 1, 1938
ஞாயிற்றுச்சேய்மைத் தூரம்: 8.7 வா.அ
ஞாயிற்றண்மைத் தூரம்: 1.18 வா.அ[1]
அரைப்பேரச்சு: 4.94 வா.அ
மையப்பிறழ்ச்சி: 0.76
சுற்றுக்காலம்: 10.99 a
சாய்வு: 11.72 °
அடுத்த அண்மைப்புள்ளி: காணவில்லை

34டி/கேல் (34D/Gale) என்பது வால்டெர் பிரடெரிக் கேல் (சிட்னி, ஆத்திரேலியா) 1927 ஆம் ஆண்டு சூன் 7 ஆம் நாள் சூரியக்குடும்பத்தில் கண்டறிந்த ஒரு காலமுறை வால்வெள்ளி ஆகும். இரண்டாவது முறையாக இவ்வால்வெள்ளி 1938 ஆம் ஆண்டு சூரியக்குடும்பத்தில் காட்சியளிக்கும் என்று கேல் கணக்கிட்டார். ஆனால் அவரால் அதைக் காணமுடியவில்லை. மறு கணக்கீட்டை மேற்கொண்ட லெனாண்ட் இ கன்னிங்காம் அதே ஆண்டின் பின்னாளில் இவ்வால்வெள்ளியைக் கண்டார்.

கணக்கீடுகளின்படி 1949 ஆம் ஆண்டு மீண்டும் காட்சிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் இந்நட்சத்திரத்தைச் சூரியக்குடும்பத்தில் காண இயலவில்லை. இனிமேல் காணமுடியும் என்பதற்குரிய சாதகமான சூழலும் ஒருபோதும் காணப்படவில்லை. எனவே இவ்வால்வெள்ளியை இறந்த விண்மீன் என்ற வகையில் வகைப்படுத்தியுள்ளார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "JPL Small-Body Database Browser: 34D/Gale". Jet Propulsion Laboratory. 1938. 2010-02-28 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=34டி/கேல்&oldid=3230522" இருந்து மீள்விக்கப்பட்டது