3-ஐதராக்சி-2-நாப்தாயிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
3-ஐதராக்சி-2-நாப்தாயிக் அமிலம்
3-Hydroxy-2-naphthoesäure.svg
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3-ஐதராக்சிநாப்தலீன்-2-கார்பாக்சிலிக் அமிலம்
வேறு பெயர்கள்
3-ஐதராக்சி-2-நாப்தாயிக் அமிலம்
β-ஐதராக்சிநாப்தாயிக் அமிலம்
இனங்காட்டிகள்
92-70-6
Beilstein Reference
744100
ChEBI CHEBI:80383
ChEMBL ChEMBLCHEMBL229301
ChemSpider 6837
EC number 202-180-8
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C16212
பப்கெம் 7104
வே.ந.வி.ப எண் QL1755000
UNII C7S9D784HX
பண்புகள்
C11H8O3
வாய்ப்பாட்டு எடை 188.18 g·mol−1
தோற்றம் மஞ்சள் நிறத் திண்மம்
உருகுநிலை
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H312, H317, H319, H361, H371, H402, H412
P201, P202, P260, P261, P264, P270, P272, P273, P280, P281, P301+312, P302+352, P305+351+338, P308+313
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

3-ஐதராக்சி-2-நாப்தாயிக் அமிலம் (3-Hydroxy-2-naphthoic acid) C10H6(OH)(CO2H) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிமச் சேர்மமாகும். 2-நாப்தாலில் இருந்து வழிப்பெறுதியாகப் பெறப்படும் பல்வேறு கார்பாக்சிலிக் அமிலங்களில் இதுவும் ஒன்றாகும். அசோ சாயங்கள் மற்றும் நிறமிகளைத் தயாரிக்க உதவும் பொதுவான முன்னோடிச் சேர்மமாக 3-ஐதராக்சி-2-நாப்தாயிக் அமிலம் பயன்படுகிறது. 2-நாப்தாலை கோல்பே- இசிமிட் வினை வழியாக கார்பாக்சிலேற்றம் செய்து இது தயாரிக்கப்படுகிறது.[1]

நாப்தால் ஏ.எசு போன்ற பல அனிலைடுகள் தயாரிப்பில் 3-ஐதராக்சி-2-நாப்தாயிக் அமிலம் ஒரு முன்னோடிச் சேர்மமாகச் செயல்படுகிறது. இத்தகைய அனிலைடுகள் ஈரசோனியம் உப்புகளுடன் தீவிரமாக வினையில் ஈடுபட்டு ஆழ்ந்த நிற அசோ சேர்மங்களைக் கொடுக்கின்றன. இதேபோல 3-ஐதராக்சி-2-நாப்தாயிக் அமில அசோ பிணைப்பு வினைகள் பல சாயங்களைத் தருகின்றன.

3-ஐதராக்சி-2-நாப்தாயிக் அமிலத்திலிருந்து தயாரிக்கப்படும் பல சாயங்களில் இலித்தோல் ரூபைன் சாயமும் ஒன்றாகும். பிணைப்பு வினை ஐதராக்சி குழுவிற்கு அருகில் நிகழ்கிறது என்பதை கவனிக்கவும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Gerald Booth (2005). "Naphthalene Derivatives". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Wiley-VCH. DOI:10.1002/14356007.a17_009. .