2020 அகமதாபாத் இரசாயன தொழிற்சாலை குண்டுவெடிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2020 அகமதாபாத் இரசாயன தொழிற்சாலை குண்டுவெடிப்பு
2020 Ahmedabad chemical factory blast
நாள்4 நவம்பர் 2020 (2020-11-04)
நேரம்11:22 a.m. IST
இடம்சாகில் இரசாயன கொதிகலன் தொழிற்சாலை நிறுவனம்
அமைவிடம்இரேவபாய் நானு காக்கா தோட்டம், குசராத்து, இந்தியா
இறப்புகள்12
காயமுற்றோர்9

2020 அகமதாபாத் இரசாயன தொழிற்சாலை குண்டுவெடிப்பு (2020 Ahmedabad chemical factory blast) இந்தியாவின் குசராத்து மாநிலம் அகமதாபாத்து நகரத்தில் நடந்த ஒரு வெடி விபத்தைக் குறிக்கிறது. 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதி ஒர் இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர்.[1]

வெடிவிபத்து[தொகு]

அகமதாபாத்தின் பிரானாவில் உள்ள பிப்லாச் சாலையில் உள்ள சாகில் நிறுவனம் என்ற இரசாயன தொழிற்சாலையில் காலை 11:22 மணியளவில் ஒரு குண்டுவெடிப்பு ஏற்பட்டது. வெடி விபத்து ஏற்பட்ட போது தொழிற்சாலைக்கு அடுத்துள்ள கனிகா டெக்சோ ஃபேப் என்ற நெசவு ஆலையில் சுமார் 30 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். கட்டடம் இடிந்து விழுந்ததில் பலர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். விபத்தில் 5 பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். நான்கு பெண்கள் உட்பட ஒன்பது பேர் எல்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அவர்களில் ஆறு பேர் ஆபத்தான நிலையில் இருந்தனர். [1] [2]

மீட்பு மற்றும் இழப்பீடு[தொகு]

தீயணைப்பு படையினர் 60 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 24 தீயணைப்பு வாகனங்களுடன் விபத்து நடந்த இடத்திற்கு வந்தனர். இந்திய நேரப்படி இரவு 8:00 மணி வரை மீட்பு பணிகள் நீடித்தன. [1]

கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 இலட்சம் (US$5,000) வழங்கப்படும் என குசராத் அரசு அறிவித்தது.[1]

விசாரணை[தொகு]

விசாரணைக்கு குசராத் முதல்வர் விசய் ரூபானி உத்தரவிட்டிருந்தார். விசாரணைக்காக இரண்டு பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது.[1] 5 நவம்பர் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று இரசாயன தொழிற்சாலையின் உரிமையாளர் மற்றும் தோட்டத்தின் இரண்டு உரிமையாளர்களுக்கு எதிராக குசராத்து காவல்துறையால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "12 killed in Gujarat after blast in factory leads to textile godown collapse". The Indian Express (in ஆங்கிலம்). 2020-11-05. பார்க்கப்பட்ட நாள் 2020-11-05.
  2. "Ahmedabad: At least 12 labourers were killed and nine injured in the blast at the chemical warehouse". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-11-04. Archived from the original on 5 November 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-11-06.
  3. "Ahmedabad blast: Factory owners negligent, say kin of deceased; FIRs against 3". The Indian Express (in ஆங்கிலம்). 2020-11-06. பார்க்கப்பட்ட நாள் 2020-11-06.