2022 சவுதி அரேபியப் பெருந்திரள் மரணதண்டனை
2022 சவுதி அரேபியப் பெருந்திரள் மரணதண்டனை (2022 Saudi Arabia mass execution) 2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 12 ஆம் தேதியன்று நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் ஒரே நாளில் 81 பேருக்கு சவூதி அரேபியாவில் மரணதண்டனை வழங்கப்பட்டது.[1][2]
வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு விசுவாசம் மற்றும் மாறுபட்ட நம்பிக்கைகளை வைத்திருந்ததற்காக 7 ஏமன் மற்றும் 1 சிரிய மற்றும் 37 சவூதி குடிமக்கள் உட்பட சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் 81 பேர் இத்தண்டனைக்கு ஆளானார்கள். இந்த மரணதண்டனையே சமீபத்திய ஆண்டுகளில் சவூதியில் நிறைவேற்றப்பட்ட மிகப்பெரிய பெருந்திரள் மரணதண்டனை ஆகும். இந்த மரணதண்டனை எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பது பற்றிய குறிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.[3]
சவுதியின் நீதித்துறையை சீர்திருத்துவதற்காகவும், சவுதி அரேபியாவில் மரண தண்டனை பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்காகவும் இந்த பெருந்திரள் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என [4] சவுதி அரேபியாவின் மன்னரும் உண்மையான ஆட்சியாளருமான முகமது பின் சல்மான் அல் சவுத் கூறினார்.
பின்னணி
[தொகு]சவூதி அரேபியாவில் மரண தண்டனை என்பது சட்டப்பூர்வமான தண்டனையாகும். அங்கு மரணதண்டனை பொதுவாக வாளால் குற்றவாளியின் தலையை துண்டித்து அல்லது எப்போதாவது பொது இடத்தில் சுடுவதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது. குழந்தை உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையில் கையெழுத்திட்ட போதிலும்,[5] சவூதி அரேபியா குற்றத்தின் போது சிறார்களாக இருந்த குற்றவாளிகளையும் கூட 26 ஏப்ரல் 2020 வரை தூக்கிலிட்டது. சனவரி 2022 ஆம் ஆண்டு சனவரி மாதம் 12 சிறார்கள் உட்பட குறைந்தது 43 கைதிகள் மரணதண்டனைக்கு அச்சுறுத்தப்பட்டனர். [6]
சவுதி அரேபியப் பெருந்திரள் மரணதண்டனை
[தொகு]1980 ஆம் ஆண்டில் மக்காவில் உள்ள கிராண்ட் பள்ளிவாசல் போராளிகளால் கைப்பற்றப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, 63 எதிர்ப்பாளர்களுக்கு சவுதி அரசு தூக்கு தண்டனையை நிறைவேற்றியது. [7]
ஜனவரி 2, 2016 ஆம் ஆண்டு சனவரி 2 ஆம் தேதியன்று சவூதி அரேபியா நாட்டில் உள்ள 12 மாகாணங்களில் வாளால் தலை துண்டித்தும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் பயங்கரவாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட 47 பொதுமக்களுக்கு பெருந்திரள் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. [8]
23 ஏப்ரல் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதியன்று சவூதி அரேபியா 37 சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுதி குடிமக்களுக்கு பெருந்திரள் மரணதண்டனையை நிறைவேற்றியது. முக்கியமாக சித்திரவதையின் கீழ் பெற்ற வாக்குமூலங்கள் அடிப்படையில் பயங்கரவாதம் தொடர்பான கோரிக்கைகளுக்காக இத்தண்டனை அவர்களுக்கு வழங்கப்பட்டது.
நாட்டில் 6 மாகாணங்களில். மரணதண்டனைகள் தலை துண்டிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இரண்டு உடல்கள் பொதுக் காட்சிக்கும் வைக்கப்பட்டன. [9] மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் ஒருவரான அப்துல் கரீம் அல் அவாச்சு 16 வயதுடையவர். இருவர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்[10] என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 12 ஆம் தேதியன்று சவுதி அரேபியா அதன் நவீன வரலாற்றில் 81 குற்றவாளிகளுக்கு மிகப்பெரிய பெருந்திரள் மரணதண்டனையை நிறைவேற்றியது. [11]
எதிர்வினை
[தொகு]நாட்டின் நீதித்துறையை சீர்திருத்துதல் , சவுதி அரேபியாவில் மரண தண்டனை பயன்பாட்டை கட்டுப்படுத்தப்படும் என்று கூறும் மன்னரின் கொள்கைக்கு எதிரானது எதிரானது என்று மனித உரிமைகள் குழு நம்புகிறது. அவர்கள் மரணதண்டனைக்கு கண்டனம் தெரிவித்தனர். [12]
மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய சவூதி அமைப்பான அலி அடுபுசி, "இந்த மரணதண்டனை நீதிக்கு எதிரானது" என்று கூறுகிறது. [13] சவுதி அரேபியா பகிரங்கப்படுத்திய அளவுகோல்களின் கீழ் மரண தண்டனைக்கு தகுதியான குற்றச்சாட்டுகள் எதுவும் இவர்களிடம் இல்லை. சில மரணதண்டனைகள் உரிமைப் போராட்டங்களில் பங்கேற்றதற்காக மட்டுமே குற்றம் சாட்டப்பட்டன. [12] என்றும் இவ்வமைப்பு கூறுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Execution: ஒரே நாளில் 81 பேருக்கு மரணதண்டனை! சவூதி அரேபியாவின் கடுமையான தண்டனை..." Zee Hindustan Tamil. 2022-03-13. பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
- ↑ "சவுதியில் ஒரே நாளில் 81 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றம் - ஐபிசி தமிழ்". IBC Tamil. பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
- ↑ Benmansour, Mohammed. "Saudi Arabia executes 81 men in 24 hours". The Guardian.
- ↑ Benmansour, Mohammed. "Saudi court issues new death sentence against man arrested as juvenile". Reuters.
- ↑ "IBAHRI welcomes Saudi Arabia's move towards total abolition of the death penalty". International Bar Association. 1 May 2020. பார்க்கப்பட்ட நாள் 4 May 2020.
- ↑ "إعدامات السعودية 2021: اضطراب القرار السياسي – المنظمة الأوروبية السعودية لحقوق الإنسان".
- ↑ "Saudi Arabia executes 81 people in its largest mass execution". CBS News. பார்க்கப்பட்ட நாள் 2022-03-14.
- ↑ "Saudi Arabia Carries Out Largest Mass Execution Since 1980 – Eurasia Review". Eurasiareview.com. 2016-01-02. பார்க்கப்பட்ட நாள் 2016-01-06.
- ↑ Ben Hubbard (23 April 2019). "Saudi Arabia Executes 37 in One Day for Terrorism". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 24 April 2019.
- ↑ Rory Jones (23 April 2019). "Saudi Arabia Executes 37 Citizens, Drawing Fire from Rights Groups". The Wall Street Journal. பார்க்கப்பட்ட நாள் 24 April 2019.
- ↑ "Saudi Arabia puts 81 to death in its largest mass execution". MSN (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-12.
- ↑ 12.0 12.1 Yee, Vivian. "Saudi Arabia Puts 81 to Death, Despite Promises to Curb Executions". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 2022-03-12.Yee, Vivian. "Saudi Arabia Puts 81 to Death, Despite Promises to Curb Executions". The New York Times. Retrieved 2022-03-12.
- ↑ Gambrell, Jon. "Saudi Arabia puts 81 people to death in kingdom's largest mass execution in decades". Canadian Broadcasting Corporation. பார்க்கப்பட்ட நாள் 2022-03-12.