அனிலைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனிலைடின் வேதிக் கட்டமைப்பு

அனிலைடுகள் (Anilides) என்பவை அனிலின் சேர்மத்தின் அசைல் வழிப்பெறுதிகள் வகை வேதிச் சேர்மங்களாகும். இவற்றை பீனைலமைடுகள் என்ற பெயராலும் அழைக்கிறார்கள்.

தயாரிப்பு[தொகு]

அசைல் குளோரைடுகள் அல்லது கார்பாக்சிலிக் நீரிலிகளுடன் அனிலின் வினைபுரிந்து அனிலைடுகளைக் கொடுக்கிறது. அனிலின் அசிட்டைல் குளோரைடுடன் (CH3-CO-NH-C6H5) வினைபுரிந்து அசிட்டனிலைடு உருவாதலை இதற்கு உதாரணமாகக் கூறலாம். உயர் வெப்பநிலைகளில் கார்பாக்சிலிக் அமிலங்களுடன் அனிலின் வினைபுரிந்து அனிலைடுகளைக் கொடுக்கிறது[1].

பயன்கள்[தொகு]

களைக்கொல்லிகளாகவும்[2] பூஞ்சைக் கொல்லிகளாகவும்[3] அனிலைடுகள் பயன்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Carl N. Webb (1941). "Benzanilide". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv1p0082. ; Collective Volume, vol. 1, p. 82
  2. "Anilide herbicides". Pesticide Target Interaction Database. East China University of Science & Technology. Archived from the original on 2018-06-24. பார்க்கப்பட்ட நாள் 2018-12-01.
  3. "Fungicides". Compendium of Pesticide Common Names. alanwood.net.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிலைடு&oldid=3542210" இலிருந்து மீள்விக்கப்பட்டது