2022 குவாத்தமாலா நிலநடுக்கம்
நிலநடுக்க அளவு | 6.2 Mw |
---|---|
ஆழம் | 83.6 கிலோமீட்டர் |
பாதிக்கப்பட்ட பகுதிகள் | குவாத்தமாலா |
அதிகபட்ச செறிவு | V (Moderate) |
நிலச்சரிவுகள் | ஆம் |
2022 குவாத்தமாலா நிலநடுக்கம் (2022 Guatemala earthquake) மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலா நாட்டில் 2022 ஆம் ஆன்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதியன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது. மாற்றியமைக்கப்பட்ட மெர்கல்லி தீவிர அளவுகோலில் இந்நிலநடுக்கம் வலுவான உச்ச தீவிரத்தை அடைந்தது.[1] அதிகாலை குவாத்தமாலாவின் தெற்குப் பகுதிகளில் ஏற்பட்டது. தலைநகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சேதம் பரவலாக இருந்தது. பெரும்பாலும் வீடுகளில் விரிசல் விழுந்த சுவர்கள் மற்றும் பாறைகள் சரிந்தன.[2][3] மெக்சிகோ எல்லையில் உள்ள மலைப்பிரதேசமான சான்மார்கோசு மாகாணத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமானது. பலர் உயிரோடு புதைந்தனர்.[4]
கண்டத்தட்டு அமைப்பு
[தொகு]குவாத்தமாலாவின் கடற்கரையானது வட அமெரிக்க மற்றும் கோகோசு தகடுகளின் ஒன்றிணைந்த எல்லைகளுக்கு இடையே மத்திய அமெரிக்க அகழி என அழைக்கப்படுகிறது. இது வடக்கே மெக்சிகோ மற்றும் தெற்கே பனாமா வரை நீண்டுள்ளது. மறுபுறம், நாட்டின் வடக்குப் பகுதிகளில் மொட்டகுவா பெயர்ச்சிப் பிளவு உள்ளது. இது வட அமெரிக்க மற்றும் கரீபியன் தகடுகளின் இடது பக்க படுகைக் கிடை நகர்வுப்பிளவு ஒருங்கிணைப்பால் ஏற்படுகிறது. மொடகுவா பிளவானது வடக்கு குவாத்தமாலாவில் பல அழிவுகரமான நிலநடுக்கங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக 1976 ஆம் ஆண்டு குவாத்தமாலா நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக இருந்தது.[5][6]
நிலநடுக்கம்
[தொகு]நிலநடுக்கம் உள்ளூர் நில அதிர்வு முகமைகளின் கணக்கீட்டின்படி 6.8 ரிக்டர் அளவில் இருந்தது. ஆனால் பின்னர் அமெரிக்க புவியியல் புவியியல் ஆய்வு மூலம் ரிக்டர் அளவில் 6.2 ஆக மாற்றப்பட்டது. மாற்றியமைக்கப்பட்ட மெர்கல்லி தீவிர அளவுகோலில் இந்நிலநடுக்கம் V (மிதமான) உச்ச தீவிரத்தை அடைந்தது.
உயிரிழப்புகள்
[தொகு]நிலநடுக்கத்தால் தலைநகர் குவாத்தமாலா நகரிலும் அதைச் சுற்றியுள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்களின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. மலைகளுக்கு அருகில் உள்ள சாலைகளில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் தடைபட்டன. மிக்சுகோ நகரில் ஒரு பெண், குவெட்சல்டெனாங்கோ நகரத்தில் ஒரு ஆண் என இரண்டு பேர் இறப்பு அடையாளங் காணப்பட்டுள்ளது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "M 6.2 - 0 km SSE of Nueva Concepción, Guatemala". earthquake.usgs.gov. February 16, 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-02-16.
- ↑ "Reportan temblor de 6.8 grados este 16 de febrero de 2022 en Guatemala – Prensa Libre" (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-16.
- ↑ República.gt. "En imágenes: daños producidos por el terremoto en Guatemala de este 16 de febrero". República.gt (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-16.
- ↑ Correspondent, Vikatan. "கவுதமாலா நிலநடுக்கம்: 48 பேர் பலி". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2022-02-17.
- ↑ Aubouin, Jean; Stephan, Jean Francois; Renard, Vincent; Roump, Jacqueline; Lonsdale, Peter (1981-11-12). "Subduction of the Cocos plate in the Mid America Trench" (in en). Nature 294 (5837): 146–150. doi:10.1038/294146a0. பன்னாட்டுத் தர தொடர் எண்:1476-4687. https://www.nature.com/articles/294146a0.
- ↑ "USGS Earthquake Hazards Program » Historic Earthquakes". web.archive.org. 2006-04-21. Archived from the original on 2006-04-21. பார்க்கப்பட்ட நாள் 2022-02-16.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ Menchu, Sofia (2022-02-16). "Guatemala earthquake kills two, triggers landslides" (in en). Reuters. https://www.reuters.com/world/americas/guatemala-earthquake-triggers-rockfalls-uproots-trees-2022-02-16/.