3,5-டைநைட்ரோசாலிசிலிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
3,5-டைநைட்ரோசாலிசிலிக் அமிலம்[1]
3,5-Dinitrosalicylic Acid Structural Formulae V.1.svg
3,5-dinitrosalicylic-acid-3D-balls.png
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-Hydroxy-3,5-டைநைட்ரோபென்சாயிக் அமிலம்
வேறு பெயர்கள்
3,5-டைநைட்ரோசாலிசிலிக் அமிலம்
இனங்காட்டிகள்
609-99-4 N
ChEBI CHEBI:53648 Yes check.svgY
ChemSpider 11380 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C11319 Yes check.svgY
பண்புகள்
C7H4N2O7
வாய்ப்பாட்டு எடை &0000000000000228.116000228.12
தோற்றம் மஞ்சள் நிற ஊசிகள்
உருகுநிலை
கரையும்
organic solvents-இல் கரைதிறன் எத்தனால், டை எத்தில் ஈதர், பென்சீன் போன்றவற்றில் கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

3,5-டைநைட்ரோசாலிசிலிக் அமிலம் (3,5-Dinitrosalicylic acid) என்பது C7H4N2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். ஐயுபிஏசி பெயரிடு முறையில் இச்சேர்மத்தை 2-ஐதராக்சி-3,5-டைநைட்ரோபென்சாயிக் அமிலம் என்று அழைக்கின்றனர். அரோமாட்டிக் சேர்மமான இச்சேர்மம் ஒடுக்கும் சர்க்கரைகளுடனும் பிற ஒடுக்கும் மூலக்கூறுகளுடனுன் வினைபுரிந்து 3-அமினோ-5-நைட்ரோசாலிசிலிக் அமிலம் உருவாகிறது. 540 நானோமீட்டரில் இவ்வமிலம் வலிமையாக ஒளியை ஈர்க்கிறது. முதலில் சிறுநீரில் உள்ள ஒடுக்கும் பொருட்களைக் கண்டறிவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இம்முறை இப்பொழுது பரவலாக இரத்தத்திலுள்ள கார்போவைதரேட்டு அளவைக் கண்டறியவும் பயன்படுத்தப்படுகிறது[2]. ஆல்பா-அமைலேசுகளை மதிப்பிடவும் 3,5-டைநைட்ரோசாலிசிலிக் அமிலம் பிரதானமாகப் பயன்படுகிறது. எனினும், டைநைட்ரோசாலிசிலிக் அமிலத்திற்கென குறிப்பிடத்தகுந்த தனித்திறன் ஏதுமில்லாததால் நொதிகள் சார்ந்த முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன[3].

தயாரிப்பு முறை[தொகு]

சாலிசிலிக் அமிலத்தை நைட்ரோயேற்றம் செய்வதன் மூலம் 3,5-டைநைட்ரோசாலிசிலிக் அமிலம் தயாரிக்க முடியும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (87 ). Boca Raton, FL: CRC Press. பக். 3–318. ISBN 0-8493-0594-2. 
  2. Description of lab use from the Department of Chemical Engineering, University of Maryland
  3. Miller, Gail Lorenz (1959). "Use of dinitrosalicylic acid reagent for determination of reducing sugar". Anal. Chem. 31 (3): 426–428. doi:10.1021/ac60147a030. http://pubs.acs.org/doi/abs/10.1021/ac60147a030.